tag:blogger.com,1999:blog-17495650752888554702024-02-22T22:52:16.425+05:30vino's cafedareone's tech blogNarshttp://www.blogger.com/profile/12092127699230911741noreply@blogger.comBlogger35125tag:blogger.com,1999:blog-1749565075288855470.post-38864637598500588622011-07-06T11:21:00.002+05:302011-07-06T13:01:38.757+05:30கூகிள் பிளஸ் வருகை - மேலும் இணையத்தில் புரட்சிகள்<div style="clear: left; float: left; margin-bottom: 1em; margin-right: 1em;"><img border="0" height="200" src="https://blogger.googleusercontent.com/img/b/R29vZ2xl/AVvXsEi6b8EyhDD6YwiacB7hsBifBpj9rswY8KcYWdjOD6NrEz7UaqB-uh0YFz7PB0WI8Fj3rv7MyfITbfCB4MHSmUwZ_LgDPbQ0WAQk9yQJ7yeGz3NxJpBt4qdNram2fr8B7313vsFAooYhFf8/" width="200" /></div>சமூக வலைதளத்தில் சிறந்த நிரலாக்க வழிமுறைகளை, கட்டுமானங்களையும் கொண்டவை கூகிள் வேவ் மற்றும் முகநூல் மட்டுமே. கூகிள் வேவ் சரிந்ததும், முகநூல் உச்சத்திற்கு செந்ததும் கூகிள்-ற்கு பெரிய பின்னடைவை ஏற்படுத்தி உள்ளதாக இணைய உலக மேதைகள் கருதினர். எந்திரன் பாணியில், 'என்னை யாராலயும் அழிக்க முடியாது' என்கிற கர்ஜனையுடன் உலகம் முழுவதும் தனது வலைக்குள் கொண்ட கூகிள் நிறுவனம் முற்பட்டதான் விளைவே கூகிள் பிளஸ்.<br />
<br />
கூகிள் பிளஸ் தொடக்கம் மற்றும் அதனை தொடர்ந்து நடக்கும் மாற்றங்கள் குறித்து பதிவு எழுதினால், பல பதிவுகள் கேட்கும் என்பதால் ஒரே பதிவில் முடிந்த வரை சுருக்கமாக சொல்லி முடித்து விடுகிறேன். மேலும் பெரும்பாலானோருக்கு தெரிந்த 'யடா யடா'-வை தீவிர்த்துக் கொள்கிறேன்.<br />
<br />
கூகிள் தனது கூகிள் பிளஸ் வெளியிட்ட பிறகு, அதனை தனது பிரதான சேவையாக எடுத்துக்கொள்ள முடிவெடுத்துள்ளது. இதனை அடுத்து, மற்ற கூகிள் சேவைகளான மின்னஞ்சல், பதிவர், மற்றும் பிகாசா, ஒர்குட், மற்றும் தனது 'கிளவுட் கம்ப்யூட்டிங்' அடிப்படையில் வழங்கும் சேவையான 'டாகுமெண்ட்ஸ்' ஆகியவை கூகிள் பிளஸ் தரத்திற்கு மாற்றதித் துவங்கி உள்ளனர்.<br />
<br />
இதன் முதல் கட்டமாக கூகிள் காலண்டரை பிளஸ் தரத்திற்கு மெருகேற்றி உள்ளதை நாம் பார்திருப்போம். இரண்டாம் கட்டமாக தனது மிகப்பெரிய சேவையான கூகிள் தேடல். இதனையும் பிளஸ் தரத்திற்கு முன்னேற்றி உள்ளது. மூன்றாம் கட்டமாக மின்னஞ்சல் சேவை. ஜிமெயில் இடைமுகத்தினை பிளஸ் தரத்திற்கு மற்றும் பணி மும்முரமாக நடைபெற்று வருகிறது. ஜிமெயில் தீம்ஸ்-இல் இரண்டு புதிய தீம்ஸ்-இணை வைத்து ஓரளவு புதிய இடைமுகத்தினை பழக்கிக் கொள்ளலாம்.<br />
<br />
பிளாக்கர் பெயர் மாற்றம்?<br />
கூகிள் தனது சேவைகள் அனைத்தையும் பெயரளவிலும் தரம் உயர்த்த முடிவெடுத்துள்ள நிலையில், ப்ளாகர் தளம் 'கூகிள் பிளாக்ஸ்' என்றும், பிகாசா தளம் 'கூகிள் போட்டோஸ்' என்றும் பெயர் மாற்றம் செய்ய முடிவெடுத்துள்ளது. இந்த மாற்றத்திற்கு பின்னர், கூகிள் பிளஸ் உடன், பிகாசா போல பிளாக்கர் தளத்தினையும் இணைப்பதாகத் தெரிகிறது.<br />
<br />
அடுத்து, முகநூலின் ரியாக்சன்!<br />
பிளஸ் சேவை தொடங்கிய மறுநாளே மார்க் ஜக்கர்பர்க் அவர்கள் வரைவில் தானும் முக்கிய சேவை ஒன்றை தரப் போவதாக அறிவித்துள்ளார். இது முகநூலில் வீடியோ சாட் வசதியாகவோ அல்லது முகநூலின் அலைப்பேசிக் கருவி integration (தமிழ் சொல் பரிந்துரைக்கவும்) ஆகவோ இருக்கலாம் என்று எதிர்பார்க்கப்படுகிறது.<br />
<br />
முகநூலின் வெற்றிக்கு காரணமாகிய 'சமூக விளயாட்டுக்களை' பிளஸ்-இலும் விரைவில் கொண்டு வரப்படும் என்று கூகிள் அறிவுத்துள்ளது.<br />
<br />
மேலும், வர்த்தக நிறுவனங்கள் முகநாளின் 'பேஜ்' வசதியினை பயன்படுத்தி வரும் நிலையில், பிளஸ்-இலும் பிசினஸ் பேஜ்-இணை விரைவில் காண முடியும். இந்த பக்கங்கள் கூகிள் ஹாட்பாட் சேவையுடன் இணைத்து செயல்படுவதால், பயனாளர்கள் தங்களுக்கு வேண்டிய உணவகங்களோ, விடுதிகளோ, மருத்துவனைகளோ கூட அலைபேசி மூலம் தனக்கு அருகில் உள்ள இருப்பு விவரங்களை நண்பர்கள் பரிந்துரைகள் உட்பட அறிந்துக்கொள்ள முடியும். இதனால், முகநூல் பெரிதும் பாதிப்படைய நேரிடும் என்பது கிட்டதட்ட உறுதியாகி விட்டது.<br />
<br />
டிவிட்டர்:<br />
சமீபத்தில் ட்விட்டருடன் கூகிள் வைத்துக் கொண்ட உடன்படிக்கை காலாவதி ஆனதால், கூகிள் தேடலில் 'latest' மற்றும் 'realtime' ஆகியவை நீக்கப்பட்டுள்ளன. பிளஸ் பொது சேவை தொடங்கிய பிறகு, பிளஸ்-இன் பப்ளிக் பகிர்வுகள் கூகிள் realtime-ற்கு பயன்படும் என்று தெரிகிறது.<br />
<br />
பிளஸ் அழைப்பிதழ்:<br />
<br />
மின்னஞ்சல் மூலம் நமது நண்பர்களை அழைப்பதினை கூகிள் நிறுவனம் பிளாட்பார்ம் ஸ்டெபிலிட்டி கருதி நிறுத்தி வைத்துள்ளது. இருந்தும் உங்கள் நண்பர்களை நீங்கள் அழைக்கலாம். ஆம், உங்கள் நண்பர்களை உங்கள் நட்பு வட்டங்களில் சேர்த்து விட்ட பின்னர், அவர்களுடன் ஏதேனும் பகிரும் போது, அவர்களுக்கு மின்னஞ்சலில் அந்த பகிர்வு சென்றடையும். அந்த மின்னஞ்சலையே அவர் அழைப்பிதழாக பயன்படுத்தி இணைந்துக்கொள்ள முடியும்.<br />
<br />
கூகிள் பிளஸ் நட்பு வட்டாரங்கள் பற்றி விரைவில் காண்போம்.<br />
<br />
கூல் தானே? ம்ம்ம்... கூல்!<br />
<br />
<span class="Apple-style-span" style="background-color: white; color: red; font-size: xx-small; text-shadow:none;">இண்ட்லி-யின் ஓட்டளிப்புப் பட்டை இங்கே இயங்க வில்லை:( விரும்பினால் இண்ட்லி தளத்திற்கு சென்று ஓட்டளியுங்கள் நண்பர்களே </span>vinohttp://www.blogger.com/profile/03124692495591373673noreply@blogger.com3tag:blogger.com,1999:blog-1749565075288855470.post-12733401306660158142011-06-02T04:55:00.004+05:302011-06-02T05:15:41.919+05:30வந்தாச்சு கூகிளின் +1 பொத்தான்<div style="clear: left; float: left; margin-bottom: 1em; margin-right: 1em;"><img border="0" height="200" src="https://blogger.googleusercontent.com/img/b/R29vZ2xl/AVvXsEjTU05d9E40Nd0NehwGhPSbrl24sxgueznn9NUCb08h2APX8MMLdDB57zgJ4DRw0g6uBjxAeGdpGB__mAIFNRAFPXoORjRHh04nDHFNDr8BxJYwLCb9sp7lwIxnGWg9ITWp8BQJJ-OZDhc/s200/plusone.jpg" width="200" /></div>இணைய தேடல் பக்கத்தில் மட்டும் வெளியிட்டு சோதனை செய்துக்கொண்டிருந்த கூகிள், இப்போது வெவ்வேறு இணைய தளங்களுக்குள்ளும் பயன்படுத்தும் வகையில் நிரலாக்கிக் கொள்ளும் வசதி கொடுத்துள்ளது.<br />
கீச்சின் மறுபகிர்வு மற்றும் '#' குறி போலவும், முகநூளின் 'விருப்பம்' போலவுமான அமைப்புகள் இணையத்தில் உள்ள தகவல்களை, தனது முக்கியத்துவத்தின் படி முதன்மைப் படுத்த ஏதுவாக இருக்கும். இதனால், கீச்சு மற்றும் முகநூல் ஆகிய நிறுவங்கள் தங்கள் தளத்தில் விளம்பரங்களை முதன்மை வாரியாக தொகுத்து காட்சிபடுத்த முடியும். எடுத்துக்காட்டாக, முகநூளில் 'Icecream' பற்றி எதாவது உங்கள் நிகழ்நிலை புதுப்பித்தால், ஐஸ் கிரீம் தொடர்பான விளம்பரங்களோ அல்லது முகநூல்-பக்கங்களையோ உங்களுக்கு 'பரிந்துரை' பகுதியில் காட்சிப்படுத்தப்படும். ஒரு வேலை, ஐஸ் கிரீம் பற்றி பெரும்பாலானோர் தகவல் பரிமாறி இருந்தால், அங்கு ஐஸ் கிரீம், முகநூளின் முக்கிய தகவல் குரிச்சொல்லாகிறது. இதனால், விளம்பரங்களை வகைப்படுதிக்கொள்ள அவர்களால் முடியும். இதை கீச்சில் 'trend' என்று அழைக்கிறோம்.<br />
<br />
ஏற்கனவே, கூகிளை விருந்தினர்களை காலக்கணக்கில் வசப்படுத்தி வைக்க தவறி முகநூல் இந்த விசயத்தில் முதல் நிலைக்கு வந்தது நினைவிருக்கலாம். அதனினும் கவனிக்க வேண்டியது, சமீபத்தில், முகநூல் விளம்பரங்களின் வருமானம், கூகுளின் ஆட்சென்ஸ் விளம்பரப் பிரிவை முந்தி கூகிளை அதிர்சிக்குள்ளாக்கியது. ஏற்கனவே மேலே சொல்லிய முக்கியத்துவம் வாரியாக முதன்மைப் படுத்தப்பட்ட தகவல்கள் முகநூளில் இருந்து பிங் (bing) தேடல் இயந்திரத்திற்கு பயன்படுத்தப்படுத்துவதன், கூகிளின் கருவறையான தேடல் இயந்தரத்தின் மீது அடுத்த குறி வைத்துள்ளது மைக்ரோசாப்ட் - முகநூல் கூட்டணி.<br />
<br />
தனது நிலையினை தக்க வைத்துக்கொள்ள, தேடலரசன் கூகிள் கிச்சின் # குறி போலவும், முகநூளின் 'விருப்பம்' போலவும், தனக்கும் ஒரு சமூக-ஊடக ஆயுதம் தேவை என்பதை உணர்ந்தது. அதன் முயற்சியின் விளைவு தன கூகிள் +1. <br />
<br />
<b>கூகிள் +1 செயல் விளக்கம்:</b><br />
<br />
இணையத்தில் நாம் உலவும் போது, நமக்கு பிடித்தமான அல்லது நண்பரகளுடன் பகிரக்கூடிய தகவல்களைக் காண நேர்ந்தால், சட்டென இந்த பொத்தானை அழுத்தி விடுகிறோம். இதனால், அந்த இணையதளம்(அதாவது நீங்கள் படித்து அறிந்த பக்கத்தின் URL) உங்கள் நண்பர்களுடன் தற்சமயம் கூகிள் ப்ரோபைல் பக்கத்தில் மூலமாக பகிர்கிறீர்கள். அதே நேரம், கூகிள் தேடல் இயந்திரமானது எந்த இணையப்பக்கங்கள் அதிக அளவில் பகிரப்படுகிறதோ, அந்த இணையப்பக்கங்கள் கூகிள் தேடல் முடிவுகளில் முக்கியத்துவம் பெரும்.<br />
<br />
<b>இதை உங்கள் பக்கத்தில் இணைக்க?</b><br />
<br />
* முதலில் இதற்கான script குறியை உங்கள் <head> </head>பகுதியில் இணையுங்கள்.<br />
குறியின் மூல நிரல்:<br />
<br />
<blockquote><script type="text/javascript" src="http://apis.google.com/js/plusone.js"></script></blockquote><br />
<br />
* பின்னர் +1 பொத்தான் உங்களுக்கு எங்கு வேண்டுமோ அங்கே இணைத்துக்கொள்ளலாம்.<br />
+1 பொத்தான் மூல நிரல்:<br />
<br />
<blockquote><g:plusone></g:plusone></blockquote><br />
<br />
இணையதள வடிவமைப்பு மேதைகள் <a href="http://www.google.com/webmasters/+1/button/">இங்கு </a>சென்று மேலும் அறிக.<br />
இணையதள வடிவமைப்பு அதி-மேதாவிகள் <a href="http://code.google.com/apis/+1button">இங்கு </a>சென்று மேலும் அறிக.<br />
<br />
அப்படியே இங்கயும் ஒரு கிளிக் பண்ணிடுங்க <g:plusone></g:plusone><br />
<br />
என்னையும் மதித்து கேள்விகள் கேட்பதாக இருந்தால், கருத்துரைப் பகுதிக்கு வரவும்! ;)<br />
<br />
மீண்டும் பதிவிட வந்த மகிழ்ச்சியுடன் விடைபெறுகிறேன். சந்திப்போம் :)vinohttp://www.blogger.com/profile/03124692495591373673noreply@blogger.com2tag:blogger.com,1999:blog-1749565075288855470.post-64349835523020020872010-09-12T09:44:00.004+05:302010-09-14T03:25:32.670+05:30கீச்சுக்கு போட்டியாக மீமீ - களத்தில் குதிக்கிறது யாஹூ<div style="clear: left; float: left; margin-bottom: 1em; margin-right: 1em;"><img border="0" height="200" src="https://blogger.googleusercontent.com/img/b/R29vZ2xl/AVvXsEic25k-MJZuI-6Iyr3VQC1-h_XFsCQ5yLRJ_2AOVJaUXqCSzMqJEVB-dmWebw99mQWoRNhfpwp70RWlOqOgCWqAQFFBOVE83-4R2Mu11YH_yYgdL4dNIpw9km0Rf_nsjx1vKJokTv_02tUS/s1600/Untitled-1.jpg" width="200" /></div>WOW! என்றும் கூட இன்னும் சில மாதங்களில் இணைய உலகம் முழங்கிக் கொண்டிருக்க நேரலாம். சமூகவலைதளத்தில் கூகிளினைப் போலவே தொடர் தோல்வியைத் தழுவி வந்த யாஹூ நிறுவனம் இப்போது கையில் எடுத்துள்ள ஆயுதத்திற்கு <a href="http://meme.yahoo.com/">meme </a>என்று பெயரிட்டுள்ளது. குறுவலைச்சரம் என்று தன்னை அறிமுகப்படுத்திக்கொள்ளும் யாஹூ மீமீ உண்மையிலேயே டுவிட்டரைத் தூக்கும் திறன் படைத்தது என்றால் மிகையாகாது.<br />
<br />
<a name='more'></a><br />
இனையத்தில் நாம் கானும் கானொளி அல்லது நிழற்படங்கள் ஆகியவற்றை மற்றவர்களுடன் பகிர நினைத்தால் இதோ வந்துவிட்டது மீமீ. வலைச்சரமாகவே கூட பயன்படுத்தும் வகையில் எளிதாக வடிவமைத்துள்ளனர். பக்கம் தரவேற்றப்படுவதில் அலாதி வேகமும் எளிமையான வடிவமைப்பும் வெற்றிக்கு வழிவகுக்கும் என்று எதிர்ப்பார்க்கிறோம். முன்னமே பயனில் இருக்கும் Pulse-உடன் பகிர்வுத் தன்மைக்கான அமைப்புகளை பொதுவாக ஏற்றுக்கொள்கிறது. டுவிட்டரைப் போல ஃபால்லோவரை சேர்க்கலாம். நன்பர்களைத் தேடிப் பிடித்து ஃபால்லோ செய்யலாம்.<br />
<br />
<br />
<br />
<center><img src="https://blogger.googleusercontent.com/img/b/R29vZ2xl/AVvXsEjrB8gkEXtETwY7UFTrc_CsmekPUf-t6W5oKprm0EPint1YzH3NL-rtz75o80Nsq3wfQ6Th3NesGx1OuYOkVHr6EJspy-a6aiD8f_uOahtZi4PXw7-LmGJwfnorjiszP3K610HqgpOp58xk/" /></center><br />
சில மாதங்களுக்கு முன் ஸ்பெய்ன் நாட்டிலும் பின்னர் போர்ச்சிகீசு நாட்டிலும் சோதனை செய்த யாஹூ தற்போது ஆங்கிலததில் உலகம் முழுதும் பீட்டா-வாக சோதனை செய்கிறது. யாஹூவின் முயற்சி சிறப்பானதே எனினும் மிகவும் காலம் தாழ்ந்த ஒரு முயற்சி. அது சரி, மீமீ என பெயர் வைக்கக் காரணம் என்னவாக இருக்கும். கூகிள் மீ என்றால் இவர்கள் மீமீ என்கிறார்களே.<br />
<br />
~கருத்துக்களை சொலலுங்கள்~<br />
-வினோ =)Adminhttp://www.blogger.com/profile/15673905651610715628noreply@blogger.com1tag:blogger.com,1999:blog-1749565075288855470.post-90227853927288909612010-09-08T12:31:00.000+05:302010-09-16T09:03:36.624+05:30கூகிளின் DOODLE! திட்டம் யூகிக்கப்படுகிறது!!<div style="clear: left; float: left; margin-bottom: 1em; margin-right: 1em;"><img border="0" height="200" src="https://blogger.googleusercontent.com/img/b/R29vZ2xl/AVvXsEg7qi6yBO3J4GoQtvQmLTyLiICetNQD5Hg8r2LBd_z4ybJrZo9Wop9rj0wPrBYIElXKsjTq382sF3jGZzcogFgcjFi9DwDqNAVIWfb2XMVktLzpeGBtihbFbLC5nMtywKE8j895eAYmpB13/s200/bwg.jpg" width="200" /></div>நேற்று கூகிளின் UK டொமைனில் கூகிளின் இலட்சனை எவ்வாறிருந்தது என்று பகிர்ந்தோம். இன்று அதன் இலட்சனை சற்று வினோதமாக இருந்தது. இணையப்பக்கத்திற்கு சென்றதும் வண்ணமயமான கூகிள் இணையதளம் இன்று வண்ணமே இல்லாமல் இருந்தது. கூகிள் எனும் பெயர் வெறும் கருப்பு வெள்ளையில் தெரிந்தது. இன்றைய வடவமைப்பின் காரணம் யூகிக்கக் கூடியதாக இருக்கிறது.<br />
<br />
<a name='more'></a>வெறும் கருப்பு வெள்ளை நிறத்தில் இருந்த கூகிள் இலட்சனை மீது சுட்டெலி கொண்டு செல்லும் போதோ அல்லது அதனை சொடுக்கும் போதோ ஏதும் நிகழவில்லை. கருப்பு வெள்ளையாக வெளியிடக் காரணம் என்ன என்றும் ஏதாவது துனுக்கு கிடைக்கிறதா என்றும் கூகிளின் வலைப்பக்கத்தை நோட்டம் விட்டுக் கொண்டிருந்தேன். ஏதும் சிக்கவில்லை. எப்போதும் போல தேடல் செய்ய சென்றேன். தட்டச்சு செய்யும் போது தான் ஆச்சரியம். தட்டச்சு செய்ய செய்ய கூகிள் வண்ணம் பெற்று அருமையாக மாற்றம் கொண்டது. பின்னர் இதன் மூலம் கூகிள் என்ன கருத்துத் தெரிவிக்க விரும்புகின்றனர் என்பதை தெளிவாக உணர முடிந்தது.<br />
<br />
<br />
<center><img border="0" src="https://blogger.googleusercontent.com/img/b/R29vZ2xl/AVvXsEjgAdlIVhgdmwu8HJ8hqB0f6bNWsb3EO4Z0CgkjQ10JHRWGz9WdgPej7TU9AAhguzIC6BXLNdN2pLvatUmezNzkpdpE79WeRnjMVWkvGxU0nRu3A5qCcORum0JJi5RhoOv1ycDi3Zq-EMVU/" /></center><br />
<br />
கூகிள் தனது லைவ் சர்ச் அதாவது நிகழ் நேர தேடல் எந்திரத்தினை சில தினங்களுக்கு முன்னர் சோதித்துப் பார்த்ததைப் பலரும் அறிவோம். அறியாதவர்கல் கீழே உள்ள காணொளியைப் பாருங்கள். இந்த தொழில்-நுட்பம் மூலம், நாம் தட்டச்சு செய்ய செய்ய நாம் உள்ளிடும் வார்த்தையின் தேடல் முடிவுகள் நிகழ் நேரத்தில் தோன்றியவன்னம் இருக்கும்.<br />
<br />
<center><object height="385" width="480"><param name="movie" value="http://www.youtube-nocookie.com/v/Ty71OxyQKKc?fs=1&hl=en_US&rel=0"></param><param name="allowFullScreen" value="true"></param><param name="allowscriptaccess" value="always"></param><embed src="http://www.youtube-nocookie.com/v/Ty71OxyQKKc?fs=1&hl=en_US&rel=0" type="application/x-shockwave-flash" allowscriptaccess="always" allowfullscreen="true" width="480" height="385"></embed></object></center><br />
<br />
இதைத் தான் இன்றைய கூகிள் இலட்சனம் கூற விழைகிறது என்று நம்பலாம். வழக்கம் இதனையும் கூகிள் HTML5 பயன்படுத்தி செய்திருப்பதை நினைவில் கொள்கிறோம்.<br />
<br />
ஒருவேளை இது உண்மையாக இருப்பின், ஏற்கனவே கூகிளின் Image தேடல் எப்படி குறு-வரிசை இணையப் பயனாளர்களுக்க மேலும் கஷ்டத்தினைத் தர நேரும் என்பதில் கூகிள் எந்த அளவிற்கு முக்கியத்துவம் தருகிறது என்று தெரியவில்லை. பொருத்திருந்துப் பார்ப்போம்.Adminhttp://www.blogger.com/profile/15673905651610715628noreply@blogger.com3tag:blogger.com,1999:blog-1749565075288855470.post-29275521339956532072010-09-07T16:16:00.002+05:302010-09-07T22:53:03.161+05:30கூகிளின் புதிய HTML5 ஆக்கப்பூர்வமான இலட்சனை!<div style="clear: left; float: left; margin-bottom: 1em; margin-right: 1em;"><img border="0" height="200" src="https://blogger.googleusercontent.com/img/b/R29vZ2xl/AVvXsEjZEtmXrAGDhDUqzi8OvRofVyoHLKVdKw_U9I_ZvK5xDxYqXwbjsxqvxkfBJCzSZua4QyHIWD5M3-gwP_fXaQVKhxDgNtL4YEO8wrIP-fptouQdM5hI2CY9gsN5TEx2gLkjLXhm8C8ByQR4/" width="200" /></div>கூகிள் வலைப்பக்கத்தில் இன்று வடிவமைத்துள்ள இலட்சனை பெரும் வரவேற்பைப் பெற்றுள்ளது. கூகிள் தனது பிறந்த நாள் எதிர்வருதை அடுத்து இந்த இலட்சனை வடிவமைத்து இருக்கலாம் என்றுக் கருதப்படுகிறது. தற்சமயம், அதாவது நான் இந்த பதிவினை எழுதும் நேரம், இந்த இலட்சனை கூகிளின் <a href="http://www.google.co.uk/">UK</a> டொமைன்-இல் மட்டுமே காண முடிகிறது.<br />
<a name='more'></a>Flash, Silver Light போன்ற எந்த நிரல்களையும் பயன்படுத்தாமல் வெறும் HTML5 மற்றும் CSS3 வகை வலை வடிவமைப்பு முறையினை மட்டுமே பயன்படுத்தி செய்திருப்பது குறிப்பிடத்தக்கது. இந்த இலட்சனை interactive(தமிழ் சொல பரிந்துரைக்கவும்) ஆக செயல்படுகிறது. சுட்டெலியினை இலட்சனை அருகிலே கொண்டு செல்ல, இலட்சனையில் உள்ள மணிகள் சுட்டெலிக்கு அப்பால் சென்று திரை முழுது வலம் வந்து தனது இடத்தினை அடைககிறது.<br />
<br />
<br />
<center><img border="0" src="https://blogger.googleusercontent.com/img/b/R29vZ2xl/AVvXsEjZEtmXrAGDhDUqzi8OvRofVyoHLKVdKw_U9I_ZvK5xDxYqXwbjsxqvxkfBJCzSZua4QyHIWD5M3-gwP_fXaQVKhxDgNtL4YEO8wrIP-fptouQdM5hI2CY9gsN5TEx2gLkjLXhm8C8ByQR4/" /></center><br />
<br />
இதனால் கூகிள் என்ன சொல்ல வருகின்றனர் என்பது பெரும் குழப்பமாகவே உள்ளது.<br />
> பிறந்த நாளினை முன்னிட்டு செய்யப்பட்டுள்ளதா ?<br />
> புதிய குரோம்-இன் இயக்க சக்தியினை விளம்பரப்படுத்தவா ?<br />
> புதியதாக இரகசியமாக தயாரித்து வரும் சமூக வலைத்தளத்தினை வெளியிடும் காலம் நெருங்கி விட்டதா ?<br />
> HTML5 பற்றி பயனர்களிடையே விழுப்புணர்வு ஏற்படுத்தவா?<br />
<br />
எனப் பலக் கேள்விகளை எழுப்பி விட்டுள்ளது இந்த இலட்சனை<br />
<br />
சைடு டிஷ்:<br />
சமீபத்தில் யூடியூப் தளமும் தனது மீடியா இயக்கயினை ஃப்லாஷ் அல்லாமல் வெறும் HTML5 கொண்டே வடிவமைத்துள்லது. ஆனால், தற்போது யூடியூப் தளம் இந்த வசதியினை சோதனைக்காக மட்டுமே வழங்கிக் கொண்டிருக்கிறது. HTML5-இன் ஏறத்தாழ அனைத்து அம்சங்களையும் இயக்கும் வகையில் சமீபத்தில் கூகிள் நிறுவனம் தனது குரோம் இணைய உலாவியினை வெளியிட்டுள்ளதும் இங்கே குறிப்பிடப்படுகிறது.Adminhttp://www.blogger.com/profile/15673905651610715628noreply@blogger.com1tag:blogger.com,1999:blog-1749565075288855470.post-38646857942782451532010-09-05T02:14:00.001+05:302010-09-05T02:17:35.237+05:30அலைபாயும் கூகிள் Wave<div style="clear: left; float: left; margin-bottom: 1em; margin-right: 1em;"><img border="0" height="200" src="https://blogger.googleusercontent.com/img/b/R29vZ2xl/AVvXsEgu2jglHN-mluMXeR8iVM9KLgZAwTpwnHNpbpD8BBxraoL9a84Jyqr2x49cy5pBD7MUr4ixK2ktEOkbEtiixTIWgUi7UQgExBYbPthCfr_gcoFNOsd9TStGOlynU18LpuaLE5FgjgFJZI5I/" width="200" /></div>கடந்த 2009-ஆம் ஆண்டு பெரிய அளவில் இணைய உலகினைக் கலக்கியது கூகிளின் வேவ் எனும் ப்ரோஜக்ட். இணைய மேம்பாடடாளர்கள் இடையே பெரும் வரவேற்பினைப் பெற்ற வேவ் பல புரட்சிகர அம்சங்ளைத் தன்வசம் கொண்டிருந்தது. சமூக வலைத்தளங்களில் பின் தங்கி இருக்கும் கூகிள், அதே சமூக வலைதளங்களின் இடையே மிகவும் உபயோககரமான செயற்பாடுகள் மேற்கொள்ளுமாறு வடிவமைத்து வெற்றி அடைய எடுத்த பெரிய முயற்சி தான் இந்த வேவ்.<br />
<a name='more'></a><br />
கூகிள் வேவ் தளத்தில், நவீன முறையில் வேண்டிய வகையில் வடிவமைத்து மின்னஞ்சல் அனுப்ப இயலும், பலருடன் இனைந்து கலந்துரையாட முடியும், புகைப்படம், காணொளி, மற்ற இனையதளம் ஆகியவற்றை இனைத்துப் பகிர முடியும், நமது ப்ரோஜக்ட் முதலியவற்றின் செயற்பாட்டினை சரியாக Track(தமிழ் சொல் பரிந்துரை செய்க) செய்ய உதவும், மேலும் பல வேவ் அல்லாத மற்ற நிரல்களையும் வேவ் மூலம் பயன்படுத்த முடியும்.<br />
<br />
<table cellpadding="0" cellspacing="0" class="tr-caption-container" style="float: right; margin-left: 1em; text-align: right;"><tbody>
<tr><td style="text-align: center;"><a href="https://blogger.googleusercontent.com/img/b/R29vZ2xl/AVvXsEgu2jglHN-mluMXeR8iVM9KLgZAwTpwnHNpbpD8BBxraoL9a84Jyqr2x49cy5pBD7MUr4ixK2ktEOkbEtiixTIWgUi7UQgExBYbPthCfr_gcoFNOsd9TStGOlynU18LpuaLE5FgjgFJZI5I/" imageanchor="1" style="clear: right; margin-bottom: 1em; margin-left: auto; margin-right: auto;"><img border="0" height="200" src="https://blogger.googleusercontent.com/img/b/R29vZ2xl/AVvXsEhRXlHSAhxi52TQsz5ow3W9nwPc2nrrEv5QDXjUT6kjR3q9TRhpBGL60ks6TE34IzHgYBVITteGB6zLeCR7Gt7jgVJwsjHYxDcsXMcvghXH-9wLd4qdqDx0klyrb_e-TTL8P-lTrmmc3QLK/s200/Google_Wave_concurrent_edit.png" width="200" /></a></td></tr>
<tr><td class="tr-caption" style="text-align: center;">சொடுக்கி முழுதாகப் பார்த்தால்<br />
எவ்வாறு நிகழ் நேரத்தில் இணைவாக்கத்தில்<br />
ஈடுபட வேவ் உதவியது என்று அறியலாம்</td></tr>
</tbody></table>எல்லாவற்றையும் விட, வேவ்-இல் மிகவும் மகத்துவம் வாய்ந்த அம்சம் அன்பது, நிகழ் நேர இணைவாக்கத்தில் ஈடுபட முடிடும். இதற்கென புதியதாக ஒரு இணைப்பு முறை நிரல் (Protocol) ஒன்றினை பிரத்தியேகமாக உருவாக்கினர். மேம்பாட்டளர்களின் முன்னோட்டத்தின் பிறகு சில மாதங்களுக்கு முன்னர் தான் சோதனைப் பதிப்பு (Beta) வெளியானது. ஆனால், பயனர்களிடம் போதிய வரவேற்பு கிடைக்கவில்லை. சிலர் தொடர்ந்து வேவ்-இனை பயன்படுத்தி வந்தாலும் ஏறக்குறைய பெரும்பாலான இணையப் பயனாளர்கள் இதனை பயன்படுத்திப் பார்க்கக் கூட விருப்பம் காட்டவில்லை. பெரும் அளவில் பொருளாதார முதலீடு செய்த கூகிள் நிறுவனம், தற்போது வேவ் தளத்தினை மூடி விட முடிவு செய்துள்ளதாக அறிவித்துள்ளது.<br />
<br />
கூகிளின் இந்த திடீர் முடிவிற்குக் காரணமும் இருக்கின்றன. என்னைப் பொருத்த வரையில், இந்த வேவ் இணைப்பு முறை அடுத்த இணையத் தலைமுறைக்கு ஏற்றதாக இருந்திருக்குமே தவிர, தற்போதுள்ள பயனர்களைக் கவரும் வகையில் அது எளிதானதாக வடிவமைக்கப்படிவில்லை. கல்வி சார்ந்த பலருக்கு இந்த தளம் சோதனைப் பதிப்பிலேயே பெருமளவில் உதவி இருக்கிறது. ஆனால், ஏனையப் பயனர்களுக்கு வேவ்-இன் செயற்பாடுகள் பற்றி அறிய சிரமமாகவே இருந்திருக்கிறது. மேலும் இதற்கென நேரத்தை செலவிடவும் பெரும்பாலானோர் விரும்பவில்லை. இதன் விளைவாக கூகிள் நிறுவனம் இந்த முடிவினை எடுத்துள்ளதாக அறிவித்துள்ளது.<br />
<br />
தற்போது கூகிள், புதிய அறிக்கை ஒன்றினை அறிவித்துள்ளது. அதாவது, கூகிள் வேவ் தளத்தில் செய்றபாடுகள் முடக்கப் பட்டாலும் இந்த தொழில் நுட்பத்தினை தனது மற்ற சேவை தளங்களில் பயன்படுத்த முடிவெடுத்துள்ளது. முதல் படியாக இப்போதே கூகிள் ஆவணங்கள் தளத்தில் இந்த சேவையினை வழங்கி உள்ளனர். இதற்கு பயனாளர்களிடையே குறிப்பிடும் அளவிற்கு வரவேற்பும் கிடைத்துள்ளது. இது, வேவ் இணைப்பு முறையினை நிரலாக்கம் செய்த வல்லுனர்களுக்கு ஆறுதலையும் உற்சாகத்தினையும் அளித்துள்ளது. விரைவில், வேவ் பல கூகிள் தளங்களில் பயன்பாட்டிற்கு வரும்.<br />
<br />
மற்ற தளங்களில் வேவ் இணைப்பு முறையினைப் பயன்படுத்தும் போது இந்த நுட்பத்தினை 'Wave in a Box' என்று அழைக்கிறது.<br />
<br />
சைடு டிஷ்:<br />
<br />
1. கடந்த ஆகஸ்ட் மாதத்தில் 2 சமூக வலைதளத்தின் நிரலமைப்பு நிறுவனங்களான angstro மற்றும் Social Desk ஆகிய நிறுவனங்களை வாங்கி உள்ளது<br />
<br />
2. Slide எனப்படும் புகழ்ப்பெற்ற ஆவணப் பகிர்வு தளத்தினையும் சென்ற மாதத்திலேயே வாங்கி உள்லது.<br />
<br />
3. வேவ் தொழில்-நுட்பத்தினை மற்ற தளங்களில் பயன்படுத்த உள்ளது.<br />
<br />
4. சமீபத்தில் கூகிள் நிறுவனம் தனது தனி-நபர் காப்புக் கொள்கையினை சீர் திருத்தம் செய்துள்ளது.<br />
<br />
5. jaambool எனும் இணைய பணம் பரிமாற்ற தளத்தினையும் வாங்கி உள்ளது.<br />
<br />
6. இதன் மூலம் என்னத் யூகிக்க முடிகிறது என்பதினை பின்னூட்டத்தில் குறிப்பிடவும்!Adminhttp://www.blogger.com/profile/15673905651610715628noreply@blogger.com0tag:blogger.com,1999:blog-1749565075288855470.post-8133567828345968022010-08-29T03:14:00.000+05:302010-08-29T03:14:24.348+05:30போர் மூளும் சமூகவலைத் தளங்களும்! பயனர்களின் நேர விரயமும்!!<div style="clear: left; float: left; margin-bottom: 1em; margin-right: 1em;"><img border="0" height="200" src="https://blogger.googleusercontent.com/img/b/R29vZ2xl/AVvXsEg1NO7_VQNnUsaTng-cBkoNifs91RZZmgYmiHVagkkZpNetUQHJPe82ObZncsfn2-xr-Rqc4AyyCsOn4hMZl4FScSzz7pFYnP9Yowo_Sq6qcafd4qQDLpZr58B732sn1xu5NGNpYl-AX8k1/s400/facebookdecal-small.jpg" width="200" /></div>நீண்ட நாட்களாக ட்ராஃப்டில் வைத்திருந்த பதிவு. ஃபேஸ்புக் இந்தியாவின் முன்னனி என்ற அங்கீகாரம் பெற்றதைத் தொடர்ந்து இந்தப் பதிவினை முடித்துவிட முடிவு செய்துவிட்டேன். இதற்கு முன்னர் டுவிட்டரைப் பற்ற ஒரு பதிவு போட்டு மாபாதகம் செய்தேன். இப்போதும் அதனையே செய்கிறேன். பிடித்திருந்தால் share or like on facebook என்றுக் கேட்கவில்லை. பயனர்கள் விழிப்புடன் செயல்படுவது நல்லது. பவர் யூசர்ஸிற்கு பிரச்சனை இல்லாவிட்டாலும், 20.9 மில்லியன் பயனர்களும் பவர் யூசர்ஸ் அல்லர்.<br />
<a name='more'></a><br />
இணையத்தின் ஜாம்பவான் என்று அழைக்கப்படும் கூகிள் நிறுவனம், பல வகை இணையதளங்களில் முன்னனியில் வகித்தாலும் சமூக வலையமைப்புத் தளம் என்று வரும் போது எழ எழ சறுக்கி விழுகிறது.<br />
<br />
'இல்லாத ஊருக்கு இலுப்பைப் பூவும் சர்க்கரை' என்பது போல இந்தியாவில் இணையம் பூக்கப் போகும் காலத்தில் கூகிள் இந்த ஓர்கட் என்னும் சமூக வலைத்தளத்தினை கொண்டு வந்தது. அப்போது மின்னஞ்சல் சேவையில் புரட்சி செய்ததன் பயனாக பெரும்பான்மையான கூகிள் பயனர்கள் ஆர்குட்டில் இனைவதால் தனது பழைய நன்பர்களை எளிதில் தேடிக் கண்டுக்கொள்ளலாம் என ஓர்கட்டிற்கு படை எடுத்தனர் அத்தனை இந்திய இணையப் பயனர்களும். தன் நன்பர்களை தேடிக் கொடுத்த ஓர்கட், ஒத்த மனவலைக் கொண்ட மக்களினிடையே அறிவுப் பகிர்வு ஏற்பட குழுமங்களை அளித்ததும் அதற்கு ஒரு கூட்டல் (+ve).<br />
<br />
தனிக்காட்டு ராஜாவாக வலம் வந்துக்கொண்டிருந்த ஓர்கட், இனி இக்காடு தனிக்காடு இல்லை என்பதை உணர அதிகமாகவே அவகாசம் எடுத்துக்கொண்டது. இந்நிலையில் ஃபேஸ்புக் என்ற அகில உலக உச்ச நட்சத்திரம் வந்து நமது இந்திய உச்ச நட்சத்திரமான ஓர்கட்டினை சீண்டி எழுப்பியது. அப்படியும் விழித்துக்கொள்ள மறுத்துவிட்டது. எந்த நேரத்திலும் ஓர்கட் பயனர்கள் தம்மை விட்டு நீங்க மாட்டார்கள், கூகிள் தொடர்புகளுடன் பினைந்துள்ளதால் ஓர்கட் தவிர்க்க முடியாததாகிவிடும் என்றே எண்ணி இருக்க வேண்டும்.<br />
<br />
இந்நிலையில் ஓர்கட்டிற்கு விழுந்த முதல் அடி 'தனி-நபர் இரகசியம் காத்தல்' என்னும் கதாயுத தாக்குதல். இப்போது வரை இந்த அடியினை மறக்காமல் இருக்கிறது. ஆம், நீங்கள் ஓர்கட்டின் பயனர் எனும் பட்சத்தில், ஓர்கட்டில் நீங்கள் பகிரும் தகவல்களின் தனி-நபர் இரகசியம் காக்கப்படும் என்பதில் சந்தேகமே இல்லை.<br />
<br />
<b>ஃபேஸ்புக்கின் அசுர வளர்ச்சி:</b><br />
<br />
உண்மையாக ஃபேஸ்பிக்கினை யாரும் தேடிச்செல்லவில்லை. ஃபேஸ்புக் பல வகைகளில் ஓர்கட்டினைக் காட்டிலும் உயர்ந்ததல்ல என்றே சொல்வேன். அதிலும், தனி-நபர் இரகசியம் காக்கப்பட வேண்டுமெனில் பணம் தரக் கேட்கும் ஃபேஸ்புக் முன்பு கூகிளின் தனி-நபர் இரகசிய காப்புக் கொள்கை உயர்ந்த இடத்தில் உள்ளது. தனி நபர் இரகசியங்களைக் காப்பதில் அதிகம் கவணம் கொண்ட கூகிள் அதுவே தனக்கு எதிரான அம்பு என்பதையும் ஏற்கனவே அறிந்திருக்கலாம்.<br />
<br />
<i>ஃபேஸ்புக் எவ்வாறெல்லாம் இந்தியாவில் முதலிடம் தொட்டிருக்கும்?</i><br />
<br />
> பெரும்பாலான 2G மற்றும் 3G சேவை நிறுவனங்களுடன் கொண்டிருக்கும் டை-அப். இதனால், தங்களது பயனர்களுக்கு ஃபேஸ்புக்கினைப் பல நிறுவனங்கள் வலியுறுத்தின.<br />
<br />
> பெரும்பாலான அலைபேசி, கையடக்கக் கனினி, மடிகணினி ஆகியவற்றின் உற்பத்தியுடன் கொண்டிருக்கும் டை-அப். இதனால் அவ்வாறான எந்திரங்கள் ஆர்குட்டினை விட ஃபேஸ்புக்கினையே இயக்க எளிமையாக (எ.கா.: One touch fb launch) இயக்க வகை செய்கின்றன.<br />
<br />
> மற்ற வர்த்தக நிறுவனங்களும் ஃபேஸ்புக்கின் தனி நபர் இரகசியம் என்னும் ஓட்டையினை வைத்து பல தகவல்களைத் திரட்டத் தொடங்கின. நமக்கு AXE Dark பிடித்திருந்தால் உபயோகிக்கலாமே, அதை ஏன் நாம் ஃபேஸ்புக்கில் விரும்ப(like) வேண்டும். இதனால், நிறுவனங்களுக்கு இலவசமாக விளம்பரம் ஏற்படுகிறதல்லவா?<br />
<br />
> நேரம் கொல்லிகளான விளையாட்டுக்களும், இதர நிரல்களும் ஃபேஸ்புக்கின் வளர்ச்சிக்கு பெரிய அளவில் உதவி இருக்கின்றன (zynga போன்றவைகள்). விளையாட்டுகளில் பெரும்பாலான நேரம் செலவழித்து, இணையத் தகவல் பரிமாற்றத்தினை தேவை இல்லாமல் வீணடிக்கிறது என்பது எல்லோரும் அறிந்ததே.<br />
<br />
> பயனர்களின் விசயங்களை மூன்றாமவர்களான இணையமேம்பாட்டாளர்களுடன் பகிர்ந்துக் கொள்ளல். நன்பர் ஒருவர் தம்மைப் பற்றிக் கூறியுள்ளதாகவும், அதனை அறிந்துக்கொள்ள தனது கணக்கு விவரங்களைப் பகிரத் தேவை எனவும் சொல்லும் போது பெரும்பாலானோர் அதனை அறிய ஆவலோடு தகவல் இயக்க உரிமை அளித்துவிடுகின்றனர். இது போன்ற அழைப்புகள், ஃபேஸ்புக்கில் இல்லாதவர்களுக்கும் மின்னஞ்சல் மூலம் அனுப்பப்படுவதால் பலர் இதில் சேர முனைகின்றனர். பயன்? ஒன்றுமே இல்லை!<br />
<br />
<img border="0" src="http://www.sickfacebook.com/images/facebook_purpose.jpg" /><br />
<br />
> வர்த்தகம்! 'ஃபேஸ்புக் கிரெடிட்ஸ்' என்று தனக்கென்று இணையத்தின் பணமாற்றம் செய்யும் சேவையினை ஃபேஸ்புக் பயனர்களிடம் அளித்துள்ளது. விருப்பம் இருப்பவர்கள் பயன்படுத்தலாம். விருப்பம் அல்லாதோருக்கு எதற்கு 15 கிரெடிட்ஸ்களை வாரித்தர வேண்டும்?<br />
<br />
> யாரோ, யாரிடமோ, என்னவோ கேட்டால், அதற்கு அவர் என்னவோ பதில் அளித்துவிட்டுப் போகப்போகிறார். அதனை உலகம் அறியக் கொண்டுப் போய் சேர்ப்பது எனும் செயலிலேயே ஃபேஸ்புக்கின் தரம் குறைந்துவிட்டது.<br />
<br />
<i>ஓர்கட்டிற்கு இந்த நிலை எதனால்?</i><br />
<br />
> மேம்பாடுகள் வெகு மந்தமாக செயல்பட்டதால் பயனர்களுக்கு அலுத்துப் போய் இருக்கலாம். அதிலும் சில மேம்பாடுகள் பயனர்களுக்கு பிடிக்காதவையாக இருந்தன.<br />
<br />
> முழுக்க முழுக்க ASP தொழில் நுட்பப் பயன்பாட்டால் எளிதில் 'கனக்குக் களவாடல்' ஏற்பட்ட காலத்தில் ஓர்கட்டின் இயலா நிலை. பெரும்பாலும் குப்பை எனப்படும் SPAM தகவல்கள் பரப்பப்படுவதை கட்டுப்படுத்தப்படாத சூழ்நிலை.<br />
<br />
> மேலே ஃபேஸ்புக் கையாண்ட பல செயற்பாடுகளைக் கையாளாமை.<br />
<br />
<br />
வர்த்தகம் என்பதைத் தாண்டி, போதிய வருமானத்துடன் சேவை அளித்து வந்த ஓர்கட்டினை ஓரங்கட்டிவிட்டு வர்த்தகர்கள் எனும் திமிங்கலங்கள் வாழும் சமுத்திரத்தில் பயனிக்கும் படகுகளாகப் பயனர்கள் இருக்கின்றனர். தன்னைக் காப்பாற்றிக் கொள்ள, தன்னையும் திமிங்கலமாக மாற ஓர்கட்டும் சில நடவடிக்கைகள் எடுக்கத் துவங்கியுள்ளது. அவைப் பற்றி விரைவில் அலசுவோம்<br />
<br />
-வினோAdminhttp://www.blogger.com/profile/15673905651610715628noreply@blogger.com2tag:blogger.com,1999:blog-1749565075288855470.post-30473143322947914812010-08-08T14:00:00.003+05:302010-08-08T15:06:48.792+05:30புதிதாக XP நிறுவிய பின்னர்?<div style="clear: left; float: left; margin-bottom: 1em; margin-right: 1em;"><img border="0" height="200" src="https://blogger.googleusercontent.com/img/b/R29vZ2xl/AVvXsEhbP6AaTCm982N2_zpygmJQOw6VhP96Plq5fx5mlaQiLhQOYtgvqqLVSJOBAKYTogAjQHTdcfgJLJsl3A5a5kR0_gMmxT8xTCJgXD4xy5POqn7xFeRxE4GZzOBK57_gaq21mDY3zGpTuaR-/" width="200" /></div>எத்தனை இயங்குதளம் புதிதாக மனம் மயக்கும் வடிவமைப்பில் வெளிவந்தாலும் XP போல வரவே வராது. காரணம், எளிமையான இடைமுக வடிவமைப்பு, பாதுகாப்பு, மற்றும் மாற்றங்கள் செய்வதில் எளிமை ஆகிய அனைத்து அம்சங்களும் தன்னுடன் XP கொண்டுள்ளது தான். இவ்வளவு நாள் விண்டோஸ் செவென் பயன்படுத்தி வந்தேன். XP இயங்குதளத்தினைப் பிரிந்து இருக்க முடியாததால் மீண்டும் வந்து விட்டேன்.<br />
<a name='more'></a> குறைந்த பட்ச கணினி அமைப்பு தேவைகள் இருந்தால் போதும். வன்தட்டில் இதன் பிரிவிற்கு அதிக பட்சமாக 30 GB ஒதுக்கினாலே போதும்.<br />
<br />
நானும் இயங்குதளத்தினை நேற்று தான் நிறுவினேன். நிறுவிய பின்னர் செய்ய வேண்டிய வேலைகளை செய்யும் போது தான் தோன்றியது. பலரும் தமது கணினியில் புதிதாக இயங்குதளத்தினை நிறுவியவுடன் என்னை தொலைபேசியில் அழைத்து ஏதேனும் நிரல்கள் இருந்தால் தருமாறு கேட்பார்கள். என்னவென்ன மென்பொருட்கள் எல்லாம் வேண்டும் என்று கேட்டால் என்னிடம் இருக்கும் அனைத்தையும் கொண்டு செல்லக் கேட்பார்கள். அதாவது, அவர்களுக்கு என்னத் தேவை என்று அவர்களுக்கே தெரியாது.<br />
<br />
இயங்குதளத்தினை தான் பணம் கொடுத்து வாங்கிவிட்டோம். இதர மென்பொருட்களுக்கும் பணம் செலவழிக்க வேண்டியது இல்லை. பெரும்பாலும் பல இலவச மென்பொருட்கள் சன்மானம் கேட்கும் மென்பொருட்களிற்கு இனையாக வேலை செய்கின்றன.<br />
<br />
<b>சரி, இயங்குதளத்தினை நிறுவியாயிற்று, இப்போது என்ன செய்ய வேண்டும்?</b><br />
<br />
<br />
இப்போதே இனையத்துடன் இனைத்துவிடாதீர்கள். அதற்கு முன் கணினியினை பல பரிமானங்களில் தயார்படுத்திக்கொள்ளலாம்.<br />
<br />
முதலில், உஙகள் கணினியின் தலையாய கருவியான MotherBoard-ற்கான இயக்கி நிரல்களை நிறுவிக்கொள்ளுங்கள். முடிந்த வரையில் சமீபத்தய இயக்கிகளை தரவிறக்கிக்கொள்ளலாம்.<br />
<br />
அழகு. பார்க்க அழகாக இருந்தால் கணினியினை ஒரு அன்போடுப் பார்க்கத்தோன்றும். பலருக்கு ஏற்கனவே இருக்கும் XP சூழல் படித்திருக்கும். மேலும் அழகு வேண்டும் என்று என்னுபவர்கள், royale noir என்ற சூழலை <b><a href="http://www.istartedsomething.com/20061029/royale-noir/">தரவிறக்கி</a></b> உபயோகிக்கலாம். <a href="http://www.softpedia.com/get/System/OS-Enhancements/UXTheme-MultiPatcher.shtml"><b>UXTheme</b></a> என்ற நீட்சி இருந்தால் தான் நாம் அதிகப்படியான சூழல்களை நிறுவ முடியும் என்பதை கவனிக்க.<br />
<br />
இப்போது, அடிப்படை அமைப்புகள் பற்றிப் பார்ப்போம்.<br />
<br />
திட்டமுறையில் இனைய இனைப்புப் பெற்றவர்கள் தானாக இயங்குதளம் புதுப்பித்தலைத் தவிர்ப்பது நல்லது. அவ்வப்போது மைக்ரோசாஃப்ட் இனையதளம் சென்று Critical என்று குறிப்பிடப்பட்டிருக்கும் நிரல்களை மட்டும் நிறுவிக்கொள்ளலாம். இவை தான் பாதுகாப்பிற்கு மிகவும் அவசியாமான பாதுகாப்பு புதுப்பிப்புகள்.<br />
<br />
பின்னர் Autorun வசதியினை விரும்பாதவர்கள் அதனையும் அனைத்துவிடுங்கள். இணையத்தை அடுத்து பெரும்பாலும் வைரஸ் Autorun மூலமாகவே பரவகின்றன. அதனால் இந்த வசதி உபயோககரமாக இருப்பினும் தவிர்ப்பது நல்லதே.<br />
<br />
இப்போது, இலவசமாக கிடைக்கப்பெறும் மென்பொருட்களில் பயனுள்ளவை எவை என்றுக் காண்போம்.<br />
<br />
1. பெரும்பாலான மீடியா வகைகளை கையாளும் திறன் கொண்ட ஒரு மீடியா இயக்கி. நாம் பரிந்தரைப்பது <b><a href="http://www.videolan.org/vlc/">VLC </a></b>அல்லது<a href="http://www.kantaris.org/"> <b>Kantaris</b></a><b> </b>ஆகியன.<br />
<br />
2. ஆவணங்களை ஆக்க, திருத்த ஒரு நல்ல ஆவண திருத்தி: நாம் பரிந்துரைப்பது <b><a href="http://www.filehippo.com/download_openoffice">Open Office</a></b><br />
<br />
3. பாதுகாப்பிற்கு ஒரு Firewall மற்றும் ஒரு AntiVirus நிரல்கள்: நாம் பரிந்துரைப்பது <b><a href="http://www.personalfirewall.comodo.com/download_firewall.html">COMODO</a></b> firewall மற்றும் <b><a href="http://www.free-av.com/">Avira</a> </b>Antivirus.<br />
<br />
4. உயர்துல்லிய காணொளிகளைக் கண்டு மகிழ <b><a href="http://mirillis.com/en/products/splash.html">Splash</a></b> காணொளி இயக்கி போல ஏதும் இல்லை என சொல்லலாம்.<br />
<br />
5. <b><a href="http://www.filehippo.com/download_foxit">Foxit Reader</a></b> நி ரல் pdf கோப்புகளைத் திறந்துப் படிக்க.<br />
<br />
6. <span id="goog_1735671060"></span><span id="goog_1735671061"></span>படங்களையும், காட்சிகளையும் பார்க்க, திருத்த <b><a href="http://www.filehippo.com/download_irfanview">IrfanView</a></b><br />
<br />
7. இணையத்தில் மீடியா இயங்க : <b><a href="http://www.filehippo.com/download_shockwave">ShockWave</a>, <a href="http://www.filehippo.com/download_quicktime_alternative">QuickTime Alternative</a>, <a href="http://port25.technet.com/pages/windows-media-player-firefox-plugin-download.aspx">MediaPlayer</a><a href="http://www.filehippo.com/download_silverlight/">Silverlight</a>, <a href="http://www.filehippo.com/download_java_runtime">java</a></b> (Firefox), ஆகியன.<br />
<br />
8. <a href="http://www.filehippo.com/download_unlocker"><b>Unlocker</b></a> நிரல் எந்த கோப்பினையும் முடக்கி அழிக்க உதவும்.<br />
<br />
9. <a href="http://mediacoder.sourceforge.net/index.htm">MediaCoder</a> நிரல் காணொளிகளை அலைபேசிகளுக்கு தகுந்தவாறு மாற்றி அமைத்துக் கொள்ள உதவும்.<br />
<br />
10. <a href="http://www.7-zip.org/download.html">7ZIP</a> நிரல் WinRar நிரலுக்கு இனையான சேவைகளைத் தரும் ஒரு இலவச நிரல் ஆகும்.<br />
<br />
11.<a href="http://www.filehippo.com/download_daemon_tools/"> Daemon tools</a> lite : குறுந்தகடுகளை உருவாக்கவும், பிம்பங்களை உருவாக்கவும் உதவும்.<br />
<br />
12. தகவல்களை வேகமாக நகலெடுக்க, அல்லது நகர்த்த தேவை: <a href="http://supercopier.sfxteam.org/">SuperCopier</a>. நிகழ் நேரத்தில் சில கோப்புகளை இனைத்தல் அல்லது நீக்குதல் போன்ற பல அமசங்களைக் கொடுள்ளது. <br />
<br />
13. Firefox மற்றும் Opera ஆகிய உலாவிகள் பரிந்துரைக்கப்படுகிறது.<br />
<br />
Antivirus மற்றும் Firewall நிரல்களை நிறுவும் முன் மற்ற நிரல்களை நிறுவிக்கொள்வது நல்ல பழக்கம். மற்ற நிரல்களை நிறுவும் போது வேகமாகவும், தடை ஏதும் இல்லாமல் இருந்திட உதவும்.<br />
<br />
<b>செலவு செய்ய முடியும் என்றால் பின்வரும் உபயோகமான நிரல்களை வாங்கலாம்:</b><br />
<br />
1. Nero<br />
2. Microsoft Office<br />
3. G data Antivirus<br />
<br />
பதிவு எதிர்ப்பார்த்ததை விட சுறுக்கமாக முடிந்துவிட்டது. பயனுள்ளதாக இருக்கும் என நம்புகிறேன். தகவல்கள் எல்லோருக்கும் சென்றடைய உதவிடுங்கள். 'விருப்பம்' பட்டை பதிவிம் தொடக்கத்தில் உள்ளது.<br />
<br />
நன்றி!<br />
-வினோAdminhttp://www.blogger.com/profile/15673905651610715628noreply@blogger.com5tag:blogger.com,1999:blog-1749565075288855470.post-13517238087227475852010-07-22T09:55:00.001+05:302010-07-22T09:56:36.801+05:30ஃபயர்ஃபாக்ஸ் நீட்சிகள் பாதுகாப்பனவையா?<div style="clear: left; float: left; margin-bottom: 1em; margin-right: 1em;"><img border="0" height="200" src="https://blogger.googleusercontent.com/img/b/R29vZ2xl/AVvXsEgY1KHJTmywcmHLOYZlJgTP5w08xBEG0qO9ICoWcJZlK6Rw47TN5trUxTmAOX6yhp9R9ycRfUABqCod1Aj2xRMM9DOjPo7tNcV_8zBC69o-7hkesqXhxr8sQ7lkwaezpsz8G25ht_s9vC8z/s576/puzzle_lock.jpg" width="200" /></div>இணைய உலாவிகள் பல எண்ணிக்கைகளில் வெளிவந்த வண்ணம் இருந்தாலும் பெரும்பாலான பயனர்களுக்கு தங்கள் விரும்பத்தக்க உலாவி ஃபயர்ஃபாக்ஸ் உலாவியாகத் தான் இருக்கிறது. இதன் காரணம் ஃபயர்ஃபாக்ஸ் உலாவியின் வேகம் மட்டுமல்ல. விதவிதமாக நாம் விரும்பும் வகையில் விரும்பும் வசதியுடன் பயன்படுத்த மொசில்லா நிறுவனம் தரும் ’நீட்சிகள்’ வசதியும் தான். ஃபயர்ஃபாக்ஸ், நீட்சிகளின் பயனால் இணைய உலாவிகளிடம் இருந்து தம்மை வெகு தொலைவில் கொண்டுப் போய் நிறுத்திக் கொண்டது.<br />
<a name='more'></a><br />
இருந்தாலும் நமக்கு ஒரு சந்தேகம். ஃபயர்ஃபாக்ஸ் ஒரு திறந்து மூல நிரல் என்பது அனைவருக்கும் தெரிந்த ஒன்று. இதனால் யாரும், ஏன் நானும் நீங்களும் கூட நீட்சிகளை உருவாக்கி ஃபயர்ஃபாக்ஸ் பயனர்களுக்கு அளிக்க முடியும். அப்படி இருக்கும் போது, இது போன்ற நீட்சிகள் பயன்படுத்துவது பாதுகாப்பானது தானா என்பது தான் அந்த சந்தேகம். இதே சந்தேகம் நன்பர் ஜெயதேவா அவர்களுக்கும் தோன்றியது. கீ லாகிங் முறைப் பற்றி சென்ற இடுகையில் கூறியிருந்த போது அவர் இந்த சந்தேகத்தை நம்முடன் பகிர்ந்துக் கொண்டார்.<br />
<br />
ஜெயதேவா அவர்களின் கருத்து யாதெனில்,<br />
<br />
<blockquote>அன்புடையீர், நான் லினக்ஸ் மின்ட் 9 பயன்படுத்துகிறேன். [இணையத்தில் உலவ Firefox]. Firefox-க்கு நிறைய பயனுள்ள Add On-கள் கிடைக்கின்றன. முக்கியமாக Down them all [download manager]-ம், You Tube லிருந்து விடியோக்களை தரவிறக்கம் செய்ய Download helper-ம், Tool bar-களில் Google & Yahoo ஆகியவற்றையும் பயன்படுத்துகிறேன். இவற்றால் பிரச்சினை வருமா? Add On-களில் எவை ஆபத்தானவை என்று அறிந்து கொள்வது எப்படி? மேலும் வங்கி கணக்குகளுக்கு Mouse Click on virtual keyboard-மூலம் கடவுச் சொல்லை<br />
உள்ளீடு செய்யும் முறையும் உள்ளது, அதுவாச்சும் பாதுகாப்பானதா? //மென்பொருளின் கட்டமைப்பை உடைத்த அல்லது உடைக்கும் மென்பொருளை// இதற்க்கு சமமாக<br />
ஆங்கிலத்தில் என்ன என்று சொல்ல முடியுமா?</blockquote><br />
இவருக்காகவே இந்த பதிவினை இடப்படுவதால், அவரது கேள்விகளுக்கே அதிக முக்கியத்துவம் கொடுக்கலாம். அவரது கருத்துரையில் மூன்று கேள்விகள் உள்ளன<br />
<br />
1 ஃபயர்ஃபாக்ஸ் நீட்சிகள் பயன்படுத்துவது இணையத்தில் தனிநபர் விபரங்களைக் களவாடுவது உள்ளிட்ட பாதுகாப்பு பிரச்சனைகள் ஏற்படுமா?<br />
<br />
2 நீட்சிகளில் நம்பகத்தன்மை எவ்வாறு அறிந்துக்கொள்வது?<br />
<br />
3 அவ்வாறு தனிநபர் விபரங்களை உள்ளிட On Screen Keyboard பயன்படுத்தும் போதும் ஏதேனும் பாதுகாப்பு பிரச்சனைகள் ஏற்படுமா?<br />
<br />
4 கட்டமைப்பு உடைக்கப்பட்ட அல்லது உடைக்கும் மென்பொருள் என்பன யாவை?<br />
<br />
<br />
<b>ஜெயதேவா அவர்களே, இதோ உங்கள் கேள்விகளுக்கான விளக்கங்கள்:</b><br />
<br />
1. ஃபயர்ஃபாக்ஸ் நீட்சிகள் உலகின் பலவேறு மென்பொருள் மேம்பாட்டாளர்களால் நிரலாக்கப்படுகிறது. அவை அனைத்தையும் பரிசோதித்து, மூல நிரலாக்க வரிகளை சரி பார்த்த பின்பு பயனர்களுக்கு அளிக்கிர்றதா என்றால், வருத்தமளிக்கக்கூடிய பதில்,<br />
<br />
ஃபயர்ஃபாக்ஸ் நீட்சிகள் மொசில்லா நிறுவனத்தால் சரிப் பார்க்கப்பட்டு சான்று அளிப்பதில்லை.<br />
<br />
இதனால், எல்லா நீட்சிகளும் பாதுகாப்பற்றதென சொல்ல இயலாது. அதே போல, எல்ல நீட்சிகளும் பாதுகாப்பானவை என்றும் சொல்ல இயலாது. நீட்சிகளின் நம்பகத்தன்மைக் குறித்து மொசில்லா நிறுவனமும் எந்த வாக்குறுதியும் கொடுக்கவில்லை. உலகில், எங்கேயோ, யாராலோ உருவாக்கப்பட்ட நீட்சிகளைப் பயன்படுத்துவது ஆபத்தானது தான். மேம்பாட்டாளர்களில் பலர் கேடுவிளைவிக்கும் நிரலாக்க வரிகளை இனைத்தும் உருவாக்கி இருக்கலாம். இதனால் நீட்சிகள் நமக்காக இயங்குவதாக நாம் நினைத்துக் கொண்டிருக்கும் நேரத்தின் மேம்பாட்டாளருக்காகவும் இயங்க வாய்ப்புள்ளது.<br />
<br />
2. நீட்சிகளின் நம்பகத்தன்மையை எப்படி அறிந்துக் கொள்ளலாம்? இது கொஞ்சம் சிக்கலான விடயம் தான். ஓரளவிற்கு கணினி நிரலாக்கத்தில் ஞானம் உள்ளவர்களுக்கு இது சற்று எளிதாக இருக்கலாம். அதிகம் கணினி நிரலாக்கம் பற்றித் தெரியாதவர்கள், இணையத்தில் தேடுபொறிகளில் குறிப்பிட்ட நீட்சியினைப் பற்றி தேடி அறிந்துக் கொள்ளலாம். இல்லை, எனக்கு கணினி நிரலாக்கம் தெரியும் எனும் போது, தரவிறக்கம் செய்த .xpi என்ற கோப்பின் வகைக் குறியீட்டினை .zip என்று மாற்றிவிட்டு, திறந்துப் பார்த்து நிரலாக்கம் நியாயமான பாதுகாப்பான முறையில் வடிவமைக்கப்பட்டுள்ளதா என அறியலாம். மொசில்லா இணையதளம் அல்லாத மற்ற தளங்களின் சேவையகத்தில் இருந்து புதுப்பிப்பு செய்துக்கொள்ளும் நீட்சிகள் ஆபத்தானவை. கூகிள், யாஹூ டூல்பார் ஆகியவை மொசில்லா அல்லாத சேவையகத்தில் மூல நிரலினைக் கொண்டவை என்பதை அறிக. அது, பாதுகாக்கப்பட்ட, SSL சான்றுப் பெறாத HTTPS தகவல் பரிமாற்ற வழிமுறைகளைப் பின்பற்றாத நீட்சிகளாக இருப்பின், மேம்பாட்டாளர் என்ன தான் களவாடல் செய்யாமல் இருந்தாலும், தகவல்கள் பயனிக்கும் வழியில் களவாட வாய்ப்புள்ளன. கூகிள், யாஹூ ஆகிய டூல்பார் பாதுகாப்பானதாக இல்லை என இண்டியானா பல்கலைக்கழகத்தின் மாணவர் கிறிஸ்டோபர் என்பவர் ஆய்வு செய்து தெரிவித்துள்ளார். மேலும், பாதுகாப்பற்ற வழிமுறைகள் படி தகவல் அனுப்பப்படும் நீட்சிகள் சிலவற்றை அவர் பட்டியலிட்டுள்ளார். அவை,<br />
<br />
<blockquote>கூகிள் டூல்பார்<br />
யாஹூ டூல்பார்<br />
டெலீசியஸ் நீட்சி<br />
ஃபேஸ்புக் நீட்சி<br />
அமெரிக்கா ஆண்லைன் நீட்சி<br />
ஆஸ்க்.கொம் நீட்சி<br />
லின்க்ட்.இன் நீட்சி<br />
நெட்-கிராஃப்ட் நீட்சி<br />
ஃபிஷ்டான்க் நீட்சி</blockquote><br />
ஆகியனவாகும். மேலும் நம்பகத்தன்மை வாய்ந்த நீட்சிகள் என அவர் பட்டியலிடும் போது,<br />
<blockquote>நோ-ஸ்கிரிப்ட்<br />
கிரீஸ் மன்கீ<br />
ஆட்-பிளாக் பிளஸ்</blockquote><br />
ஆகிய நிட்சிகளை சேர்த்துக் கொள்கிறார். யூடியூப் டவுன்லோட் செய்வதே தவறான கையாடல். இதற்கு ஒரு நீட்சி வழங்குபவர் நேர்மையானவர் என்பதை எப்படி நம்ப முடியும்?<br />
<br />
எனக்கு யூடியூப் டவுன்லோடர் போன்ற நீட்சிகளும் வேண்டும், பாதுகாப்பான இணைய உலவும் வேண்டும் என்று எண்ணினால், Firefox safe mode திறந்து வங்கிக் கணக்கு போன்றவை மேற்கொள்ளலாம். கணக்கில் இருந்து வெளியேறிவிட்ட பின், சாதாரன பதிப்பினைப் பயன்படுத்திக்கொள்ளலாம். ஏனெனில், Firefox safe mode-ல் இயங்கும் போது எந்த நீட்சிகளும் இயக்கம் பெறாமல் முடக்கப் படுகிறது.<br />
<br />
3. On Screen KeyBoard மூலம் தகவல்களை உள்ளிடும் போது, நாம் எந்த விசையினையும் அழுத்தப் போவதில்லை என்பதால், கீ லாகிங் முறையில் எந்த பாதுகாப்பு பிரச்சனையும் இல்லை. ஆனால், கணக்குக் களவாடலில் இன்னும் சில முறைகள் உள்ளன. உதாரணத்திற்கு ஃபிசிங் முறைப்படி களவாடல் செய்யும் போது ஆபத்து உள்ளது. ஃபிசிங் தடுப்பு முறைகள் பற்றி ஒரு பதிவாக அலசலாம்.<br />
<br />
4. சன்மானம் கேட்கும் மென்பொருட்கள் தமது கட்டமைப்பில், சன்மானம் கொடுக்காமல் விட்டால் இயங்காமல் போகும்படி வடிவமைத்திருப்பார்கள். நாம் பணம் தராமல் அந்த நிரலினைப் பயன்படுத்த குறுக்கு வழிகளைக் கையாளும் போது, உள்கட்டமைப்பினை உடைத்துப் பயன்படுத்த முற்படுகிறோம். மூல நிரலை ஆராய்ந்து, கட்டமைப்பில் மேற்சொன்ன பகுதியினை மாற்றி அமைப்பதால் சன்மானம் கொடுக்கப்படாமலே மென்பொருளினை இயக்க முடியும். இதனை Cracking என்று அழைப்போம். ஒரு நிரலின் கட்டமைப்பை நாமே உடைத்துக் கொள்ள சில நிரலினை இணையத்தில் பெற்று அதனை இயக்குகிறோம். இந்த நிரல்களை patcher என்று அழைப்போம்.<br />
<br />
இடுகை ஜெயதேவா அவர்களுக்கு பயனுள்ளதாக இருக்கும் என நம்புகிறேன்Adminhttp://www.blogger.com/profile/15673905651610715628noreply@blogger.com2tag:blogger.com,1999:blog-1749565075288855470.post-5343950337365725002010-07-21T00:58:00.002+05:302010-07-21T01:01:58.035+05:30கீ லாகிங் - இணையக் கள்வர்களிடம் இருந்து காத்துக்கொள்வோம் - 1<div style="clear: left; float: left; margin-bottom: 1em; margin-right: 1em;"><img border="0" height="200" src="https://blogger.googleusercontent.com/img/b/R29vZ2xl/AVvXsEgW9SAOzSd83ynbEEp5Xgo9eeWu72-SOt2klAx8yzI0j6G_GhkGbDnwA35OKbowt-DInqJsyime5AnyME_TpwGvWSkiwZnbFMNfbOPEgI34TukgUvE0TOFluW40AmMzmL6re6juU1qOaL2O/s200/danger.jpg" width="200" /></div>இணையத்தில் நமது கணக்கைனை களவாடும் கள்வர்கள் அதிகமாகி வருகின்றனர். இந்த சமயத்தில் நமது கணக்கினைக் காத்துக்கொள்வது பற்றி நாம் தெரிந்துக் கொள்ள வேண்டும். கணக்குக் களவாடல் எந்தெந்த வழிகளில் நடக்கிறது என்று நாம் ஏற்கனவே இங்கே சொல்லி இருந்தோம். அங்கே சொல்லப்பட்ட வழிகளில் ஒன்றான கீ லாகிங் முறையைப் பற்றியும் அதைத் தடுப்பது பற்றியும் இங்கே பகிர்வோம்.<br />
<a name='more'></a><br />
<blockquote>கீ லாகிங் என்பது, கயவர்களால் நிரலாக்கப்பட்ட ஒரு மென்பொருள் எனலாம். இந்த மென்பொருளினை நமது கணினியில் இயங்க வைப்பது மூலமாக நாம் என்னவெல்லாம் நமது விசைப்பலகை மூலம் தட்டச்சு செய்கிறோமோ அவை எல்லாவற்றையுமே கயவர்கள் பெற்றுக் கொள்ள முடியும்.</blockquote><br />
கீ லாகிங் நிரல் ஒரு ஒற்றனைப் போல நமது கணினியில் செயல்படும். நான் இப்போது இந்த பதிவினை தட்டச்சு செய்துக்கொண்டிருக்கிறேன். ஒரு வேளை எனது கணினியிலேயே கயவர்கள் கீ லாகிங் நிரலினை இயங்க வைத்திருந்தால், நான் தட்டச்சு செய்வது அனைத்துமே அவரது மின்னஞ்சல் முகவரிக்கு சென்றுவிடும். அதே போல, கூகிள் கணக்கிற்குள் நுழைய நான் எனது கணக்கின் பெயரையும், எனது கடவுச்சொல்லையும் தட்டச்சு செய்யும் போது, அதுவும் அவரது மின்னஞ்சல் முகவரிக்கு சென்றுவிடும். சாவகாசமாக அவர் மின்னஞ்சலில் பெற்ற விபரங்களில் நமது பயனர் பெயரையும், கடவுச்சொல்லையும் அறிந்துக் கொள்வர். இப்படித் தான் கீ லாகிங் முறையில் கணக்குகள் களவாடப்படுகின்றன.<br />
<br />
<b>கீ லாகிங் நிரல் எனது கணினியில் எவ்வாறு இயங்க வைக்கின்றனர்?</b><br />
<br />
கயவர்கள் இந்த நிரலினை உங்கள் கணினியில் இயங்க வைப்பதெற்கென்று சில வழிகளைக் கையாளுகின்றனர்.<br />
<br />
நீங்கள் சட்டவிரோதமாக மென்பொருள் பயன்படுத்த முயலும் போது, மென்பொருளின் கட்டமைப்பை உடைத்த அல்லது உடைக்கும் மென்பொருளை தரவிறக்கம் செய்வோம். இது போன்ற செயல்களில் ஈடுபடும் போது, அந்த மென்பொருளுடன் களவாளிகள் இனைத்து வைத்திருக்கும் கீ லாகிங் நிரல் இயக்கம் பெற்று தகவலை கயவருக்கு அனுப்பத் தொடங்கி விடும். இதன்பின், அவர்களால் உங்கள் கணக்குகள் முடக்கப்படும் அபாயம் ஏற்படுகிறது.<br />
<br />
தோழர்கள் என்று சொல்லிக்கொண்டு பலர் நமக்காக என்றே சில மென்பொருட்களை மின்னஞ்சல் மூலம் அனுப்புவர் அல்லது, வலைப்பதிவு மூலமாகவும் பகிர்ந்துக் கொள்வர். உண்மையிலேயே அது தரமான நிரலாக இருந்தால், அதனைத் தரவிறக்கம் செய்யும் அதிகாரப்பூர்வ சேவையகத்தின் இனைப்பினைக் கொடுக்கலாம். அந்த மென்பொருளின் அதிகாரப்பூர்வ சேவையகத்தின் இனைப்பாக இல்லாமல் போனால், அந்த நிரலினை தரவிறக்கி இயங்கச் செய்வது ஆபத்தானதாகும். ஏனென்றால், இவர்களே உண்மையான நிரலின் போலி நிரல் தயார் செய்து விடுவர். அதாவதும் அந்த மென்பொருளுடன் தான் வைத்திருக்கும் கீ லாக்கிங் ஸ்கிரிப்டினையும் இனைத்து விடுவர். அதனை நாம் இயக்கிப் பார்க்கும் போது, நம்மை அறியாமல் அந்த ஸ்க்ரிப்ட் இயங்கி கீ லாகிங் பணியினைத் தொடங்கிவிடும்.<br />
<br />
நமக்கே தெரியாமல் நமது கணினியில் இந்த நிரல்களை நிறுவி விட்டு சென்றுவிடுவது.<br />
<br />
<b>கீ லாக்கிங் - இயக்க முறை:</b><br />
<br />
நிரலாக்க மொழிகளில், Event Listener என்று ஒரு பகுதி உண்டு. இதன் பணி என்னவென்றால், பயனராகிய நாம் ஏற்படுத்தும் நிகழ்வுகளை கவணித்துக் கொண்டு இருக்கும். இந்த நிகழ்விற்கு இந்த கட்டளை என்று நிரலாக்கம் செய்யும் போது அந்த கட்டளைகள் குறிப்பிட்ட நிகழ்வின் போது இயக்கம் பெறுகிறது. இதனைக் கொண்டு வெகு சுலபமாக எந்தெந்த விசைகளை நாம் அழுத்துகிறோம் என்பதை கவனித்துப் பெற்றுக்கொள்ளலாம். இந்த Event Listener முறையினைப் பயன்படுத்தும் போது அது, கணினியின் இயங்கு தளத்தின் ’உதவியாளரான’ kernel-இடம் இருந்துப் பெறுகிறது. கெர்னல் என்பது, வன்பொருட்கள் இடும் கட்டளைகளை மென்பொருளிற்கு அதாவது இயங்கு தளத்திற்கும் புரியும் வகையில் மொழிப் பெயர்த்துக் கொடுக்கிறது. கெர்னல் கொடுக்கும் இந்த தகவலைத் தான் கீ லாகிங் நிரல்கள் பெற்றுக்கொள்கின்றன.<br />
<br />
<b>கீ லாகிங் ஆவதைத் தடுக்க என்ன செய்ய வேண்டும்?</b><br />
<br />
கீ லாகிங் நிரல்களைப் பொதுவாக கீ-லாகர் (Key-Logger) என்று அழைக்கப்படும். இந்த கீ லாகர் நிரல்கள் உள்ளனவா என்பதை Anti-Spyware மற்றும் ஒரு சில வைரஸ் நீக்கம் செய்யும் மென்பொருட்கள் உதவுகின்றன. இந்த உதவி நமது கணினியுடன் இருக்கும் நட்பு ரீதியான உதவி அன்றி உத்தரவாத வழி அல்ல. நாம் கீ லாகர் நிரலினைத் தடுக்க பலவேறு வழிமுறைகளைக் கையாளலாம்.<br />
<br />
1. டாஸ்க் மானாஜர் சென்று நம் கணினியில் எந்தெந்த நிரல்கள் இயன்குகின்றன என்பதை ஒரு முறை சரிப் பார்த்துக்கொள்வதைப் பழக்கமாகவே கொண்டிருக்க வேண்டும். முதன்முறை சரி பார்க்கும் போது, பல நிரல்கள் எதற்காக இயங்குகின்றன என்று குழப்பம் ஏற்படும் பட்சத்தில் தேடுபொறிகளில் இந்த நிரலின் பெயரைக் கொண்டு தேடி அதன் பயன் பற்றி அறிந்துக் கொள்ளலாம்.<br />
<br />
2. ரன் கட்டளைப் பிறப்பியினை திறந்து, 'msconfig' என்று தட்டச்சு செய்து System Configuration எனும் நிரலினைத் திறந்து அதில் எந்தெந்த சேவைகள் கணினியில் இயக்கம் பெறுகின்றன என்பவற்றை சரி பார்த்திக் கொள்ள வேண்டும். இதனையும் தினசரி பழக்கமாகக் கொண்டிருக்க வேண்டும்.தேவை இல்லை எனத் தோன்றும் நிரலின் பெயரில் முன் உள்ள ‘சரி’ எனும் குறியீட்டினை நீக்கிவிட்டால் போதுமானது.<br />
<br />
3. மிக சமீபத்தில் புதுப்பித்த/உருவாக்கிய கோப்புகள் உள்ளதா எனத் தேடிப்பாருங்கள். ஏனெனில், கீ லாகிங் ஆகிறதென்றால் விபரங்களை ஒரு கோப்பில் வைத்திருக்கும் அல்லவா?<br />
<br />
இதனையும் மீறி சில கீ லாகர்கள் இயக்கம் பெற்றுவிடுகின்றன. இல்லையென்றால், இவற்றை செய்ய கடந்த ஒரு வார காலம் மறந்து விட்டோம், இப்போது கீ லாகர் இயங்கிக் கொண்டிருக்கிறது. ஆனால், அது இயங்கிக் கொண்டிருப்பதௌ நமக்குத் தெரியாது எனும் நிலை சில சமயம் வரலாம். யாவர்க்கும் நிகழும் ஒன்று தான்.<br />
<br />
இதற்காக இந்த பதிவில் ஒரு பயனுள்ள நிரலினைப் பயன்படுத்துமாறு அறிவுறுத்துகிறேன். அந்த நிரலின் பெயர் கீ-ஸ்க்ரேம்பிளர் (Key Scrambler).<br />
<br />
கீ ஸ்கிரேம்பிளர் நிரல், கீ லாகர் நிரலினை ஏமாற்றி பொய்யான வபரங்களை சேகரிக்க வைக்கிறது.<br />
<br />
நம் கணினியில் கீ லாகர் இயங்கிக் கொண்டிருக்கிறது என்பதை அறியாமல் சில சமயம் நமது பயனர் பெயர், கடவுச்சொல் ஆகியவற்றை உள்ளிடுவோம். கீ லாகரும் தகவலை கயவர்களுக்கு அனுப்பிவிடும். இதனைத் தவிர்க்க நாம் கீ லாகரை ஏமாற்றப் போகிறோம். இன்னும் சொல்ல்ப் போனால், ஒட்டு மொத்த கணினியையே ஏமாற்றப் போகிறோம்.<br />
<br />
கீ ஸ்கிரேம்பிளர் நிரல் நம் கணினியின் கெர்னலுடன் ஒரு சிறப்பு நட்பு கொள்கிறது. இதனால், கெர்னலும் தன் நன்பன் கேட்டுக்கொள்வதற்கினங்க தனது கடமையை மீறி ஒரு உதவி செய்கிறது. அதாவது, கீ ஸ்கிரேம்பிளர் நிரல், கெர்னலிடம் தனக்கு மட்டும் புரியும் வகையில் மொழிமாற்றம் செய்யச் சொல்லிக் கேட்க, கெர்னலும் அதனைச் செய்தும் கொடுத்துவிடுகிறது. இதனால், கீ லாகர் நிரல்களுக்கு புரியாத சிதைக்கப்பட்ட விபரங்களே சென்றடையும். இங்கே தான் கீ லாகர் நிரல் ஏமாற்றப்படுகிறது. கீ ஸ்கிரேம்பிளரோ தனக்குப் புரிந்த மொழினை மீண்டும் மொழி மாற்றம் செய்து நாம் தட்டச்சு செய்யும் இடத்தில் சரியான விபரங்களையே உள்ளிடுகிறது.<br />
<br />
<br />
<br />
<center><br />
<br />
<br />
<div><img border="0" src="https://blogger.googleusercontent.com/img/b/R29vZ2xl/AVvXsEhdvMGsrV0VH5ogwQV5qD5tKVM8xUcXzGPzK7BzJ0xqfIf8sF033QRUNxSAuVpqsTOtMehGaXOLeFo2rPq0oLGRaOt-PhkkWdhzXliREjEqtPLQTwrFWYVCsVkaycJ6rXwRQHocbnC42ZPU/" /></div></center><br />
கீ ஸ்கிரேம்பிளர் நிரலின் இலவச பதிப்பும் இருக்கிறது. ஆனால், இலவசப் பதிப்பு FireFox மற்றும் Internet Explorer ஆகியவற்றில் மட்டுமே இந்த பாதுகாப்பினை அளிக்கிறது. மேற்சொன்ன இரண்டு உலாவிகளைப் பயன்படுத்துவோருக்கு இது பிரச்சனை இல்லை.<br />
<br />
<a href="http://www.inputsafe.com/download/KeyScrambler_Setup.exe">கீ ஸ்கிரேம்பிளர் தரவிறக்கம் செய்துக்கொள்வதற்கான சுட்டி இங்கே உள்ளது</a><br />
<a href="http://www.qfxsoftware.com/index.html">மேலும் விபரங்களுக்கு இந்த பக்கத்தினைப் பார்க்கவும்</a>Adminhttp://www.blogger.com/profile/15673905651610715628noreply@blogger.com8tag:blogger.com,1999:blog-1749565075288855470.post-75940253103711167532010-07-18T17:55:00.000+05:302010-07-18T17:55:01.929+05:30மின்னஞ்சல் முகவரி சேமிப்பு (E-Mail Harvesting) என்றால் என்ன?<div style="clear: left; float: left; margin-bottom: 1em; margin-right: 1em;"><img border="0" height="200" src="https://blogger.googleusercontent.com/img/b/R29vZ2xl/AVvXsEhkkWu4PAXnC6LfbcVD-czQMWV6qAskp0ckF-bnlxyu-9RANyggL32FKtOANfZ5nx6po0ogK3fjS_9QMM5MgPrWEUjmVGxoU-ZbslJXBZ94v690L5LdAAq7V-1OfhKzTGXisZpjDYZNVmM/" width="200" /></div>தனிநபர் இரகசியம் என்ற ஒரு விடயத்தில் மட்டும் நான் விட்டுத்தரவே மாட்டோம். என்ன தான் இணையத்தில் கலந்துப் போய் இருந்தாலும் நமது தனிப்பட்ட விபரங்களை நம் நன்பர்கள் கேட்டாலும் சொல்வதாக இல்லை. என்ன தான் முன்னெச்சரிக்கையுடன் இருந்தாலும், பல சமயங்களில் நம்மையும் மீறி நம் தனி-நபர் விடயங்கள் மற்றவர்களால் களவாடப்பட்டுவிடும். பெரும்பாலும் நாம் பயன்படுத்தும் கடவுச்சொற்கள் தான் அதிகம் களவாடப்படுகிறது நாம் எண்ணிக் கொண்டிருக்கிறோம். ஆனால், பிரச்சனை வேறு விதமாகவும் வருகிறது.<br />
<a name='more'></a><br />
அது என்ன வேறு விதம்?<br />
<br />
நாம் மின்னஞ்சல் முகவரி ஒன்றினை உருவாக்கி விடுகிறோம். அது பிறருக்கு கொடுக்கவே என்றாலும், அனைவருக்கும் கொடுக்க மாட்டோமே. நம்பத்தகுந்தவர்களுக்கு மட்டுமே கொடுத்து தகவல் பரிமாற்றம் செய்துக்கொள்வோம். அதுவே, நமக்குத் தேவை இல்லாத ஒருவருக்கு நமது மின்னஞ்சல் முகவரி சென்றடைந்துவிட்டால்? நிச்சயம் அது நமக்கு விரும்பத்தகாத ஒன்றாகவே தோன்றும்.<br />
<br />
அதில் எனக்கு எந்த பிரச்சனையும் இல்லை, நம் முகவரி மட்டும் தானே மற்றவர்களிடம் பெறப்படுகிறது. கடவுச்சொல் எதுவும் கிடைக்கப்படவே இல்லையே, இதில் என்னப் பிரச்சனை இருக்கிறது என்று நினைப்பவர்கள் கட்டாயம் மேற்கொண்டு படிக்கவும்.<br />
<br />
இணையத்தில் மின்னஞ்சல் முகவரி சேமிப்பு அதாவது E-Mail address Harvesting என்று ஒன்று வழக்கில் இருக்கிறது. நாம் மின்னஞ்சல் முகவரியினை எங்குப் பயன்படுத்தினாலும் அங்கேயே குறி வைத்து முகவரியினை சேகரித்துக்கொள்கின்றனர். இதற்குப் பல வழிகள் உள்ளன.<br />
<br />
<blockquote>மின்னஞ்சல் முகவரி சேகரிப்பு என்பது இணையத்தில் உலாவுல் இணையப்பயனர்களின் மின்னஞ்சல் முகவரிகளை அவர்கள் விருப்பமில்லாமலோ, அல்லது அவர்கள் அறிவுக்கு கொண்டு சொல்லாமலோ சேகரிக்கும் செயல் ஆகும்</blockquote><br />
அனைவருமே SPAM பற்றிக் கேள்விப்பட்டிருப்போம். ஸ்பேம் அஞ்சல்கள் நமக்கு வரும் பட்சத்தில் நமது மின்னஞ்சல் முகவிரி யாரோ ஒரு கயவரால் சேகரிக்கப்பட்டுவிட்டதை யூகிக்கலாம். தொடர்ந்து வரும் பட்சத்தில் சேகரிக்கப்பட்டது உறுதியாகிறது.<br />
<br />
<div style="clear: right; float: right; margin-bottom: 1em; margin-right: 1em;"><img border="0" src="https://blogger.googleusercontent.com/img/b/R29vZ2xl/AVvXsEjWaaMTWFtiX4w_OqrXkJaAxeLbirs7hX3asWZwollyVBqu65VOdJjmDfbIjbxamJIWRoSUTIpaKaRjkParT2vyH2KfyVV4m1BphrjtEhgfbZyDwnKgS4lZ1hia7h1hW1E0_YCMs0mzZYc/" /></div><br />
ஸ்பேம் அஞ்சல்கள் வருவதற்குக் காரணம் என்ன?<br />
<br />
இதற்குக் காரணம் சீக்கரமாகவே லாபம் சம்பாதிக்கும் எண்ணம் கொண்ட நிறுவனங்களும், பணம் மீது மோகம் கொண்டுள்ள கள்வர்களுமே காரணம். இவர்கள் நேரடியாக சந்தைக்குள் நுழைந்து வியாபாரம் செய்தோ, விளம்பரம் செய்தோ வருமானம் பெறவதை விட, கொஞ்சம் செலவில், அதிகம் பேரைச் சென்றடையும் மின்னஞ்சல் உத்தியைப் பயன்படுத்துகின்றனர். இதற்காக அவர்கள் பெரிய எண்ணிக்கைகளில் மின்னஞ்சல் முகவரிகளை விலைக்கு வாங்குகிறார்கள்.<br />
<br />
மின்னஞ்சல்களை சேகரிப்பவர்கள் இரு விதங்களாக சேகரிக்கிறார்கள். பரவலாகப் பயன்படுத்தப்படும் பெயர்களும், எண்களும் இனைத்து அவர்களே யூகித்த மின்னஞ்சல் முகவரிகள். இவை அனைத்துமே யூகித்த முகவரிகள் ஆதலால் பயன்பாட்டில் உள்ள முகவரிகளாக இருக்க வாயிப்புகள் குறைவு. அதனால், இந்த மின்னஞ்சல் முகவரிகளைப் பயன்படுத்த அவர்கள் விரும்புவதில்லை. இரண்டாம் வகை, உறுதி செய்யப்பட்ட முகவரிகளை சேகரித்தல். இந்த முகவரிகளுக்கு அவர்கள் அதிகம் ஆர்வம் கொண்டு சேகரிக்கின்றனர்.<br />
<br />
இந்த வேறுபாட்டிற்கான காரணம், இணையத்தில் பயனர்களின் செய்கைகளை ஆராய்ந்து அவர்கள் கணித்து வைத்திருக்கும் புள்ளிவிபரம் ஆகும்.<br />
<br />
<blockquote>அவர்களின் புள்ளி விபரங்களின் படி,,<br />
உறுதி செய்யப்படாத முகவரிகளுக்கு 1000 ஸ்பேம் மடல்கள் அனுப்பும் போது அதில், குறைந்த பட்சம் 1 'இன்பாக்ஸ்'ஆவது ஸ்பேம் தடுப்புகளை மீறி நுழைந்துவிடும். இதுவே, உறுதி செய்யப்பட்ட முகவரிகளுக்கு அனுப்பும் போது குறைந்தபட்சம் 100 இன்பாக்ஸ் சென்றடையும். அதாவது 10 விழுக்காடு இலக்கினை அடைந்து விடுவர். மடல்களைப் பெற்ற 100 பேரில் குறைந்த பட்சம் 10 பேராவது அந்த மடலில் ஆர்வம் காட்டுகின்றனர். அதில் ஒருவராவது கயவரிடம் சிக்கிக் கொள்வார். இதன் மூலம், 1000 ஸ்பேம் அனுப்புவதன் மூலம், கயவர்களுக்கு 10 அமெரிக்க டாலர்கள் லாபம் கிடைக்கிறது என்கிறது அந்த கணக்கீடு</blockquote><br />
இதனால், 1000 மின்னஞ்சல் முகவரிகளுக்கு ஒரு விலை என்று நிர்ணயம் செய்து வியாபாரம் செய்வதெற்கென பல வியாபாரிகள் உள்ளனர். உதாரணத்திற்கு, <b><a href="http://www.ioffer.com/i/2-000-000-email-address-s-opt-in-and-confirmed-97906199?source=eisi">இவர்</a></b> 20,000 உறுதி செய்யப்பட்ட மின்னஞ்சல் முகவரிகளை எங்கேயோ சேகரித்து அதை விற்கவும் தயாராகிவிட்டார். எதிர்பாராத விதமாக நமக்கு அதன் விலையினை விசாரிக்க முடியாமல் போனது.<br />
<br />
எப்படி சேகரிக்கின்றனர்?<br />
எப்படி தடுக்கலாம்?<br />
<i>இரண்டாம் பகுதியில் தொடரும்...!</i>vinohttp://www.blogger.com/profile/03124692495591373673noreply@blogger.com2tag:blogger.com,1999:blog-1749565075288855470.post-9406443204370776792010-07-16T16:05:00.002+05:302010-07-16T16:11:05.832+05:30டிவிட்டர் தேவை தானா?<div style="clear: left; float: left; margin-bottom: 1em; margin-right: 1em;"><img border="0" height="200" src="https://blogger.googleusercontent.com/img/b/R29vZ2xl/AVvXsEiez5WptA6tbTKDWbxaQecD91iDkNrUvAQz6-4B4GSfE1Ib6EmpLIQXDBU4G1EsX0Lwu7dETgaBCC6Wzuw-TYhHmVQCIkX3jGFNryIHhvFTu8zDV_HEEp3NMtZIYrB7Jndb3uNCK89SOBs/" width="200" /></div>சமூக வலதளங்களில் தனக்கென ஒரு இடத்தினை பிடித்துக் கொண்டிருக்கும் வலை தளம் இந்த டிவிட்டர். ஃபேஸ்புக் போன்ற சமூக தளங்களுடன் வேறுபடுத்திக் காட்டிக் கொள்ளும் இந்த வலைதளத்தினை உபயோகிப்பவர்களின் என்னிக்கை நாளுக்கு நாள் உயர்ந்துக் கொண்டு வருகிறது. எதற்காகத் தான் இந்த டிவிட்டர் என்று சிந்தித்துப் பார்த்தேன். இது நம் அன்றாட இணைய வாழ்விற்கு அவசியமான ஒன்று தானா? யார் இந்த 'பின்பற்றுவோர்கள்'? அவர்களுக்கு நம் கருத்து எந்த வகையில் உதவும் என்று சிந்தித்தேன். டிவிட்டரால் யார் சாதித்தது என்ன? மிஞ்சிப் போனால் எனக்கு இந்த பதிவு போட காரணமாக இருக்கிறது டிவிட்டர். சிந்தித்ததன் விளைவாக தோன்றிய கருத்துக்களை இங்கே பதிவுலகில் பகிர்ந்துக் கொள்கிறேன்.<br />
<a name='more'></a><br />
<b>காரணம் ஒன்று: என்ன தான் உங்களுக்கு பிரச்சனை?</b><br />
<br />
எனக்கு ஒரு தமிழ்த்திரைப்படத்தின் அந்த நகைச்சுவைக் காட்சி தான் நினைவிற்கு வருகிறது. அண்ணன், தம்பி இருவரும் (மொத்தமே இரண்டு பேர் தாங்க!) சொல்வார்கள்.<br />
<br />
<blockquote>அண்ணன் : தம்பி, நான் சொல்றேன்.. தயவுசெஞ்சுக் கேளு<br />
<br />
தம்பி : முடியாதுன்னே..</blockquote><br />
இதையே மீண்டும் மீண்டும் சொல்லிக் கொண்டிருப்பார்கள். இந்த நகைச்சுவை தான் டிவிட்டர் ரூபமாக திரையில் எனக்குத் தெரிகிறது. உலகில் யாருக்கும் நான் என்ன செய்கிறோம், என்ன நினைக்கிறோம், நேற்று மாலை விருந்துக்கு சென்ற போது எந்த நிறத்தில் ஆடை அணிந்தோம் என்பதைப் பற்றி யாருக்கும் கவலை இல்லை. இது பல முறை நாமே உணர்ந்திருப்போம். அப்படி இருக்கும் போது, இந்த டிவிட்டரில் மட்டும் நாம்ம் என்ன செய்கிறோம், என்னவாக இருக்கிறோம் என்றெல்லாம் ஏன் சொல்ல வேண்டும். சற்று சிந்தித்தால் சிரிப்பாக கூட வரும்.<br />
<blockquote>wow, what an awesome dinner! Would be better with less added salt. ahem!</blockquote><br />
நினைத்துப் பாருங்கள், யாராவது உங்களிடம் வந்து, நேற்றிரவு சாதத்தில் உப்பு அதிகமாக இருந்ததா என்று கேட்டுத் தெரிந்துக் கொள்வார்களா? அப்புறம் எதற்கு இந்த மாதிரியான டுவீட்டுகள் என்று புரியவில்லை. என்ன தான் பிரச்சனை இவர்களுக்கென்றும் தெரியவில்லை.<br />
<br />
<b>காரணம் இரண்டு: இது குருவி தானா? இல்லைக் காக்காவா?</b><br />
<br />
குருவி கூவினால் இனிமையாக தான் இருக்கும். அதிலும், கூட்டம் கூட்டமாக குருவிகள் கூவினால் இன்னும் இனிமையாகத் தான் இருக்கும். ஆனால், ஒரு குருவி கூவியதையே இன்னொறு காகம் கரைந்தால் நன்றாகவா இருக்கும். நான் இங்கே எதற்காக காகம் என்றுக் கூறுகிறேன் என்றால், பெரும்பாலான குருவிகள் செய்யும் வேலை இது. தாங்களும் பல வகைகளின் சிந்தித்து டுவிட்டுவார்கள். நின்று என்னவென்று கேட்க நாதி இருக்காது. மற்றவர்களும் அவரவர் டுவிட்டுவதற்கு திட்டம் தீட்ட நேரம் போதாதல்லவா? அதனால், தம்மைக் கவனிக்க வைக்க ஒரு வழி இருக்கிறது. அதற்கு பெயர் ReTweet என்று வைத்திருக்கிறார்களாம்.<br />
<br />
<blockquote>@boss this is 100th tweet i am retweeting urs. kudos</blockquote><br />
பிரபல நடிகர் ஒருவருக்கு ஒரு செய்தி அனுப்பினால் அவர் பதில் அனுப்பாமல் போக பல வாய்ப்புகள் உள்ளன. விடாமல், அவரது கூவல்களை மறுகூவல் செய்வதன் மூலம் அதாவது, காக்கா பிடிப்பதன் மூலம், தன்னை திரும்பிப் பார்க்க வைக்கலாம் என்ற எண்ணம் வேறு. பிரபலங்களைத் தவிற, இன்னும் பிற குருவிகள் காக்கா பிடிப்பதில் ஆர்வமோ ஆர்வம் தான்.<br />
<br />
<b>காரணம் மூன்று: இதுக்கெல்லாம் கூட நேரம் இருக்கா?</b><br />
<br />
"கண்ணா, கொஞ்சம் கடைக்குப் போய் ரெண்டு தேங்கா பெத்தை வாங்கிட்டு வாடா" என்று அம்மாமார்கள் கெஞ்சும் போது, "அடப்போம்மா வேற வேலை இல்ல? அவனவன் நேரம் இல்லாம திண்டாடுறான்" என்று சொல்லி, கணினியினைத் திறந்து டிவிட்டருக்குள் நுழையும் செல்வ சீமான்கள் அதிகம். அவர்களுக்கு பதிவுகள் எழுத நேரம் இருக்காது. உக்கார்ந்து வெட்டி விடயங்களை யோசித்து யோசித்து பின்னர் ஒருவழியாக கூவிவிடுவார்கள்.<br />
<blockquote>I know he would do like this! even jesus told this once.. bit.ly/mokkaina_ithu_mokka</blockquote>தான் சொல்வது தான் சத்தியம் என்று நிரூபிக்க அத்தாட்சியாக இணையத்தில் ஒத்தக் கருத்துடைய ஒரு வலைப்பக்கத்தினைத் தேடிப் பிடித்து அதற்கென்று உள்ள முகவரி சுறுக்கும் தளங்களை நாடி, சுறுக்கவும் செய்து... முடியல!<br />
<br />
<b>காரணம் நான்கு: நீயா நானா? ரொம்ப முக்கியம்!</b><br />
<br />
ஒவ்வொரு பயனர்களுக்கும், இத்தனை ஃபாலோயர்கள் இருப்பார்கள். உங்கள் நன்பர் வட்டத்தில் ஒருவருக்கு மட்டும் 199 ஃபாலோயர்கள் என்றுக் கண்டுக்கொண்டால், கண் அவிந்தேவிடுவது போல அவரது பக்கத்தினைப் பார்ப்பார்கள். தனக்கு வெறும் 19 ஃபாலோயர்கள் இருப்பதை கௌரவக் குறைச்சலாக நினைக்கிறார்கள்.<br />
<blockquote>Good morning ppl! omg, let your spl blessings r for my t(s)weet followers..!</blockquote>தனக்கும் அதிக ஃபாலோயர்கள் வேண்டுமென்று நினைத்து, அதற்காக கொடூரமாக சிந்திக்க தொடங்கிவிடுவர்!<br />
<br />
<b>காரணம் ஐந்து: எச்சரிக்கை: அவங்க கெளம்பிடுவாங்க!</b><br />
<br />
இருக்கிறார்கள் பல பேர். எல்லோருமே பார்த்து இருப்போம். <br />
<br />
இது போன்ற கரைச்சல்களை!<br />
<blockquote>Earn Money Online! I made 10000000 with in one month! bit.ly/vadai</blockquote><br />
இது போன்றும்!<br />
<blockquote>Today's Joke: Mr Bob was walking on the road. A stranger asked him to read more bit.ly/thaangalada</blockquote><br />
நாங்கள் போலி அல்லாத போலிகள் என்று சொல்லப்படும் உண்மையான நேர்மையான போலிகள்]<br />
<blockquote>Do not believe in fake profiles. I am real! - actor!</blockquote><br />
அவர்கள் மட்டுமல்ல்; அதுகளும் தான்<br />
<blockquote>dyk: 14 out of 10 ppl dont know maths! dailytweetsby bit.ly/tweetbots</blockquote><br />
<b>முடியலடா! (முடிவுரை)</b><br />
<br />
தேவையா என சிந்தியுங்கள்! சமூக நல்லினக்கம் எல்லாம் இப்படி மாறிவிட்டால், வாழ்க்கை தானியங்கி எந்திர போல ஆகிவிடும்.<br />
<br />
<blockquote>dad, I am asking for new version 146.0 of Iphone since long back</blockquote><br />
இப்படியொறு கூவல் ஒரு மகனிடம் இருந்து தந்தைக்கு செல்லும் காலமும் வந்துவிடும். விழித்துக்கொள்ளாமல் இருந்தால்!<br />
<br />
காதலரிடம் காதலை சொல்லவும், சண்டைப் போடவும், சமாதானத்திற்கும், நன்பர்களுடன் அரட்டை அடிக்கவும், திட்டங்கள் தீட்டவும், கூடி ப்ராஜக்ட் போனறவைகள் மேற்கொள்ளவும், ஆசிரியர்களிடம் சந்தேகம் கேட்கவும், ஆசிரியரும் சந்தேகம் தீர்க்கவும் 140 எழுத்துக்கள் போதுமென்று நினைக்கிறீர்களா? பிரபலங்களுக்கு வேண்டுமானால் 140 எழுத்துக்கள் தமது சுய விளம்பரத்திற்காக போதலாம். நமக்கு இதெல்லாம் தேவை தானா? இதைக் கூட டிவிட்டரில் சொல்ல இயலாது! மேற்படி, வாசகர் விருப்பம்!<br />
<br />
ஆம், நானும் டிவிட்டர் பயன்படுத்தியவன் தான். அதனால் தான் இவ்வளவும் அறிந்துக் கொண்டேன். மற்றவர்களுக்கும் எச்சரிக்கிறேன். நன்றி!<br />
<br />
-வினோ<br />
<br />
<span class="Apple-style-span" style="font-size: x-small;">மேலே குறிப்பிட்டிருந்த Quotes அனைத்துமே கற்பனை. நிகழ்-நேரத்திலோ அல்லது யாருடைய கற்பனையிலேயோ இது தோன்றி இருந்தால் தறசெயலானதே.</span>vinohttp://www.blogger.com/profile/03124692495591373673noreply@blogger.com14tag:blogger.com,1999:blog-1749565075288855470.post-13234974512094206262010-07-16T02:25:00.001+05:302010-07-17T21:50:19.579+05:30இந்தியாவின் உலாவி - எபிக் பிரவுசர்<div style="clear: left; float: left; margin-bottom: 1em; margin-right: 1em;"><img border="0" height="200" src="https://blogger.googleusercontent.com/img/b/R29vZ2xl/AVvXsEiOV4vBYjmEtiqmEnliOWbIPmaAgZWUm4dlDA4tDyfNrtIoZqHLAgC3FTgPDQ8_kEzsKD3K-QS1iZnOaZvxxtZi675qX6Koytwg0NprnDRCvTbcLCpXUhyphenhyphenhDKBGPdCV7dhqL1qENPT_4hE/" width="200" /></div>இந்தியாவிற்கென்றே தயார் செய்துள்ள உலாவியான எபிக்-பிரவுசர் வெளிவந்துள்ளது. பெங்களூருவைத் தலைமையகமாகக் கொண்டுள்ள Hidden Reflex என்னும் மென்பொருள் நிறுவனம் இந்த உலாவி நிரலை வடிவமைத்து நிரலாக்கம் செய்துள்ளனர். இந்த உலாவியின் மூல நிரல்கள் மொசில்லா நிறுவனத்தின் ஃபயர்ஃபாக்ஸ் உலாவியினுடையது என்பது குறிப்பிடத்தக்கது. இது இந்தியாவிற்கென்றே தயாரித்தது மட்டுமின்றி, மற்றொரு சிறப்பும் உண்டு.<br />
<a name='more'></a><br />
அந்த சிறப்பு யாதெனில், முதன்முறையாக ஒரு உலாவி நிரல், தன்னை மட்டும் காக்காமல், தான் நிறுவப்பட்டிருக்கும் கணினியையும் காக்கும் என்பதே. காரணம், உலாவியுடனே இனைந்திருக்கும் Anti-Virus நிரலும் இனைந்து இயங்கும். இந்த Anti-virus நிரலினைக் கொண்டு, நமது கணினியில் உள்ள வைரஸ்களையும் மேவிப் பிடித்து அழித்துவிடலாம். மேலும் இந்த உலாவியுடன், பெரும்பாலான இந்திய மொழிகளில் தட்டச்சு செய்ய முடியும். ஃபயர்ஃபாக்ஸ் Plug-in கூட இந்த எபிக் பிரவுசருடன் இனைந்து செயல்படும் ஆற்றல் கொண்டிருக்கிறது. அத்துடன், கிட்டதட்ட ஓபெரா உலாவியில் உள்ள சைட்பார் போன்று ஒரு சைட்பார் உள்ளது. இந்த சைடுபார் எந்த அளவிற்கு உபயோகமாக இருக்கிறது என்று நீங்களே உபயோகித்துப் பாருங்கள். அசந்துப் போவது உறுதி.<br />
<br />
<br />
<center><img src="https://blogger.googleusercontent.com/img/b/R29vZ2xl/AVvXsEirf6-NbqL08W3ncl5RpQ_A1agwSD0SZeAP5hSTxDMTUntz72d6k7Q88k9RwPUKuhW8sXWfKSaXsSxKbzx4iVkB3ltpmdfLjqyhpVnPmCHELd5N0cNGeRQlc92rR3oDkP4FLheCTULJx0A/" /></center><br />
இன்னும் பல புதிய அம்சங்களுடன் பிரகாசிக்கிறது இந்த எபிக் பிரவுசர். நாம் பயன்படுத்தும் போது, நமது நடவடிக்கைகளை நிரலினை மேம்படுத்தும் பொருட்டும் கூட மேமபாட்டாளர்கள் சேகரிப்பதில்லை. வேகம் எல்லாம் ஃபயர்ஃபாக்ஸ் போலவே பின்னி எடுக்கிறது. பயன்பாட்டில் மொஜில்லாவுடன் ஒப்பிடுகையில் பெரிய அளவில் வித்தியாசம் தெரியவில்லை என்றாலும், ஃபயர்ஃபாக்ஸ் விட எபிக் பிரவுசர் கொஞ்சம் மன நிறைவு தருகிறது. மொஜில்லாவினை விட்டுக் கொடுக்காதவர்கள் இதையும் பயன்படுத்திப் பாருங்கள். இதுவும் மொஜில்லாவின் ஒரு பதிப்பு போன்றது தானே.<br />
<br />
<b>சைடு டிஷ்:</b><br />
<ul><li>எபிக் பிரவுசர் உலாவியைப் பற்றி கூறும் போது, Hidden Reflex நிறுவனத்தின் நிறுவனர் அலோக் பரத்வாஜ் அவர்கள், "உலகில் மென்பொருள் மற்றும் தொழில்நுட்பம் சிறக்க புதுப்புது அறிவியல் சாதனைகளின் மூலமாக இந்தியா இருக்கிறது என்பதை நான் நிரூபிக்க வேண்டும்" என்கிறார்.</li>
</ul><br />
<ul><li>சில சமயங்களில் தனது Stability-யினை இழந்து விடுகிறது. இருந்தாலும், இது பலர் பயன்படுத்தி, அதற்கான பின்னூட்டங்களும் சொல்லும் போது, மேலும் சிறப்பாக மேம்படும். இதனால், இந்தியாவின் உலாவியினை ஆதரிப்போம்</li>
</ul><div>புதுப்பிப்பு:</div><div><br />
</div><div>இனைப்புக் கொடுக்கத் தவறிவிட்டதால் மன்னிக்கவும்! எபிக் பிரவுசரின் இனைய தளப் பக்கத்துன் முகவரி இது தான்! <a href="http://www.epicbrowser.com/">http://www.epicbrowser.com/</a></div><div>தறவிறக்கம் செய்துப் பயன்படுத்திப் பாருங்கள்!</div>vinohttp://www.blogger.com/profile/03124692495591373673noreply@blogger.com4tag:blogger.com,1999:blog-1749565075288855470.post-54012186756519248052010-07-16T01:22:00.000+05:302010-07-16T01:22:06.667+05:30குரோமில் பல மின்னஞ்சல் கணக்குகள் - கூகிளில் அறிமுகம்<div style="clear: left; float: left; margin-bottom: 1em; margin-right: 1em;"><img border="0" height="200" src="https://blogger.googleusercontent.com/img/b/R29vZ2xl/AVvXsEg2QFpPUjfsrOTAorOUBXCwWBW_qqx1njbq3u4SpXUa9oL8KIKlydC-k0uC9Fx1Hm1P6871x2KXSeqA8GpEUw0ad9WrD6ic5l5TfQZsyyyn1501fwXqLj4rrYDRtEJpSMtnmihQdfD5Heo/s400/600.jpg" width="200" /></div>பெரும்பாலான ஜி-மெயில் மின்னஞ்சல் பயனர்கள் பெரிதும் விரும்பும் ஒரு வசதியை அறிமுகம் செய்துள்ளது கூகிள் நிறுவனம். நம்மில் ஏறத்தாழ அனைவருமே ஒன்றிற்கும் அதிகமாக ஜி-மெயில் வைத்திருப்போம்.<br />
<a name='more'></a><br />
ஒன்று அலுவலக ரீதியான தொடர்புகளுக்கும், ஒன்று நன்பர்/உறவினர்களுடன் தொடர்புடன் இருக்கவும், ஒன்று வலைப்பூ எழுதவும், ஒன்று வலைப்பூக்களில் குழப்பத்தை உண்டாக்கவே பின்னூட்டம் போடவும் என பல மின்னஞ்சல் கணக்குகள் வைத்திருக்கும் நிலையில், ஏதேனும் ஒரு கணக்கில் தான் ஒரு உலாவியில் உள்நுழைந்து இருக்க முடியும்.<br />
<br />
<center><img height="300/" src="https://blogger.googleusercontent.com/img/b/R29vZ2xl/AVvXsEg2QFpPUjfsrOTAorOUBXCwWBW_qqx1njbq3u4SpXUa9oL8KIKlydC-k0uC9Fx1Hm1P6871x2KXSeqA8GpEUw0ad9WrD6ic5l5TfQZsyyyn1501fwXqLj4rrYDRtEJpSMtnmihQdfD5Heo/s400/600.jpg" width="300" /></center><br />
இதனால், நாம் எத்தனை கணக்குகள் வைத்திருக்கிறோமோ அத்தனை உலாவிகள் நிறுவிக்கொள்ளும் நிலை இருக்கிறது. இல்லையெனில், ஒரே உலாவியில் ஒன்றன் பின் ஒன்றாகத் தான் பயன்படுத்த முடியும். நாம் படும் அல்லல்களை கண்டுக்கொண்ட கூகிள் இப்போது ஒரே உலாவியில் இருந்தவாறே பல கணக்குகளுக்குள் உள்நுழைந்து பயன்படுத்த முடியும். ஆனால் இதைப் பயன்படுத்த கூகிள் குரோம் உலாவியின் incognito சாளரம் ஒன்றினை திறந்து பயன்படுத்த வேண்டும். பரிசோதித்து விட்டேன். சரியாகவே வேலை செய்கிறது.<br />
<br />
<b>சைடு டிஷ்</b><br />
<br />
<ul><li>ஜி-மெயிலின் <b>Offline</b> வசதியினைப் பயன்படுத்துவோர் இந்த வசதியினைப் பெற முடியாது.</li>
</ul><ul><li>Chrome incognito சாளரம் Ctrl+Shift+N ஆகிய விசைகளை ஒருசேர அழுத்தும் போதும் தோன்றும்</li>
</ul>vinohttp://www.blogger.com/profile/03124692495591373673noreply@blogger.com0tag:blogger.com,1999:blog-1749565075288855470.post-340912120336866072010-07-15T16:32:00.005+05:302010-07-16T00:11:27.032+05:30தமிழில் ஜாவா முயற்சி - நகைச்சுவை<div style="clear: left; float: left; margin-bottom: 1em; margin-right: 1em;"><img border="0" height="200" src="https://blogger.googleusercontent.com/img/b/R29vZ2xl/AVvXsEiy0ErVazpmXPa3FL7IMjWFQ-TW2cVdGJSrT_MDDQZbZnOy027Gwzl_0Rh_fg0GwzJCUCSOjo6MXW9HARkcax4FbBJzvgym5wcGK595a1-e69IHNQMv3D84lM5eXyvYxgnjzZG5UWfx6gg/s400/t_java_logo.jpg" width="200" /></div>நேற்று ஒரு சுவாரசியமான மின்னஞ்சல் ஒன்றினை தோழி ஒருவர் அனுப்பி இருந்தார். சுவாரசியமாக மட்டுமல்லாமல் நகைச்சுவையாகவும் இருந்தது. நாம் செய்யும் ஜாவா நிரலாக்க மொழியினை தமிழில் மொழிப் பெயர்க்க முயற்சியினை அந்த மின்னஞ்சல் மூலமாக பகிர்ந்துள்ளனர். அதனை நம் வலைப்பூ மூலம் பகிர்கிறோம். படித்து ரசியுங்கள். இது மின்னஞ்சலில் வந்ததே அன்றி எனது படைப்பல்ல என்று மீண்டும் சொல்லிகொள்கிறேன்.<br />
<br />
<a name='more'></a><br />
<blockquote><span style="color: blue; font-size: 10pt;"> public class Project</span><span style="color: blue; font-size: 10pt;"> </span><span style="color: blue; font-family: 'Courier New'; font-size: 10pt;"><br />
{</span><span style="color: blue; font-size: 10pt;"> </span><span style="color: blue; font-family: 'Courier New'; font-size: 10pt;"><br />
public static void main(String args[])</span><span style="color: black; font-size: 10pt;"> </span><span style="color: blue; font-family: 'Courier New'; font-size: 10pt;"><br />
{</span><span style="color: blue; font-size: 10pt;"> </span><span style="color: blue; font-family: 'Courier New'; font-size: 10pt;"><br />
int a;</span><span style="color: black; font-size: 10pt;"> </span><span style="color: blue; font-family: 'Courier New'; font-size: 10pt;"><br />
</span><span style="color: blue; font-size: 10pt;"> </span><span style="color: blue; font-family: 'Courier New'; font-size: 10pt;">string</span><span style="color: blue; font-size: 10pt;"> </span><span style="color: blue; font-family: 'Courier New'; font-size: 10pt;">b;</span><span style="color: blue; font-size: 10pt;"><br />
if(a==0)<br />
</span><span style="color: blue; font-family: 'Courier New'; font-size: 10pt;"> {</span><span style="color: blue; font-size: 10pt;"><br />
</span><span style="color: blue; font-family: 'Courier New'; font-size: 10pt;"> b = "Zero";</span><span style="color: blue; font-size: 10pt;"><br />
}<br />
</span><span style="color: blue; font-family: 'Courier New'; font-size: 10pt;"> else</span><span style="color: blue; font-size: 10pt;"><br />
</span><span style="color: blue; font-family: 'Courier New'; font-size: 10pt;"> {</span><span style="color: blue; font-size: 10pt;"><br />
</span><span style="color: blue; font-family: 'Courier New'; font-size: 10pt;"> b = "Non-Zero";</span><span style="color: blue; font-size: 10pt;"><br />
</span><span style="color: blue; font-family: 'Courier New'; font-size: 10pt;"> }</span><span style="color: black; font-size: 10pt;"> </span><span style="color: blue; font-size: 10pt;"><br />
</span><span style="color: blue; font-family: 'Courier New'; font-size: 10pt;"> return;</span><span style="color: blue; font-size: 10pt;"> </span><span style="color: blue; font-family: 'Courier New'; font-size: 10pt;"><br />
}</span><span style="color: blue; font-size: 10pt;"> </span><span style="color: blue; font-family: 'Courier New'; font-size: 10pt;"><br />
}</span></blockquote><br />
இதன் தமிழ் மொழிப்பெயர்ப்பு கீழே:<br />
<br />
<blockquote><span style="color: blue; font-family: "Courier New",Courier,monospace;">பொது வகுப்பு கூடிகும்மிஅடிப்பு</span><br />
<span style="color: blue; font-family: "Courier New",Courier,monospace;">{</span><br />
<span style="color: blue; font-family: "Courier New",Courier,monospace;"> பொது நிரந்தர ஒன்னுமில்லா முக்கிஅ (கம்பி வாக்குவாதன்கள்[])</span><br />
<span style="color: blue; font-family: "Courier New",Courier,monospace;"> {</span><br />
<span style="color: blue; font-family: "Courier New",Courier,monospace;"> எண்கள் அ;</span><br />
<span style="color: blue; font-family: "Courier New",Courier,monospace;"> கம்பி ஆ;</span><br />
<span style="color: blue; font-family: "Courier New",Courier,monospace;"> ஒருவேளை (அ == 0)</span><br />
<span style="color: blue; font-family: "Courier New",Courier,monospace;"> {</span><br />
<span style="color: blue; font-family: "Courier New",Courier,monospace;"> ஆ = “சுழியம்”;</span><br />
<span style="color: blue; font-family: "Courier New",Courier,monospace;"> }</span><br />
<span style="color: blue; font-family: "Courier New",Courier,monospace;"> இல்லைன்னா</span><br />
<span style="color: blue; font-family: "Courier New",Courier,monospace;"> {</span><br />
<span style="color: blue; font-family: "Courier New",Courier,monospace;"> ஆ = “சுழியம் அல்லாதது”;</span><br />
<span style="color: blue; font-family: "Courier New",Courier,monospace;"> }</span><br />
<span style="color: blue; font-family: "Courier New",Courier,monospace;"> திரும்பிப் போ;</span><br />
<span style="color: blue; font-family: "Courier New",Courier,monospace;"> }</span><br />
<span style="color: blue; font-family: "Courier New",Courier,monospace;">}</span></blockquote><br />
<b><span style="color: red;">புதுப்பித்தது:</span></b><br />
<span style="color: #999999;">00:10 16-07-2010</span><br style="color: red;" /><br style="color: red;" /><span style="color: red;">இந்த பதிவின் உள்ளடக்கம் பதிவர் <a href="http://ushiveda.blogspot.com/2008/01/blog-post_31.html">G3</a> அவர்களுடையது என்று சுட்டிக்காட்டிய <a href="http://www.blogger.com/profile/12133782203492631856">நீச்சல்காரன்</a>-னிற்கு நன்றிகள். மேலும் நான் G3 அவர்தம் ஆக்கங்களில் ஒன்றான இந்த பதிவை பிரசுரத்ததில் எந்த உள்நோக்கம் இல்லை என்றும், இது மின்னஞ்சலில் வந்ததால் பகிர்கிறேன் என்று ஏற்கனவே குறிப்பிட்டிருப்பதையும் தெரிவித்துக் கொள்கிறேன். விரும்பத்தகாத செயல் என்று எண்ணினால், தயவு செய்து தெரியபடுத்தவும். பதிவும் உடனே நீக்கப்படும்.</span>vinohttp://www.blogger.com/profile/03124692495591373673noreply@blogger.com8tag:blogger.com,1999:blog-1749565075288855470.post-15475528623902427932010-07-15T01:53:00.001+05:302010-07-15T01:56:36.911+05:30ஃபோட்டோஷாப் (1) - செதுக்கப்பட்ட எழுத்துக்கள்<div style="clear: left; float: left; margin-bottom: 1em; margin-right: 1em;"><img border="0" height="200" src="https://blogger.googleusercontent.com/img/b/R29vZ2xl/AVvXsEgrs-7Gcuhb4pfA6Rf1NErKQDM8wr7425NhX04evaKABWTOTgcjvnFbSlF2VWMJ6K7CfmmWkS-y9Lbj9PWZriX2Dd91ISd-IGdMmeBuXV5WH2M-EuAsxdWODgcqYhP9wLt2LIF7UHJn0Bw/" width="200" /></div>இதற்கு முன், ஃபோட்டோஷாப் பாடமாக அந்த பதிவும் செய்ததில்லை. அதனால், இம்முறை சிறிய முயற்சியாக இந்த முறை செய்கிறேன். சரியாக வரும்பட்சத்தில் தொடர்ந்தும் இந்த வகை பதிவுகள் இடுவோம்.<br />
<br />
இணைய வடிவமைப்பில் பிரபலமாகி வரும் ஸ்டைல் தான் Engraved Text" என்று அழைக்கப்படும் செதுக்கப்பட்டது போல தோற்றமளிக்கும் எழுத்துக்கள். தலைப்பிற்கோ அல்லது பொத்தானின் வடிவமைப்பிலோ இது பெரும்பாலும் பயன்படுத்தப் படுகிறது. இதை எவ்வாறு செய்வது என்பதை பார்ப்போம்.<br />
<a name='more'></a>நாம் வினோ'ஸ் கஃபே-யின் பெயரினைக் கொண்டு இலட்சனை செய்துப் பார்ப்போம். நினைவிருக்கட்டும், இந்த வடிவமைப்பிற்கு நான் ஃபோட்டோஷாப்பின் சி.எஸ்.4 பதிப்பினைப் பயன்படுத்தி உள்ளேன்.<br />
<br />
<div class="separator" style="clear: both; text-align: center;"><a href="https://blogger.googleusercontent.com/img/b/R29vZ2xl/AVvXsEgEe0qaNZ78Hb4t9PgPPytMLJcbNt7oSEihagpjb5ZKmd0eRVwHvLzX9HPZlPzXa706y4nulHB6p0VOdW9f9KyPzvwxeh38bjNTNjW7gmLvmXLx1_JK7X3FYybDNOhp3iTy8Ru2WiqkhV0/" imageanchor="1" style="margin-left: 1em; margin-right: 1em;"><img border="0" src="https://blogger.googleusercontent.com/img/b/R29vZ2xl/AVvXsEgEe0qaNZ78Hb4t9PgPPytMLJcbNt7oSEihagpjb5ZKmd0eRVwHvLzX9HPZlPzXa706y4nulHB6p0VOdW9f9KyPzvwxeh38bjNTNjW7gmLvmXLx1_JK7X3FYybDNOhp3iTy8Ru2WiqkhV0/" /></a></div><br />
முதலில், ஃபோட்டோஷாப் திறந்துக் கொள்ளவும். Ctrl+N அழுத்தியவுடன் புதிய கோப்பினை உருவாக்க ப்ராம்ப்ட் வரும். அதில், <br />
<br />
Preset : Custom<br />
Width : 300<br />
Height : 100<br />
Color Mode : RGB / 8 BIT<br />
<br />
<div class="separator" style="clear: both; text-align: center;"><a href="https://blogger.googleusercontent.com/img/b/R29vZ2xl/AVvXsEhBNF8gqu1h5SiMZxvg0QE33hXhmGGwA_5ppVkHmMI5EH7-8iXPV_Bzx3ShlkvOMDIYx86kIofU9W3flsc8vJKNCjmVRMfirAxGsn8XmWV3zmOcEH5fXAVIzoaVr3kv_3HEnUPJVjPRLN0/" imageanchor="1" style="margin-left: 1em; margin-right: 1em;"><img border="0" height="283" src="https://blogger.googleusercontent.com/img/b/R29vZ2xl/AVvXsEhBNF8gqu1h5SiMZxvg0QE33hXhmGGwA_5ppVkHmMI5EH7-8iXPV_Bzx3ShlkvOMDIYx86kIofU9W3flsc8vJKNCjmVRMfirAxGsn8XmWV3zmOcEH5fXAVIzoaVr3kv_3HEnUPJVjPRLN0/" width="400" /></a></div><br />
எனத் தேர்ந்தெடுத்து உள்ளிட்ட பின்னர், OK பொத்தானை அழுத்தவுடன். இப்போது, புதியதாக ஒரு கோப்பு வெள்ளை பின்னனியுடன் தோன்றி இருக்கும்.<br />
<br />
<div class="separator" style="clear: both; text-align: center;"><a href="https://blogger.googleusercontent.com/img/b/R29vZ2xl/AVvXsEh4mCAnE2Cjf7JoxfCL3c26CBRTKztSDlrpU0i-1JMmkwVuuWLWOVgsAmejupsFB2pvEqeKpvCRCQkm0rEBHBzgEVWRdNq8bgthxncZV9k0h1GuuBloca0ggGLZBhi_pInrW0k8DENterw/s1600/02newopened.JPG" imageanchor="1" style="margin-left: 1em; margin-right: 1em;"><img border="0" height="298" src="https://blogger.googleusercontent.com/img/b/R29vZ2xl/AVvXsEh4mCAnE2Cjf7JoxfCL3c26CBRTKztSDlrpU0i-1JMmkwVuuWLWOVgsAmejupsFB2pvEqeKpvCRCQkm0rEBHBzgEVWRdNq8bgthxncZV9k0h1GuuBloca0ggGLZBhi_pInrW0k8DENterw/s400/02newopened.JPG" width="400" /></a></div><br />
பின்னர், புதிதாக ஒரு Layer உருவாக்கிக் கொள்ளுங்கள். Rectangular Marquee (M) பயன்படுத்தி ஒரு நீள்சதுரக் கட்டம் வரைந்து அதில் படத்தில் காட்டியது போல Gradient (G) பயன்படுத்தி நிறம் அடித்துக் கொள்ளுங்கள்.<br />
<br />
<div class="separator" style="clear: both; text-align: center;"><a href="https://blogger.googleusercontent.com/img/b/R29vZ2xl/AVvXsEhy7kVrsFPmj24MCf78lyAljBnmVIAzmlMnNACmJxlNunaaWg0au5ueGXGch9ULjWiv2ufB-VwZ4IrLeXG1MZ9DEOacSHRNT2OZoZIol9usuytFj8PI9rZvJMOJHq9MbHt8mnXskYDLKZU/" imageanchor="1" style="margin-left: 1em; margin-right: 1em;"><img border="0" height="266" src="https://blogger.googleusercontent.com/img/b/R29vZ2xl/AVvXsEhy7kVrsFPmj24MCf78lyAljBnmVIAzmlMnNACmJxlNunaaWg0au5ueGXGch9ULjWiv2ufB-VwZ4IrLeXG1MZ9DEOacSHRNT2OZoZIol9usuytFj8PI9rZvJMOJHq9MbHt8mnXskYDLKZU/" width="400" /></a></div><br />
வெறும் நிறமாக இருப்பதை விட, Matte என்றழைக்கப்படும் texture கொடுத்தால் அழகாகத் தெரியும். இதற்காக, Filter -> Noise -> Add Noise தெரிவு செய்து, வேண்டிய அளவு (இங்கே 1.5 கொடுத்துள்ளேன்) உள்ளிட்டு 'Enter' தட்டவும். <br />
<br />
<div class="separator" style="clear: both; text-align: center;"><a href="https://blogger.googleusercontent.com/img/b/R29vZ2xl/AVvXsEjkN4U_OCap_Rh3tmbsjvH4giOlIz4ygDHghEJMH0W2OPrc2uHWWjbd0p1ZXfD5yqWMjNmqzVIKWF7wh1AnNjBC99tN4eugTAjwWinmHsBW42LnRVhTcDOoLhhDGTVBjce0JLaLuoHav7g/" imageanchor="1" style="margin-left: 1em; margin-right: 1em;"><img border="0" src="https://blogger.googleusercontent.com/img/b/R29vZ2xl/AVvXsEjkN4U_OCap_Rh3tmbsjvH4giOlIz4ygDHghEJMH0W2OPrc2uHWWjbd0p1ZXfD5yqWMjNmqzVIKWF7wh1AnNjBC99tN4eugTAjwWinmHsBW42LnRVhTcDOoLhhDGTVBjce0JLaLuoHav7g/" /></a></div><br />
பின்னர், Ctrl அழுத்திக்கொண்டே, Layer-ன் Thumbnail மீது சொடுக்கினால், அந்த Layer முழுதும் தேர்வாகிவிடும். இப்போது, Select -> Modify -> smooth எனத் தெரிவு செய்து, பின்னர் வேண்டிய அளவினைக் கொடுத்தால் வளைந்த மூலைகள் உருவாக்கப்படும்.<br />
<br />
<div class="separator" style="clear: both; text-align: center;"><a href="https://blogger.googleusercontent.com/img/b/R29vZ2xl/AVvXsEgfCPxTmDMTL5h_iBk7O1CW_Tq56CcEKr29hXjw5A7Nffjv52hpjR5lMJyuytTuMp1RLG8KQmVchamvE7G-rlVkICH3QhGzsy918HXdvqN-tIZh53UQMw4KXf_3U-lQXBN30acGmXAKKmE/" imageanchor="1" style="margin-left: 1em; margin-right: 1em;"><img border="0" height="266" src="https://blogger.googleusercontent.com/img/b/R29vZ2xl/AVvXsEgfCPxTmDMTL5h_iBk7O1CW_Tq56CcEKr29hXjw5A7Nffjv52hpjR5lMJyuytTuMp1RLG8KQmVchamvE7G-rlVkICH3QhGzsy918HXdvqN-tIZh53UQMw4KXf_3U-lQXBN30acGmXAKKmE/" width="400" /></a></div><br />
இப்போது, எழுத்துக்கள். Text (T) தெரிவு செய்து வேண்டிய எழுத்துருவையும் தேர்ந்தெடுத்துக்கொள்ளுங்கள். இப்போது, படத்தின் மீது தட்டச்சு செய்யலாம். இங்கே நம் வலைப்பூவின் பெயரைத் தட்டச்சு செய்துள்ளேன். நிறம் கருப்பினை தேர்வு செய்துக் கொள்ளுங்கள்.<br />
<br />
<br />
<div class="separator" style="clear: both; text-align: center;"><a href="https://blogger.googleusercontent.com/img/b/R29vZ2xl/AVvXsEjrAE6QFh72LuP3u60QItrDPuGFWaMYVsqi84qGQ1sYYm394zWTuMb7GIIEIujbTm-2Vpgrx_sxUIt0EV-AFlwn9lmSB9QhC57Th4FOKMnIXkhKNl3XdBAWzsEZ8KbLjn7uV2ENSNsTjgM/" imageanchor="1" style="margin-left: 1em; margin-right: 1em;"><img border="0" src="https://blogger.googleusercontent.com/img/b/R29vZ2xl/AVvXsEjrAE6QFh72LuP3u60QItrDPuGFWaMYVsqi84qGQ1sYYm394zWTuMb7GIIEIujbTm-2Vpgrx_sxUIt0EV-AFlwn9lmSB9QhC57Th4FOKMnIXkhKNl3XdBAWzsEZ8KbLjn7uV2ENSNsTjgM/" /></a></div><br />
உருவாக்கிய எழுத்து Layer-இனை இன்னொறு பதிப்பாக ஒன்று எடுத்துக்கொள்ள வேண்டும். இதை செய்ய, Layer -> Duplicate Layer தேர்வு செய்யலாம் அல்லது, Alt விசையினை அழுத்திப் பிடித்தவாறு Layer-இனை இழுத்தால், மற்றொன்று உறுவாகிவிடும். புதிதாக உருவாக்கப்பட்டுள்ள இந்த எழுத்துக்களுக்கு வெள்ளை நிறம் தெரிவு செய்துக்கொள்ளுங்கள்.<br />
<br />
<br />
<div class="separator" style="clear: both; text-align: center;"><a href="https://blogger.googleusercontent.com/img/b/R29vZ2xl/AVvXsEg-CX_1ycWJ3fR0PmrxXBiE2-knwfFmdXDd46c-kU6MAYdR5JCh31zR9XNMwboDNLCcHxBa1m9dmXhr297_e8u2GQIYWy6mrBUvUOuRMwnIPtKDmJ_VP00f1hDIZexD_borV6qzkkfoyUc/" imageanchor="1" style="margin-left: 1em; margin-right: 1em;"><img border="0" height="141" src="https://blogger.googleusercontent.com/img/b/R29vZ2xl/AVvXsEg-CX_1ycWJ3fR0PmrxXBiE2-knwfFmdXDd46c-kU6MAYdR5JCh31zR9XNMwboDNLCcHxBa1m9dmXhr297_e8u2GQIYWy6mrBUvUOuRMwnIPtKDmJ_VP00f1hDIZexD_borV6qzkkfoyUc/" width="400" /></a></div><br />
இப்போது, வெள்ளை நிற எழுத்துக்கள் கொண்ட Layer கருமை நிற எழுத்துக்கள் கொண்ட Layer-க்கு அடியில் கொண்டு சென்றுவிடுங்கள். இப்போது, Move (v) தேர்வு செய்துக்கொள்ளுங்கள். வெள்ளை நிற Layer தேர்வாகி இருக்கிறதா என்றுப் பார்த்துக்கொள்ளுங்கள். இல்லையென்றால், தெரிவு செய்துக்கொள்ளுங்கள். இப்போது, வெள்ளை நிற எழுத்துக்களை ஒரு Pixel கீழிறக்க வேண்டும். சுலபமாக விசைப்பலகையில் உள்ள ↓ விசையினை ஒரு முறை அழுத்தி 1 பிக்ஸள் கீழிறக்கிவிடலாம்.<br />
<br />
<br />
<div class="separator" style="clear: both; text-align: center;"><a href="https://blogger.googleusercontent.com/img/b/R29vZ2xl/AVvXsEiBnuz3BUSH2AfzO0zCAvqtGPH5I2jKHago95v46KNzR6VBWxN6WEiTXeTyRKNMezKSscg8oUZmswFFLvAX3ui-90YK6TlnT2YBSIY8K18GFij2MSD-p3KpBVSKFRy6qZf_1cPJpB3klbE/" imageanchor="1" style="margin-left: 1em; margin-right: 1em;"><img border="0" height="138" src="https://blogger.googleusercontent.com/img/b/R29vZ2xl/AVvXsEiBnuz3BUSH2AfzO0zCAvqtGPH5I2jKHago95v46KNzR6VBWxN6WEiTXeTyRKNMezKSscg8oUZmswFFLvAX3ui-90YK6TlnT2YBSIY8K18GFij2MSD-p3KpBVSKFRy6qZf_1cPJpB3klbE/" width="400" /></a></div><br />
அவ்வளவு தான். தக தகவென மின்னும் செதுக்கப்பட்ட எழுத்துக்கள் தயார்!<br />
<br />
கருத்துக்கள் பெரிதும் எதிர்ப்பார்க்கப்படுகின்றன நன்பர்களே!vinohttp://www.blogger.com/profile/03124692495591373673noreply@blogger.com0tag:blogger.com,1999:blog-1749565075288855470.post-16616624797543114012010-07-13T00:20:00.004+05:302010-07-13T00:49:09.028+05:304k (2304p) துல்லிய காணொளிகள் - யூடியூப்-ன் அகல கால்?<div style="clear: left; float: left; margin-bottom: 1em; margin-right: 1em;"><img border="0" height="200" src="https://blogger.googleusercontent.com/img/b/R29vZ2xl/AVvXsEj7Tv_7bieWbd51kiBDbcknu4Jhp4KIq8lpsgBCC-yA8zJab_rbRzDQI8C3ekXfgaHocdHMBUm_IyMEExIdfIFWtcM-f0TtRTNByTQsP0HKcCo7IRQmAkKcTcWxcb0-1e1dgFUsT-mM0pY/" width="200" /></div>போன வருடம் கூட தொலைக்காட்சிகள் எல்லாம் கேபிள் டிவி முறையில் தான் இயங்கிக் கொண்டிருந்தன. என்னமோ தெரியவில்லை, பொழுதுபோக்குத் துறையில் என்ன ஒரு அசுர வளர்ச்சி. பொருளாதார வீழ்ச்சியில் இருந்து உலகம் மீண்டு எழத் தொடங்கி ஆறு மாதம் கூட ஆகவில்லை. சரி, ரஜினிக்கும் இதுக்கும் என்ன சம்மந்தம் என்று யோசிக்காதீர்கள். மேலே <span class="Apple-style-span" style="font-size: small;"><span class="Apple-style-span" style="color: #666666;">கீழே?! :( </span></span>படியுங்கள்<br />
<a name='more'></a>இன்று மாடிக்கு மாடி டிஷ் வைக்கப்பட்டுள்ளது, எந்நேரமும் அளவில்லா இணைய வசதி இனைப்பு பெருமளவில் எடுத்துக்கொள்ளப்பட்டுள்ளது என முன்னேறி வரும் நிலையில், இணையதளங்களும் தம்மை மேம்படுத்தி தலைமுறை மாற்றத்திற்கு ஈடு கொடுத்தவன்னம் உள்ளன. காணொளிகளை இணையத்தில் வழங்கும் இணையதளத்தில் முக்கியமானது அனைவருக்கும் தெரிந்த யூடியூப் தான். கடந்த ஆறு திங்களுக்கு யூடியூப் இணையதளம், தனது HD உயர் துல்லிய காணொளி சேவையை கொடுத்துக் கொண்டிருக்கிறது. 3D காணொளிகளும் யூடியூபில் பார்க்கலாம் என்பதும் சிலருக்கு பலருக்குத் தெரிந்திருக்கும். அதிகபட்சமாக 1080p அளவிலான துல்லியமான காணொளிகளை வழங்கி வந்த யூடியூப் இணையதளம், இப்போது அகல கால் வைத்துள்ளது. பொதுவாக 4k (நான்காயிரம்) என்று அளவிடப்படும் இந்த துல்லிய காணொளிகள் 4096x2304 அதாவது 2304p அளவான காணொளிகளை வழங்கத் தொடங்கி உள்ளது. 1080 காணொளிக் கேமராக்களின் விலை வீழ ஆரம்பித்து இருக்கும் இந்த காலக்கட்டத்தில், யூடியூபின் இந்த 2304p அளவு துல்லிய காணொளி சேவை, மீண்டும் கேமராக்கள் சந்தையில் ஒரு பாதுப்பு உருவாகும் என எதிர்ப்பார்க்கலாம். அதுவும், இந்த வகை அதி-உயர் துல்லிய காணொளிகள் உருவாக்கி இணையதளத்தில் வெளியிட யூடியூப் நிறுவனமே பொருளாதார உதவி செய்யவிருப்பதாக அறிவித்துள்ளது. இன்னும் சில ஆண்டுகளில், இணையத்தில் 2304p காணொளிகளின் பயன்பாடு அதிகம் காணப்படும் என எதிர்ப்பார்க்கலாம்.<br />
<br />
<b>உதாரணத்திற்கு இந்த காணொளி:</b><br />
<br />
<br />
<br />
<br />
<center><object height="258" width="400"><param name="movie" value="http://www.youtube-nocookie.com/v/feXigKevTFU&hl=en_US&fs=1?rel=0&color1=0x2b405b&color2=0x6b8ab6&border=1"></param><param name="allowFullScreen" value="true"></param><param name="allowscriptaccess" value="always"></param><embed src="http://www.youtube-nocookie.com/v/feXigKevTFU&hl=en_US&fs=1?rel=0&color1=0x2b405b&color2=0x6b8ab6&border=1" type="application/x-shockwave-flash" allowscriptaccess="always" allowfullscreen="true" width="400" height="258"></embed></object></center><br />
இது 2304p அளவிலான அதி-உயர் துல்லிய காணொளி யூடியூப் தளத்தில் இருந்து. எம்பெட் செய்யப்பட்ட காணொளிகள் அதி-உயர் துல்லிய அளவுகளை வழங்காததால், <a href="http://youtu.be/feXigKevTFU">http://youtu.be/feXigKevTFU</a> சொடுக்கிப் பாருங்கள். PIXAR நிறுவனத்திற்காக இந்த காணொளியை வடிவமைத்தவர், தான் 3D rendering மென்பொருள் கொண்டு இந்த காணொளியை உருவாக்கியதாகவும், 8 நொடிகள் ஓடும் இந்த காணொளியின் நினைவக அளவு 11 GB இருந்ததாகவும், இதனை தொகுக்கும் திறன் கொண்ட மென்பொருள் கிடைக்காததால் அதனை அப்படியே தரவேற்றம் செய்துவிட்டதாகவும் தெரிவித்திருக்கிறார்.<br />
<br />
<b>சைடு டிஷ்:</b><br />
<ul><li>நமது கணினித் திரையில் 720p மற்றும் 1080p இரண்டிற்குமே வேறுபாடு உணர நம்மால் முடியாது. எனவே, இதனைக் காணும் போது பெரிதும் வித்தியாசம் உணர முடியாது.</li>
</ul><ul><li>2304p அளவு துல்லிய காணொளிகளை 25அடிகள் நீளமான திரையில் தெளிவாக காண முடியும். இதை, நமது 17 அங்குல திரையில் பார்க்க வேண்டியது அவசியம் தானா?</li>
</ul><ul><li>நமது உச்ச நட்சத்திரம் நடித்து வெளியான சிவாஜி திரைப்படத்தின் "ஒரு கூடை சன் லைட்" பாடல் 4k துல்லிய அளவில் சுடப்பட்டு, தொகுக்கவும் செய்யப்பட்டது என்பது இங்கே குறிப்பிட்டே ஆக வேண்டும்</li>
</ul><ul><li>இந்தியாவின் விதிமுறைகள் படி, பெரும்பாலும் உபயோகிக்கப்படும் திரைகளின் துல்லிய அளவு, 800x600 மட்டுமே. மற்றும், குறைந்த பட்சம் 256 kbps வேகம் கொண்டிருக்கும் இனைப்புகள் அகல அலைவரிசை வகை சார்ந்தவை எனவும் இருக்கிறது. இதை ஏன் இந்த தலைப்புல் குறிப்பிட வேண்டும் என்று நீங்களே யூகித்துக் கொள்ளுங்கள்.</li>
</ul><div><span class="Apple-style-span" style="font-size: small;">கடற்கரைக்குப் போனால் கூட ஒரு சுண்டல் சாப்பிட்ட பேப்பரைப் போட்டு விட்டு வருவோம். இங்கே என்ன செய்யப் போகிறீர்கள்? :P</span></div>vinohttp://www.blogger.com/profile/03124692495591373673noreply@blogger.com2tag:blogger.com,1999:blog-1749565075288855470.post-69342148742175869832010-07-12T00:30:00.002+05:302010-07-12T00:37:13.032+05:30பைரேட்-பே டோறன்ட் இணையதளம் பயன்படுத்துகிறீர்களா? இதை கவனியுங்க!<div style="clear: left; float: left; margin-bottom: 1em; margin-right: 1em;"><img border="0" height="200" src="https://blogger.googleusercontent.com/img/b/R29vZ2xl/AVvXsEh2zMVuLT2Htf8Gq6KBPPGYEvSEnsK5gZ_MkWkWz_78rVGQFLIBz1EaYlhZ3pOM99-8SXYyl2R2pohzdyVlKHhKy9r6uiWmebqFfsjji7IyviiqzP4bJZkmNSKud8QVPnxU2qdZnAN_EZ4/" width="200" /></div>என்ன ஆச்சு தெரியுமா? பைரேட்-பே என்னும் டோறன்ட் இணையதளம் ஒன்று ஹாக்கர்களால் கடந்த ஏழாம் தேதி மாலை 8 மணியளவில்(ஏறத்தாழ) தனது சேவையகம், தகவல் கூட்டமைப்பான DataBase ஆகியவை முடக்கப்பட்டது. டோறன்ட் பயன்படுத்தும் நண்பர்களுக்கு இந்த இணையதளம் கட்டாயம் தெரிந்திருக்கும். தெரியாதவர்கள் தெரிந்துக் கொள்ளுங்கள். பைரேட்-பே (Pirate Bay) என்னும் இணையதளம்.<br />
<a name='more'></a>டோறன்ட் கோப்புகளை வாடிக்கையாளர்களுக்கு வழங்குவதிலும், டோறன்டிற்கான நிரல், கோப்புகளை ஆராய்ந்து, நெறிப்படுத்தி அனைத்து கணினிகளுக்கும் பிரித்து அனுப்பும் சேவையினையும் செய்யும் இணையதளமே! பல இணையதளங்கள் இருந்தாலும், 'பைரேட்-பே'விற்கு இருக்கும் சிறப்பே தனி தான். எதிலும் வேகம், விபரம் அறிந்து கொடுப்பதிலும் வேகம், டோறன்ட்டின் நிலைமை அறிந்து தெரிவிப்பதிலும் வேகம், டோறன்ட்டினை பயனர்கள் தேடுவதிலும் துல்லியம் ஆன தனக்கே உரிய சிறப்புடன், டோறன்ட் உலக வாடிக்கையாளர்களின் மனதிற்குப் பிடித்த இணையதளம் பைரேட்-பே தான். இவர்களுக்கு போட்டியாக இருந்த மினி-நோவா கூட சில காலங்களுக்கு முன்னர், பல சட்ட பிரச்சனைகளால் காலாவதியாகிப் போனது. இப்போது, பைரேட்-பே தான் டோறன்ட் கடலின் தலைவன்!<br />
<br />
இந்த தலைவனின் அடிமடியில் கை வைத்தவர் தான் ருஷ்ஷோ என்பவர். அர்ஜன்டின நாட்டினை சேர்ந்த இவர் தான் இந்த விபரீத விளையாட்டினைக் கையாண்டார். இவரே இதைப் பற்றி பல விடயங்களை இணையத்தில் பகிர்ந்துக் கொண்டார். இவர் சொல்லும் ஒவ்வொரு விடயமும் பைரேட்-பே பயனர்களுன் நாடித்துடிப்பை பன்மடங்கு உயர்த்துகிறது. தானே எதிர்ப்பார்க்காத பல குறைபாடுகள் உள்ள பாதுகாப்புக் கட்டமைப்பினை பைரேட்-பே வடிவமைப்பாளர்கள் செய்திருப்பதாக நக்கலடிக்கிறார். அதிர்ந்துப் போன இணைய உலகம் தமது பரந்த பார்வையினை இவர் மீதும் திருப்பியது. ருஷ்ஷோ, தான் மிக எளிதாக கட்டமைப்பை உடைத்து உள்ளே நுழைந்தது எளிதாக இருந்தது எனவும், இணையதள சேவையகம் தனது கட்டுப்பாட்டில் வந்துவிட்டது எனவும் மிரட்டி இருக்கிறார். கூடவே, தான் பைரேட்-பே தளத்துன் மொத்த விபரத்தையும் தன்னிடம் சேமித்து வைப்பிருப்பதாகவும், பயனர்களின் பெயர், மின்னஞ்சல் முகவரி, நாடு என அனைத்தும் தன்னிடம் இருப்பதாக பயனர்களுக்கு குண்டு வைத்தார். ஆனால் தான் இதனை தவறான முறையில் பயன்படுத்தப் போவதில்லை எனவும், யாருக்கும் லாபத்திற்காகவோ, அல்லது இலவசமாக கையளிக்கப் போவதில்லை என்கிறார் ருஷ்ஷோ. பைரேட்-பே இணைய தளத்தில் எந்த பாதிப்பினையும் ஏற்படுத்தவில்லை எனவும் அறிவித்தார்.<br />
<div style="clear: right; float: right; margin-bottom: 1em; margin-right: 1em;"><img border="0" height="200" src="https://blogger.googleusercontent.com/img/b/R29vZ2xl/AVvXsEhHsx54qUiiw9aJvSCqXR7zBS2iUnFQk9XqcoWerdlvbetzYcYWlDD8qYnq1DVxLR07QMDWS0_BhRrabqFURoiMxYN8oP_eJBSJUnypSJA-vjT3VCmmkPQIYL4XG1PJsFhyRCTJNyPQ4p8/" width="200" /></div>இதனால், பைரேட்-பே இணையதளம் கிட்டதட்ட ஒரு மணி நேரத்திற்கு மேலாக மூடப்பட்டுக் கிடந்தது. தனது விபரங்களை சேகரித்து வைத்திருப்பதால் அந்த விபரங்கள் எங்கே வெளியாகிவிடுமோ அல்லது, நமது இணைய பழக்கங்களை வேவுப் பார்க்கப்படுமா என பைரேட்-பே இணையப் பயனாளர்கள் அச்சத்தில் உறைந்துள்ளனர். பயனர்களின் ஐ.பி முகவரி கொண்டும், அவர் செய்த சட்ட-விரோத தரவிறக்கங்கள் விபரமும் இணையக் காவல் துறையினரிடம் சென்றுவிடுமோ என்ற அச்சமும் பைரேட்-பே இணைய பயனர்களிடம் உள்ளது. மேலும், மின்னஞ்சல் முகவரிகளை வேறு சிலருடன் கைமாற்றப்படுவதால், மிரட்டல்/குப்பை மடல்கள் பயனர்களுக்கு அனுப்பப்படும் அபாயமும் உள்ளது.<br />
<br />
இதுப் பற்றி பைரேட்-பே இணையதளம் எந்த அறிவிப்பும் தரவில்லை. இதனால், ருஷ்ஷோ சொன்ன தகவல்களையும் எளிதில் நம்பிவிட முடியாது. 'பைரேட்-பே'விற்கு இனி தனது ஆளுமை மெல்ல மெல்லக் காணாமல் போகும் அபாயமும் ஏற்பட்டுள்ளது.<br />
<br />
இலவச/திறந்த-மூல மென்பொருள் பயனர்களுக்கும், சட்ட ரீதியாக நிரல்களை பயன்படுத்துவோர்களுக்கும் சில மணி நேர வேடிக்கையாகவும் இருந்தது என்பது மிகவும் தலையாய செய்தி!vinohttp://www.blogger.com/profile/03124692495591373673noreply@blogger.com0tag:blogger.com,1999:blog-1749565075288855470.post-31932176397852558802010-07-08T09:00:00.005+05:302010-07-11T23:16:53.206+05:30பட்ஜட் மொபைல் வாங்க குறிப்புகள்இப்போதெல்லாம் அலைபேசி இல்லை என்று சொல்வது எல்லாம் ஆச்சரியப்படும் விஷயமாகிவிட்டது. வசதிற்கேற்ப அவரவர் தனக்கென்று ஒரு அலைபேசியை வாங்கி கையில் வைத்துக் கொண்டு தான் தங்கள் தனிமையை போக்கிக்கொள்கின்றனர். இன்னும் சிலர், அலைபேசிக்காகவே தன்னை தனிமைப்படுத்திக் கொள்கின்றனர் என்பது வேதனையான விசயம். அறிவியல் கண்டுபிடிப்புகளை சரியாக உபயோக்கிக்காமல் தவறான-முறையில்/தவறாக உபயோகிப்பது அறிவீனமான செயல் என்றுக் கருதுகிறேன். இந்த தத்துவத்துடன் தலைப்புக்கு வருவோம்.<br />
<br />
<a name='more'></a>சிலர், தான் மொபைல் வாங்குவதாக முடிவுக் கட்டி விட்டு, பார்ப்பவர்களை எல்லாம் அறிவுரை கேட்பார்கள். போதாத குறைக்கு, அவரது மொபைலையும் வாங்கி நோண்டிப் பார்த்துக் கொண்டே, "என்ன விலை? சார்ஜ் எவ்வளவு நேரம் நிக்குது" என்றுக் கேட்பார்கள். என்னத்த நோண்டுகிறாரே என்று எட்டிப் பார்த்துக் கொண்டே அரை கவனத்துடன் பதில் அவரும் பதில் சொல்வார். இதில் ஒரு நகைச்சுவை என்னவென்றால், மொபைல் வாங்குவோருக்கு, தனக்கு மொபைலில் என்ன அம்சமெல்லாம் இருக்க வேண்டும் என்றுக் கூட யோசித்து இருக்க மாட்டார். முதலில் நமக்கு எந்த மாதிரியான மொபைல் <acronym title="'தேவை'க்கும் 'வேண்டும்'மிற்கும் வித்தியாசம் உள்ளதை உணர்க">'தேவை'</acronym> என்பதை ஆராய்ந்துப் பார்க்க வேண்டும்.<br />
<br />
ஒவ்வொருவருக்கும் வாழ்க்கைமுறை வேறுபடும். அதனால், மற்றவரைப் பார்த்து அதே வகை மொபைல் வாங்க வேண்டும் என்ற எண்ணம் கைவிட வேண்டும். மொபைலின் ஒவ்வொறு அம்சமும் நமக்கு எந்தெந்த வகையில் பயன்படும் என்று ஆராய வேண்டும். விரிவாகப் பார்ப்போம்.<br />
<br />
<b>திரை:</b><br />
<br />
திரை என்பது ஒரு அலைபேசியில் இருந்தே ஆக வேண்டிய அடிப்படை அம்சம். திரையின் நீளம் அகலம் எல்லாம் அதிகமாக இருக்கும் போது, பயன்பாடு எளிதாக இருக்கும். அதிகமாக குறுன்செய்தி அனுப்புபர்கள் பெரிய திரையினை நாடலாம். புகைப்படங்கள் பார்க்க, பெரிதான அளவிலான திரை தேவையே இல்லை. காரணம், திரையின் அளவு வேறு, திரையின் துல்லியம் என்பது வேறு. உதாரணத்திற்கு, சில வகை மொபைல்களில் 2" திரையில், 240x320 துல்லியம் இருக்கிறது. சில வகைகளில் 2"2' அளவில் திரை இருந்தாலும், அதன் துல்லியம் வெறும் 176x144 அளவிற்குத் தான் இருக்கும். இதில், துல்லியம் என்பது ஓரளவு இருந்தாலே போதும், காட்சிகள் பெரிதாகத் தோன்றி பயன்படுத்த எளிதாக இருக்கும் காரணத்தினால் இரண்டாவதாக சொன்ன வகையே சிறந்ததாக பரிந்துரைக்கிறேன்.<br />
<br />
<b>கேமரா:</b><br />
<br />
<div imageanchor="1" style="clear: right; float: right; margin-bottom: 1em; margin-left: 1em;"><img border="0" src="https://blogger.googleusercontent.com/img/b/R29vZ2xl/AVvXsEgagk4ypLS9f3xf1ft4mI5hS-4uexUaig-pcteltyT0xejCASLzq-GSQRDOpeV_kRhnQPftcEHaw6LQ7EncQcg2wU2sHAVmqoF4tSZa9FaarPB9oeEYzTmNCh55y3SQ2eMcbdU6e8yUt5U/" /></div>பெரும்பாலான மொபைல்களில், டிஜிட்டல் கேமராவின் அம்சங்கள் இல்லாததால், ஓரளவு துல்லியம் இருந்தாலே போதும். அலைபேசிகளில் இருக்கும் கேமராவைப் பொறுத்த வரை, 2 MP கேமரா போதுமானது. மெகா பிக்ஸல் அதிகமாகும் போது துல்லியமாக இருக்கும் என்பது தவறானக் கருத்து. <br />
புகைப்படத்தின் தெளிவு அதிகமாக இருக்குமே தவிற, இது வெறும் எண்கள் ரீதியில் தான். நிகழ்-நேரத்தில் எந்த வித்தியாசமும் இருக்காது.<br />
<br />
<b>பொழுதுப்போக்கு அம்சங்கள்:</b><br />
<br />
இன்று பொழுதுப்போக்கு அமங்கள் கொண்ட அலைபேசிகள் எளிதான விலையில் கிடைப்பதால் அவ்வாறான வகை அலைபேசிகள் வாங்குவதே சிறந்தது. நாம் வெளியே செல்லும் போது நமது MPx பிளேயரைக் கொண்டு செல்ல முடியாது. அதனால் மொபைலிலேயே இந்த அம்சம் இருக்கும் போது, பல சமயம் மிகவும் உபயோகமாக இருக்கும்.<br />
<br />
<b>அதிகப்படியான வசதிகள்:</b><br />
<br />
கண்டிப்பாக புளூடூத் தேவை. இது மிகவும் பயனளிக்கும். ஆனால், காப்புரிமை செய்யப்பட்ட கோப்புகளை பகிர்தலைத் தவிர்த்திடுங்கள். எல்லோருமே இதைத் தவிர்த்தால், எல்லோருமே ஒரிஜினல் கோப்புகளை வாங்கும் அளவிற்கு மலிவாக கிடைத்துவிடும்.<br />
<br />
GPRS அல்லது 3G? என்ற கேள்வி பலருக்கு கேள்விக்குறியாகவே இருக்கும். வீட்டில் இனையம் இருந்தால், மொபைலில் GPRS மட்டுமே போதுமானது. ஆர்வமாக 3G அலைபேசிகள் வாங்குவிட்டு, முன்பக்க கேமராவினை சிகை அலங்காரத்திற்கு மட்டுமே பயன்படுத்தும் பலரைப் பார்த்திருக்கிறேன்.<br />
<br />
<b>talk-time மற்றும் StandBy time:</b><br />
<br />
மொபைல் வாங்கும் போது மிக மிக மிக (எத்தனை 'மிக' வேண்டுமானாலும் போட்டுக்கொள்ளுங்கள்) முக்கியமாக கவனிக்க வேண்டிய விசயம். மொபைல் கடைக்காரர் சொல்வதை எல்லாம் காதில் வாங்காதீர்கள். ஒரு மாடல் பிடித்திருந்தால் அதன் இணையதளத்தில் விபரத்தைப் பாருங்கள். திருப்திகரமான எண்களை நீங்கள் கண்டீர்கள் என்றால், மற்ற தளங்களில் அதன் பயனர் விமர்சனங்களைப் பாருங்கள். சிலருக்கு மாற்றுக் கருத்து என்பது எப்போதுமே இருக்கும். அதனால், பத்திற்கு 8 மதிப்பெண் இருந்தாலும்.<br />
<br />
<b>அழகு:</b><br />
<br />
அழகாக மொபைல் வைத்திருப்பது தான் பெருமை என்ற எண்ணம் நிலவி வருகிறது. இதனால், ஸ்லிம் என்றும், சில்வர் ஃபினிஷ் என்றும் பல அலங்காரத்துடன் பல அலைபேசிகள் சந்தைக்கு வருகிறது. ஸ்லிம் அலைபேசிகள் பயன்படுத்தும் போது, பேட்டறி சீக்கரமாக விரையம் ஆக வாய்ப்புள்ளது. அதேப் போல, சில்வரால் ஆன பாகங்களினால் பயன்படுத்தும் போது எளிதாக சீக்கிரமாகவே சூடாகிவிடும். இதனால், அழகு என்பதைப் பார்க்காமல், விசைகள் எளிதாக உள்ளனவா, எத்தனை மேலதிக விசைகள் கொடுக்கப்பட்டுள்ளன என்றுப் பார்த்துக்கொள்ளுங்கள்.<br />
<br />
<b>நினைவகம்:</b><br />
<br />
சில மொபைல்களில் <acronym title="(அதாவது அலைபேசியில் உள்ள நினைவகம்)">அடிப்படை நினைவகம்</acronym> மிகக் குறைவாக இருக்கும். இதனால் நாம் அப்ளிகேஷன் மற்றும் விளையாட்டுகள் பயன்படுத்துமோ, பாதியிலேயே முடங்கும் அபாயம் உள்ளது. எனவே, அடிப்படை நினைவகம் குறைந்த பட்சம் 20 மெகா.பைட் இருத்தல் நலம். மற்றப்படி, நினைவகத் தகடுக் கூட அதிகப் பட்சம் 4 GB க்கு மேலே தேவையில்லை. அதற்கும் குறைவாக இருந்தால் தான் அலைபேசியும் தொய்வில்லாம இயங்கும்.<br />
<br />
நிறுவனம் சார்ந்த பொருள் தான் வாங்க வேண்டுமா? என்றுப் பலர் யோசிக்கின்றனர். இது முழுக்க முழுக்க அவரவர் சொந்த முடிவுக்குட்பட்டது. புகழ்பெற்ற நிறுவனத்தின் அலைபேசிகளின் விலைகளைவிட, நிறுவனம் சாராத/நிறுவனமாகக் காட்டிக்கொள்ளும் அலைபேசிகளின் விலை குறைவாக உள்ளதால் பலர் குழப்பமடைகின்றனர். இதில் குழப்பமடைய எதுவுமே இல்லை. இப்போது வாங்கும் அலைபேசி நம்மிடம் எத்தனை நாளுக்கு வைத்திருப்போம் என்று சின்னதாக ஒரு யோசனை இருக்கும். பெரும்பாலானோர், தான் வாங்கும் அலைபேசிக்கு வாங்கும் போதே 2 ஆண்டு தான் ஆய்ள் என்று தீர்மானித்துவிடுகின்றனர். இது போன்றோர். ஒன்றரை வருடத்திலேயே அலைபேசியைக் கன்னாபின்னாவென பயன்படுத்துவார்கள். அவர்களுக்கு, பிரபல நிறுவனங்களின் தயாரிப்புகள் தேவை இல்லை. சிலர், கண்ணும் கருத்துமாக வைத்திருப்பவர்கள் இருக்கிறார்கள். அவர்கள், பிரபல நிறுவனம் சார்ந்த அலைபேசியை வாங்குவதால், இலவச சேவை மட்டுமல்லாமல், நீடித்து வரும் என்ற நம்பிக்கை வரும்!<br />
<br />
சந்திப்போம்.<br />
<b>-வினோ</b>vinohttp://www.blogger.com/profile/03124692495591373673noreply@blogger.com1tag:blogger.com,1999:blog-1749565075288855470.post-11592704169542958882010-07-06T23:41:00.005+05:302010-07-06T23:55:24.678+05:30நன்பர்களுக்கு 'தொப்பி' கொடுக்க Scripts ரெடி!<div style="clear: left; float: left; margin-bottom: 1em; margin-right: 1em;"><img border="0" height="150" src="https://blogger.googleusercontent.com/img/b/R29vZ2xl/AVvXsEi0womZwwpT-W7yGzwoNfNhhPeFtYocZcLdO5WNOpScUD_KuyvM8CHtuBlgiR6tIIcqqwbts1x5XDOM09EcXjySghZAs7K0385Jv6DMgYZPbcgx9orBwrqeVjm5tLjSfTlWOw9XQtvwY6Y/s800/image001.jpg" width="200" /></div>உங்கள் நன்பர் உங்களுக்கு அப்பப்போ தொப்பி கொடுக்கிறாரா? பதிலுக்கு பதில் தொப்பிக்கு தொப்பி கொடுக்கலாம் வாருங்கள். பின்வரும் 4 வழிகளில் ஒன்றினைத் தேர்ந்தெடுத்து அவரது கணினியில் இயங்கவிட்டுவிடுங்கள். கணினி விஷயத்தில் அந்நியாயத்துக்கு அப்பாவியாக இருந்தால், மெயிலிலேயே அனுப்பிவிடுங்கள்.<br />
<a name='more'></a>பிறகு அவர் படும் பாடு அதோகதி தான். முக்கியமான விடயம், இது அவர் கணினியில் எந்த தீங்கும் இழைக்காது. அதனால், எல்லாமே கொஞ்ச நேர விளையாட்டுக்கு தான். முயற்சி செய்து பாருங்கள்.<br />
<br />
1. கணினியில் உள்ள சிடி டிரைவ் மீண்டும் மீண்டும் திறந்து மூடி கணினி உபயோகிக்கும் உங்கள் நன்பரை வெறுப்பேத்த இந்த CODE-டினை நோட்பேடில் நகல் எடுத்து ஒட்டி விட்டு, <acronym title="கோப்பின் பெயர் விருப்பம் போல அமைத்துக் கொள்ளலாம்"><i>கோப்பின் பெயர்</i></acronym>.vbs என சேமித்து அனுப்பிவிடுங்கள். எத்தனை டிரைவ் வைத்திருந்தாலும், அத்தனையும் திறந்து/மூடிக் கொண்டே இருக்கும்.<br />
<br />
<blockquote><span class="Apple-style-span" style="font-family: 'Courier New', Courier, monospace;">Set oWMP = CreateObject("WMPlayer.OCX.7")</span><br />
<span class="Apple-style-span" style="font-family: 'Courier New', Courier, monospace;">Set colCDROMs = oWMP.cdromCollection</span><br />
<span class="Apple-style-span" style="font-family: 'Courier New', Courier, monospace;">do</span><br />
<span class="Apple-style-span" style="font-family: 'Courier New', Courier, monospace;">if colCDROMs.Count >= 1 then</span><br />
<span class="Apple-style-span" style="font-family: 'Courier New', Courier, monospace;">For i = 0 to colCDROMs.Count - 1</span><br />
<span class="Apple-style-span" style="font-family: 'Courier New', Courier, monospace;">colCDROMs.Item(i).Eject</span><br />
<span class="Apple-style-span" style="font-family: 'Courier New', Courier, monospace;">Next</span><br />
<span class="Apple-style-span" style="font-family: 'Courier New', Courier, monospace;">For i = 0 to colCDROMs.Count - 1</span><br />
<span class="Apple-style-span" style="font-family: 'Courier New', Courier, monospace;">colCDROMs.Item(i).Eject</span><br />
<span class="Apple-style-span" style="font-family: 'Courier New', Courier, monospace;">Next</span><br />
<span class="Apple-style-span" style="font-family: 'Courier New', Courier, monospace;">End If</span><br />
<span class="Apple-style-span" style="font-family: 'Courier New', Courier, monospace;">wscript.sleep 5000</span><br />
<span class="Apple-style-span" style="font-family: 'Courier New', Courier, monospace;">loop</span></blockquote><br />
2. மேலே சொன்னது போலவே இதுவும். இதில், மீண்டும் மீண்டும் CAPSLOCK ஆனை இயங்கிவிடும். இதுவும், உங்கள் நன்பர் தட்டச்சு செய்யும் போது பெரும் தொல்லையாக இருக்கும். இதனையும் மேலே சொன்னது போல, CODE-னை நோட்பேடிற்கு கொண்டுப் போய், <acronym title="கோப்பின் பெயர் விருப்பம் போல அமைத்துக் கொள்ளலாம்"><i>கோப்பின் பெயர்</i></acronym>.vbs என் சேமித்து அனுப்பி விடலாம்.<br />
<br />
<blockquote><span class="Apple-style-span" style="font-family: 'Courier New', Courier, monospace;">Set wshShell =wscript.CreateObject("WScript.Shell")</span><br />
<span class="Apple-style-span" style="font-family: 'Courier New', Courier, monospace;">do</span><br />
<span class="Apple-style-span" style="font-family: 'Courier New', Courier, monospace;">wscript.sleep 100</span><br />
<span class="Apple-style-span" style="font-family: 'Courier New', Courier, monospace;">wshshell.sendkeys "{CAPSLOCK}"</span><br />
<span class="Apple-style-span" style="font-family: 'Courier New', Courier, monospace;">loop</span></blockquote><br />
3. நோட்பேட் தானாக திறந்து, "Hello, how are you? I am good thanks" என்று நிறுத்தி நிதானமாக சொல்லி, உங்கள் நன்பரை வெறுப்பேத்த இந்த கோடினைப் பயன்படுத்துங்கள்.<br />
<br />
<blockquote><span class="Apple-style-span" style="font-family: 'Courier New', Courier, monospace;">WScript.Sleep 180000</span><br />
<span class="Apple-style-span" style="font-family: 'Courier New', Courier, monospace;">WScript.Sleep 10000</span><br />
<span class="Apple-style-span" style="font-family: 'Courier New', Courier, monospace;">Set WshShell = WScript.CreateObject("WScript.Shell")</span><br />
<span class="Apple-style-span" style="font-family: 'Courier New', Courier, monospace;">WshShell.Run "notepad"</span><br />
<span class="Apple-style-span" style="font-family: 'Courier New', Courier, monospace;">WScript.Sleep 100</span><br />
<span class="Apple-style-span" style="font-family: 'Courier New', Courier, monospace;">WshShell.AppActivate "Notepad"</span><br />
<span class="Apple-style-span" style="font-family: 'Courier New', Courier, monospace;">WScript.Sleep 500</span><br />
<span class="Apple-style-span" style="font-family: 'Courier New', Courier, monospace;">WshShell.SendKeys "Hel"</span><br />
<span class="Apple-style-span" style="font-family: 'Courier New', Courier, monospace;">WScript.Sleep 500</span><br />
<span class="Apple-style-span" style="font-family: 'Courier New', Courier, monospace;">WshShell.SendKeys "lo "</span><br />
<span class="Apple-style-span" style="font-family: 'Courier New', Courier, monospace;">WScript.Sleep 500</span><br />
<span class="Apple-style-span" style="font-family: 'Courier New', Courier, monospace;">WshShell.SendKeys ", ho"</span><br />
<span class="Apple-style-span" style="font-family: 'Courier New', Courier, monospace;">WScript.Sleep 500</span><br />
<span class="Apple-style-span" style="font-family: 'Courier New', Courier, monospace;">WshShell.SendKeys "w a"</span><br />
<span class="Apple-style-span" style="font-family: 'Courier New', Courier, monospace;">WScript.Sleep 500</span><br />
<span class="Apple-style-span" style="font-family: 'Courier New', Courier, monospace;">WshShell.SendKeys "re "</span><br />
<span class="Apple-style-span" style="font-family: 'Courier New', Courier, monospace;">WScript.Sleep 500</span><br />
<span class="Apple-style-span" style="font-family: 'Courier New', Courier, monospace;">WshShell.SendKeys "you"</span><br />
<span class="Apple-style-span" style="font-family: 'Courier New', Courier, monospace;">WScript.Sleep 500</span><br />
<span class="Apple-style-span" style="font-family: 'Courier New', Courier, monospace;">WshShell.SendKeys "? "</span><br />
<span class="Apple-style-span" style="font-family: 'Courier New', Courier, monospace;">WScript.Sleep 500</span><br />
<span class="Apple-style-span" style="font-family: 'Courier New', Courier, monospace;">WshShell.SendKeys "I a"</span><br />
<span class="Apple-style-span" style="font-family: 'Courier New', Courier, monospace;">WScript.Sleep 500</span><br />
<span class="Apple-style-span" style="font-family: 'Courier New', Courier, monospace;">WshShell.SendKeys "m g"</span><br />
<span class="Apple-style-span" style="font-family: 'Courier New', Courier, monospace;">WScript.Sleep 500</span><br />
<span class="Apple-style-span" style="font-family: 'Courier New', Courier, monospace;">WshShell.SendKeys "ood"</span><br />
<span class="Apple-style-span" style="font-family: 'Courier New', Courier, monospace;">WScript.Sleep 500</span><br />
<span class="Apple-style-span" style="font-family: 'Courier New', Courier, monospace;">WshShell.SendKeys " th"</span><br />
<span class="Apple-style-span" style="font-family: 'Courier New', Courier, monospace;">WScript.Sleep 500</span><br />
<span class="Apple-style-span" style="font-family: 'Courier New', Courier, monospace;">WshShell.SendKeys "ank"</span><br />
<span class="Apple-style-span" style="font-family: 'Courier New', Courier, monospace;">WScript.Sleep 500</span><br />
<span class="Apple-style-span" style="font-family: 'Courier New', Courier, monospace;">WshShell.SendKeys "s! "</span></blockquote><br />
4. இது கொஞ்சம் பயமுறுத்தும் வகையிலானது. நீங்களே முயற்சித்துப் பாருங்கள். <br />
இந்த கோடினை நோட்பேடில் ஒட்டி, <acronym title="கோப்பின் பெயர் விருப்பம் போல அமைத்துக் கொள்ளலாம்"><i>கோப்பின் பெயர்</i></acronym>.DAT என்று சேமித்து அனுப்பி விடுங்கள்<br />
<br />
<blockquote><span class="Apple-style-span" style="font-family: 'Courier New', Courier, monospace;">@echo off</span><br />
<span class="Apple-style-span" style="font-family: 'Courier New', Courier, monospace;">title The end of the world</span><br />
<span class="Apple-style-span" style="font-family: 'Courier New', Courier, monospace;">cd C:\</span><br />
<span class="Apple-style-span" style="font-family: 'Courier New', Courier, monospace;">:menu</span><br />
<span class="Apple-style-span" style="font-family: 'Courier New', Courier, monospace;">cls</span><br />
<span class="Apple-style-span" style="font-family: 'Courier New', Courier, monospace;">echo I take no responsibility for your actions. Beyond this point it is you that has the power to kill yourself. If you press </span><br />
<span class="Apple-style-span" style="font-family: 'Courier New', Courier, monospace;"><br />
</span><br />
<span class="Apple-style-span" style="font-family: 'Courier New', Courier, monospace;">'x' then your PC will be formatted. Do not come crying to me when you fried your computer or if you lost your project etc...</span><br />
<span class="Apple-style-span" style="font-family: 'Courier New', Courier, monospace;">pause</span><br />
<span class="Apple-style-span" style="font-family: 'Courier New', Courier, monospace;">echo Pick your poison:</span><br />
<span class="Apple-style-span" style="font-family: 'Courier New', Courier, monospace;">echo 1. ShutDown</span><br />
<span class="Apple-style-span" style="font-family: 'Courier New', Courier, monospace;">echo 2. Restart</span><br />
<span class="Apple-style-span" style="font-family: 'Courier New', Courier, monospace;">echo 3. Wipe out your hard drive (BEWARE)</span><br />
<span class="Apple-style-span" style="font-family: 'Courier New', Courier, monospace;">echo 4. Net send</span><br />
<span class="Apple-style-span" style="font-family: 'Courier New', Courier, monospace;">echo 5. Messages then shutdown</span><br />
<span class="Apple-style-span" style="font-family: 'Courier New', Courier, monospace;">set input=nothing</span><br />
<span class="Apple-style-span" style="font-family: 'Courier New', Courier, monospace;">set /p input=Choice:</span><br />
<span class="Apple-style-span" style="font-family: 'Courier New', Courier, monospace;">if %input%==1 goto one</span><br />
<span class="Apple-style-span" style="font-family: 'Courier New', Courier, monospace;">if %input%==2 goto two</span></blockquote><br />
<br />
சைடு டிஷ்:<br />
<br />
மேலே கொடுத்துள்ள எல்லா நிரலாக்க வரிகளும், எந்த மாற்றமும் செய்யாமல் பயன்படுத்தும் பட்சத்தில் கணினியின் வன்பொருளிற்கோ, மென்பொருளிற்கோ, அல்லது, மனிதர்களின் மூளைக்கோ மனதிற்கோ எந்த பாதிப்பும் ஏற்படாது எனத் தெளிவாக சொல்லிக் கொள்கிறேன்.<br />
<br />
இயங்கத் தொடங்கிய நிரல் தானாகவே LogOff அல்லது Restart-இன் போது நின்று விடும்.<br />
<br />
பழி வாங்கப்பட்ட நன்பர், அக்கறையாக வந்து, விசாரித்தாலும் சொல்லிக் கொடுங்கள். ஆனால் ஏது என்று கேட்டால் இந்த பதிவின் முகவரியோ அல்லது எனது ஈ-மெயில் முகவரியோ சொல்லிவிடாதீர்கள்.<br />
<br />
அப்புறம் ரொம்ப முக்கியமான ஒன்று, அடிச்சும் கேப்பாங்க! அப்பவும் சொல்லிடாதீங்க!!<br />
<br />
-வினோvinohttp://www.blogger.com/profile/03124692495591373673noreply@blogger.com3tag:blogger.com,1999:blog-1749565075288855470.post-65711691717497722552010-07-06T10:25:00.001+05:302010-07-06T10:33:47.077+05:30கணினிகளுக்கு தீங்கு விளைக்கும் 6 வித வைரஸ்கள்<div style="clear: left; float: left; margin-bottom: 1em; margin-right: 1em;"><img border="0" height="200" src="https://blogger.googleusercontent.com/img/b/R29vZ2xl/AVvXsEiiOpIRR4eJRDU-uzKVM6sphT9_esq2W-5Xjr99pONdP4Zqe0K_MY7FAT2kRvMXBvNmJ9hnZJE0w40rCnqG1-vUrBauxYkMybnwOKHue_A0fnYhZaGdzvjZOt1xtTmQMYcLm5d1w3qg8D8/" width="200" /></div>கணினியினை பயன்படுத்துவதை விட, அதைப் பாதுகாத்து வைப்பதே பெரிய வேலையாக இருக்கிறது. எப்படி தான், மனைவியைக் கூட புறம் தள்ளிவிட்டு இந்த கணினிகளுக்கு அடிமையாகிறார்களோ தெரியவில்லை. "உமக்கு என்னய்யா அக்கறை? அதிலெல்லாம தலையிடாதே!!" என்று அதட்டுவது எனக்கு கேட்டுவிட்டதால் நேராக விசயத்திற்கே வந்திவிடுவோம்.<br />
<br />
<a name='more'></a>"நேற்று மாலையில் கூட நன்றாகத் தான் இயங்கிக் கொண்டிருந்தது. இன்று காலையில் இருந்து பூட் ஆக மறுக்கிறது" என்ற துக்கசெய்தி சொல்லி நிறையக் கேட்டிருப்போம். உலகிலேயே அதிகமாக வைரஸால் பாதிக்கப்படும் இயங்குத்தளம் நமது விண்டோஸ் இயங்குதளம் என்றுத் தெரிந்தும் அதையே தான் பெரும்பாலும் பயன்படுத்துகிறோம். கணினிகளைத் தாங்கும் வைரஸ்கள் பல உள்ளன. அவை பற்றி சிறிது அலசிப்பார்ப்போம்.<br />
<br />
கணினிகளைத் தாக்க நாள்தோறும் பல்லாயிறக்கணக்கான வைரஸ்கள் உருவாக்கப்படுகின்றன. அவற்றை பண்புவாரியாக பிரித்துப் போட்டுப் பார்த்தால், மொத்தமாக 6 வகைகள் தேறும். அவை என்ன என்ன? எப்படிப் பட்டவை?<br />
<div style="clear: left; float: left; margin-bottom: 1em; margin-right: 1em;"></div><div class="separator" style="clear: both; text-align: center;"><img border="0" height="200" src="https://blogger.googleusercontent.com/img/b/R29vZ2xl/AVvXsEiZQpQuoAN3XVVZBokYHukIVI0SNgIYvHpxfhVgBW_MPvGLICmVq_mbhpKfyv9ZRsgt4UYBhn_A4C6S-yBw8_xc-kgazDDAQyupesSrukB28bIHVFC9iMXfEh-1_9OV900f6s2bATbkRXE/" width="200" /></div><br />
<b>1. Boot Sector Viruses:</b><br />
<br />
அதாவது, பூட் செக்டார் வைரஸ் என்பது, நமது கணினியின் BIOS என சொல்லிப்படும் "அடிப்படை உள்ளீட்டு அல்லது வெளியீட்டு முறை" எனும் சிஸ்டம் மீது தான் தாக்குகின்றன. பொதுவாக வைரஸ் வந்ததை உண்ர்ந்தால் உடனே இயங்குதள நிறுவி குறுந்தகட்டை தேடி எடுத்து, மறு நிறுவல் செய்து விடுவோம். அப்படி எல்லாம் செய்தால் இந்த பூட் செக்டார் வைரஸை அசைத்துக் கூடப் பார்க்க முடியாது. நீங்கள் புதியதாக ஒரு HDD வாங்கி வந்து வைத்தாலும் சரி, அதுவும் பாதிக்கப்படும். காரணம் இது தாக்குவது பாதிப்பது எல்லாம் MBR (MBR என்றால் Master Boot Record ஆகும். இது இயங்குதளத்தை கண்டுபிடித்து இயங்க வகை செய்யும்) எனும் தகவலைச் சேமித்துவைத்திருக்கும் BIOS-இன் பகுதியைத் தான். அதனால் BIOS ரெகவரி டிஸ்க் ஒன்று உருவாக்கி BIOS-ஐ மீள்-நிறுவல் செய்து, HDD-இனையும் அழித்து, இயங்குதளம் மீள்-நிறுவல் செய்து தான் கணினியைக் காப்பாற்ற முடியும்.<br />
<br />
<b>2. கூடாத நிரல் அல்லது கோப்புகள்:</b><br />
<br />
இந்த வகை வைரஸ்கள், நிரல்களாகவோ அல்லது கோப்பாகவோ ஹார்ட் டிஸ்கில் இயங்குதளத்தின் பார்ட்டீசனில் உட்கார்ந்துக் கொள்ளும். இவை, இயங்குதளம் தொடங்கும் போதே, தானும் தொடங்கி தன் கூடாத செய்கையினால் கணினியை பாதிப்புக்குள்ளாக்கும். அந்த நிரல்/கோப்பு எதுவென்று தெரிந்தாலே, Task Manager கொண்டு நிறுத்திவிடலாம். பின்னர், அழித்தும் விடலாம்.<br />
<br />
<b>3. Stealthy Virus:</b><br />
<br />
இவையும் இரண்டாவதாக சொல்லப்பட்ட வைரஸ் போலத் தான். ஆனால், இந்த வகை வைரஸ்கள் தனது அடையாளத்தைக் காட்டிக் கொள்வதே இல்லை. இதனால், இதனைக் கண்டுபிடித்து முடக்க/அழிக்க மிகவும் கடினமானதும் கூட. Anti-Virus இருக்கிறதே என தப்புக் கணக்குப் போடாதீர். வேட்டியாடும் Anti-Virus-களிடம் தான் இதன் விளையாட்டே. நீங்கள் வைரஸ் ஸ்கேன் செய்யத் தொடங்கியவுடன் தனது கோப்பிற்கு, ஒரு நல்ல நிரல் என்ற பிம்பத்தை உருவாக்கிவிட்டுத் தானே தற்காலிகமாக முடங்கிக்கொள்ளும். இதனால், Anti-virus-களிடம் இது அகப்படாது தப்பித்துவிடும்.<br />
<br />
<b>4. MultiPartite:</b><br />
<br />
இந்த வகை வைரஸ்கள் மேலே சொல்லப்பட்ட மூன்று வகையிலும் சார்ந்தவை. இதனால், இது பாதிக்காத இடமே கணினியில் இருக்காது. இவ்வாறான வைரஸ்கள் பெரும்பாலும் தாக்குவது குறைவாக இருந்தாலும், தாக்கப்பட்டால் பெரும்பாதிப்பு உண்டாகும்.<br />
<br />
<b>5. Polymorphic:</b><br />
<br />
பாலிமார்பிக் வைரஸ்கள், தங்களைத் தாங்களே திருத்தி எழுதிக்கொள்ளும் வல்லமைக் கொண்டவை. இதனால் வைரஸ் ஸ்கேன் செய்யும் போது தன்னை ஒரு ஸ்பைவேராகவும், ஸ்பைவேருக்கு ஸ்கேன் செய்யும் போது தன்னை ஒரு வைரஸாகவும் மாற்றிக் கொண்டு பாதிப்பை உண்டாக்கிய வன்னம் இருக்கும்.<br />
<br />
<b>6. Macro</b><br />
<br />
மேக்ரோ என்பது, சொல் திருத்திகளில் அடிக்கடி செய்ய வேண்டி இருக்கும் ஒரு பணியை தானே செய்துக்கொள்ளும் வகையில் அமைக்கப்படும் நிரலாக்கம் தான். அதையே தீங்கிழைக்கும் ஒரு பணியை இயக்க நிரலாக்கப் படுவது தான் மேக்ரோ வகை வைரஸ்கள். பெரும்பாலும், நமது மின்னஞ்சல் முகவரியில் இருந்து எல்லோருக்கும் மெயில் அனுப்புவது போன்ற சிறு சிறு தொந்தரவு தரும்.vinohttp://www.blogger.com/profile/03124692495591373673noreply@blogger.com8tag:blogger.com,1999:blog-1749565075288855470.post-6395002340718689682010-07-05T13:27:00.002+05:302010-07-12T01:45:21.599+05:30உலகிலேயே சிறிய 7mm HDD<div style="clear: left; float: left; margin-bottom: 1em; margin-right: 1em;"><img border="0" src="https://blogger.googleusercontent.com/img/b/R29vZ2xl/AVvXsEgegy-UPioGCiL6GFN8wudGCpTMIr72np6-hU-R2_hxufDE0nP-i44HLwm24RjS1_eg-yMiMlMdsAxP6itVbLZLXJRkPo9IuwZvGBmp5cKGoSZR-OVcSkX8k8lFF3FucaQ9qu4cJR-nz6Pa/" /></div>ஹிட்டாச்சி நிறுவனம் வெறும் ஏழு மி.மீ. தடிமன் அளவே கொண்ட வன்-தட்டினை அறிமுகப்படுத்தியுள்ளது. தகவல் நினைவகம் மற்றும் வன்பொருள் தயாரிப்பில் தொடர்ந்து தனது இடத்தை தக்க வைத்து வரும் ஹிட்டாச்சி நிறுவனம் இந்த புதிய கண்டுபிடிப்பை நிகழ்த்தியுள்ளது. மடிகணினி மற்றும் உள்ளங்கை அளவுக் கணினிகளின் வடிவமைப்புக்கி இந்த கண்டுபிடிப்பு முகவும் உபயோகக் கரமாக இருக்கும் என்பதால் இந்த வன்-தட்டு வன்பொருளிற்கு துறையில் பெரிய அளவில் வரவேற்புக் கிடைத்துள்ளது.<br />
<a name='more'></a>இது 320 ஜி.பி அளவிற்கு தகவல்களை நினைவில் கொள்ளும் எனவும், இதன் வேகம் 7200 rpm அளவிற்கு இருக்கும் எனவும் தெரிவித்துள்ளனர். விரைவில் இந்த கண்டுபிடிப்பினை, Porable MPx Player-களிலும் இனைத்துத் தயாரிக்க முனைந்துள்ளனர்.<br />
<div class="separator" style="clear: both; text-align: center;"><img border="0" height="240" src="https://blogger.googleusercontent.com/img/b/R29vZ2xl/AVvXsEj2RsAHuaG3Cui1B89sBQl1AabYUP6HzzOxmYS56QTpqw4Fz7T60XO7dareQ4U7pkx-1ULfsdLK3faAsv91sFxdj93Z0HlkLr5zNEx8SJcEHdEzTJTrZBgcDP7GRu7HSW22nAfFFGvdTh0T/" width="320" /></div>அடிப்படை விபரங்கள்:<br />
<br />
கொள்ளளவு: 320 GB; 250 GB; 160 GB<br />
<br />
Record Zone எண்ணிக்கை: 24<br />
<br />
இடைமுகம்/வகை: SATA<br />
<br />
வேகம்: 7200 rpm<br />
<br />
எடை: 95 கிராம்<br />
<br />
மேலும் இதைப் பற்றி அறிய, ஹிட்டாச்சி நிறுவன அதிகார்ப்பூர்வ <a href="http://www.hitachigst.com/tech/techlib.nsf/techdocs/5781663792A88E8B8625772F0082E860/$file/TS_Z7K320_DS_final.pdf">டேட்டா ஷீட்டினை</a> தரவிறக்கிப் பாருங்கள்vinohttp://www.blogger.com/profile/03124692495591373673noreply@blogger.com0tag:blogger.com,1999:blog-1749565075288855470.post-39363259787893423242010-07-04T16:53:00.001+05:302010-07-04T17:03:06.063+05:30தமிழ் தொழில்-நுட்ப வலைக்கான டெம்ப்ளேட்தகவல்-நுட்பம் மற்றும் எண்ணியல், அறிவியல் தொடர்பான செய்திகள், ஆய்வுகள், போன்றவற்றை பகிர நினைக்கும் பதிவர்களுக்காக இந்த டெம்ப்ளேட்டினை தமிழில் கஸ்டமைஸ் செய்து இருக்கிறேன்.<br />
<br />
<a name='more'></a>இதற்கான டெம்ப்ளேட் <a href="http://tam-mags-prev.blogspot.com/">மாதிரியை</a> இங்கே காணலாம்.<br />
<br />
design டேப் சென்று, Edit HTML தேர்வு செய்து, பின்னர் Backup/Restore Template பாகத்தில் உள்ள Download Full Template-இனை சொடுக்கி, தங்களது தற்போதைய டெம்ப்ளேட் பத்திரப்படுத்தி வைத்துக்கொள்ளுங்கள். <br />
<br />
<br />
<br />
பின்னர் Choose File பொத்தானை அழுத்தி, <a href="http://www.4shared.com/document/4-6vcb4l/tam-mag.html">இந்த</a> கோப்பைத் தேர்வு செய்து, தரவேற்றம் செய்யவும்.<br />
<br />
<br />
Navigation Bar Setup செய்ய Code-ல் div id='NavbarMenu' என்று தேடி, கிடைத்த Snippet-ல் மாற்றம் செய்துக்கொள்ளவும். உதவி தேவைப்பட்டால் தொடர்வுக்கொள்ளலாம்.<br />
<br />
<a href="http://www.4shared.com/document/4-6vcb4l/tam-mag.html"><img height="100" src="https://blogger.googleusercontent.com/img/b/R29vZ2xl/AVvXsEjURU8fA7GTKjanKQwrhEoIRNCrf_gzT9nMssiQI6xWDx5EcwatcFGa3uSgsH92AaEB0jb4CiDtSXsa7DSdZmGTNkpQmhD7jVxVYI8Aqb9FaAXOdEXs5XFraVZCFoqFVy0MqtghJstnXg8/" width="100" /></a>vinohttp://www.blogger.com/profile/03124692495591373673noreply@blogger.com1tag:blogger.com,1999:blog-1749565075288855470.post-3582285573883208182010-07-04T01:46:00.000+05:302010-07-04T01:46:48.861+05:30கூகிள்-ஆவணங்களில் ஒளி எழுத்துணரி - புதிய வசதி<div style="clear: left; float: left; margin-bottom: 1em; margin-right: 1em;"><img border="0" height="200" src="https://blogger.googleusercontent.com/img/b/R29vZ2xl/AVvXsEg9oKcbRQTfUM5jAhFzJXfVQyMK8NsKnEH5eVZztt5z1th73IJA8Rgyl_-W65oBB3ZXtHXjyo7rt6iVTxiPQCzNckejS8hoN2ukb5JAMtGhrGhh9PbLWM1JA1zro1C1FqnbGU7MBweYILE/" width="200" /></div>சகல வசதிகளைக் கொனர்ந்த வண்ணம் உள்ள கூகிள் நிறுவனம், தற்போது Google Docs என்னும் ஆவண திருத்தி இனைய-நிரலில் இப்போது மிகவும் சிறப்பான வசதி ஒன்றினை அமலுக்கு கொண்டு வந்துள்ளது. ஆங்கிலத்தில் OCR (Optical Character Reading) எனவும் தமிழில் ஒளி எழுத்துணரி என்றும் அழைக்கப்படும் இந்த நுட்ப வசதி, மற்ற ஆண்லைன் ஆவண திருத்தி நிரல்களிடம் இருந்து தன்னை பல அங்குலம் அப்பால் கொண்டு நிறுத்திக் கொண்டது.<br />
<a name='more'></a>இந்த வசதி மூலம், நாம் எழுத்துணராத PDF-ல் இருந்தும், மற்றும் மேவப்பட்ட (Scanned) நிழற்படத்தில் உள்ள எழுத்துக்களில் இருந்தும் எழுத்துக்களை உணரப்பட்டு, அதனை தொகுக்கத் தக்க ஆவனமாக மாற்றம் செய்து அளிக்கிறது.<br />
<br />
<b>எழுத்துணரி அவசியம் தானா?</b><br />
<br />
எழுத்துனரி வசதி தரப்பட்டதன் அவசியம் ஏதேனும் உண்டா என்று கேட்டால், அதற்கு நேரடியான ஒருமித்த கருத்து சொல்ல முடியாது. அனைத்துமே எண்முறை ஆக்கமாக மாறிவரும் நிலையில், பலருக்கு இந்த வசதி தேவைப்படலாம். உதாரணத்திற்கு, ஒரு ஆசிரியர் பல ஆண்டுகள் முன்பு புத்தகம் ஒன்று எழுதி வெளியிட்டார். இப்போது அந்த புத்தகத்தினை தொகுத்த, மேலதிக பதிப்பாக வெளியிட விரும்புகிறார். ஆனால், அப்போது அச்சடித்த புத்தகம் மட்டும் தான் அவரிடம் உள்ள பட்சத்தில், அந்த பக்கங்களை மேவி, நிழற்படத்தைத் கூகிளில் தரவேற்றிவிட்டால், அவருக்குத் தொகுக்கக் கூடிய வகையில் ஆவணம் கிடைத்து விடும். அது மட்டும் அல்லாமல், மேவி உருவாக்கப்பட்ட PDF வகை மின்-நூல்களும் இதே வகையில் பயன்படுத்தலாம். அந்த வகையில், பலருக்கு இந்த வசதி வரவேற்கத்தக்கதாக இருக்கும். பலருக்கு இதன் தேவையே இல்லாமல் இருக்கும்.<br />
<br />
<b>சோதித்ததில்:</b><br />
<br />
<div style="clear: left; float: left; margin-bottom: 1em; margin-right: 1em;"><img border="0" height="287" src="https://blogger.googleusercontent.com/img/b/R29vZ2xl/AVvXsEieUBbzl4dlBRVgnTeWjyIDCl_Lot9R6Gt2-VNvx3PkEC1ad36OHOeI3ajvP-LgTdU8vWxpsoUlbPRO4hnEtjOqQdJeY5mEUYyBNRhncOpp2Wd3FOO5z5DTzEqG8OSbFo68Q1Ce8LHw4Mw/" width="400" /></div><br />
கூகிள் ஆவணம் இந்த வசதியினை அதிக கவனத்துடனே கையாண்டிருக்க வேண்டும். அதனால், அதன் அவுட்புட் நன்றாகவே வந்தது. தரவேற்றம் செய்யும் நிழற்படமே அல்லது மின்-நூலோ, தனது தெளிவு (ரெசொலியூஷன்) அதிகம் ஆக ஆக, மாற்றம் செய்து வரும் ஆவணம் துல்லியமாக வரும்.<br />
<br />
நானே ஒரு நிழற்படம் ஒன்றினை Photoshop கொண்டு உருவாக்கி, தரவேற்றிய பின் பெற்ற அவணத்தில் எந்த பிழையும் இல்லாமல் இருந்தது. இதில் நான் கொரியர் நியூ வகை எழுத்துரு கொண்டு படம் செய்திருந்தேன். பின்னர், டைம்ஸ் நியூ ரோமன் பயன்படுத்திப் பார்த்த போது ஒரு சில பிழைகள் இருந்தன. கொரிய நியூ எழுத்துரு டைம்ஸ் நியூ ரோமன் எழுத்துருவை விட தெளிவாக உள்ளதால் இந்த வேறுபாடுகள்.<br />
<br />
<b>கூகிளின் ஒளி எழுத்தணரி பற்றி எனது கருத்து:</b><br />
<br />
கூகிளின் இந்த வசதி இன்னும் நிறைய மேம்படுத்தப்பட வேண்டும். அதை செய்யாமலேயே பிற மொழிகளிலும் இந்த வசதியைக் கொடுக்க முனைந்துள்ளது பலவீனமே ஆகும்.<br />
<br />
<b>சைடு டிஷ்:</b><br />
மாணவர்களே, உங்கள் assignment இனி எளிதாகி விட்டது. கலக்குங்கள்!vinohttp://www.blogger.com/profile/03124692495591373673noreply@blogger.com6tag:blogger.com,1999:blog-1749565075288855470.post-16576380345027723832010-07-02T10:04:00.000+05:302010-07-02T10:04:19.542+05:30மாற்றி யோசிக்கும் நெறோட் - புதிய டோறன்ட் தேடுதளம்<div style="clear: left; float: left; margin-bottom: 1em; margin-right: 1em;"><img border="0" height="200" src="https://blogger.googleusercontent.com/img/b/R29vZ2xl/AVvXsEhR0iqO9O9hOulcABkfe0fZ8kG-WC_Ek4YMXCtNChQLYigQKf7ry0o579Xs5k-Ub8clrG_NNsXeGNqGlhuTPVjz_5DjH_sKOu09fQFXiUMNHwgA9L7vBoL03QPylK4hHfZHSp9tm3UbAS0/" width="200" /></div>டோறன்ட் பயன்பாட்டாளர்களுக்கு ஒரு மகிழ்ச்சியான செய்தி. டோறன்ட் தேடுதளங்களில் சற்று மாற்றி யோசிக்கும் தேடுதளம் ஒன்று உருவாகி, மற்ற தளங்களில் இருந்து தனது தனித்துவத்தை நிலை-நாட்டியுள்ளது. அவர்களுக்கே ஒரு கசப்பான செய்தியும்: இந்த சேவை தற்சமயம் மூடப்பட்டுள்ளது.<br />
<a name='more'></a>பலருக்கு டோறன்ட் என்பது ஒரு புரியாட புதிராகவே உள்ளது. அதனால், அவர்களுக்கு எந்த டோறன்ட் இறக்கம் செய்து பயனடுத்த வேண்டும் என்று தவிப்பு எப்போதும் உண்டு. seed அதிகம் இருக்க வேண்டுமா? leeches என்றால் என்ன? peer என்றால் என்ன? இதை எல்லாம் இப்போதாவது தெரிந்துக் கொள்ளலாம் என்று டோறன்ட் பற்றித் தெரியாதவர்கள் ஆர்வமாக இருப்பீர்கள். ஆனால் அதைக் கற்க வேண்டிய அவசியம் எல்லாம் காலாவதியாக்கிவிட்டது இந்த <a href="http://www.nerrot.com/">நெறோட்</a>. ஆம், எதற்கு அதெல்லாம் தெரிந்துக்கொள்ள வேண்டும்.<br />
<br />
கிட்ட தட்ட கூகிளின் "I'm Feeling Lucky" அம்சத்தைப் போலவே இந்த தேடல் எந்திரத்தின் செயல்பாடு உள்ளது. நாம் உள்ளிடும் டோறன்டின் பெயரை வைத்து டோறன்ட்களைத் தேடி, அதில் சிறந்தவற்றை ஆராய்ந்து, வரிசைப்படுத்தி, அதில் முதல் டோறன்டினை நமக்கு தகவலிறக்கம் செய்துத் தருகிறது.<br />
<br />
<div class="separator" style="clear: both; text-align: center;"><img border="0" src="https://blogger.googleusercontent.com/img/b/R29vZ2xl/AVvXsEjXCRSqf9ade-_zZAlK9OxtiM4zmjk13gyH1QQhsAH5T9vzYZfdB0uVSSFo-0czlvcvTqXYAxte-6ljxgxx7AgICWmBjiZzcYGvx1-uhOknoTuffNQgPzsCeFR5eyqvMXqXagY_Ia_OI9M/" /></div><br />
<br />
இந்த தளத்தின் மற்றொரு சிறப்பு, தளத்தின் வடிவமைப்பு முழுதும் சுத்தமாகவும், தெளிவாகவும் அமைக்கப்பட்டுள்ளது. விளம்பரங்கள், பாப்-அப் சாளரங்கள் எதுவும் தோன்றி தொல்லைக் கொடுக்காத ஒரே டோறன்ட் தளம் என்னும் பெருமை நெறோட்-டிற்கு தான் சேரும். தள வடிவமைப்பைப் பற்றி,<br />
<br />
<table align="center" cellpadding="0" cellspacing="0" class="tr-caption-container" style="margin-left: auto; margin-right: auto; text-align: center;"><tbody>
<tr><td style="text-align: center;"><img border="0" src="https://blogger.googleusercontent.com/img/b/R29vZ2xl/AVvXsEici55Drs1oUT8DV6qPpB7ffuUKY88jq0d06ji-belgLdDHhSQK_tpeQ4AcaUccZywTF7KYdxkC_SGml3Vm2muTLhkTcC-2cUbkIHwQSt2va7A8wnC5CBfM7c-iuFc_vjDOJqpDA1gZQDg/" style="margin-left: auto; margin-right: auto;" /></td></tr>
<tr><td class="tr-caption" style="text-align: center;"><span class="Apple-style-span" style="font-size: medium;"> நெறோட் உரிமையாளரும், உருவாக்கியவருமான நிகோலஸ் ட்விட்டரில் சொன்ன சேதி</span></td></tr>
</tbody></table><br />
இந்த அதிரடி வருகையால், மற்ற தளங்களுக்கு பாதிப்பு உள்ளதாக கருதி, ஏனைய தளங்களும் நெறோட்டிற்கு உடன்படிய மறுக்கின்றன. இதனால், நிகோலஸ் அவர்கள், மற்ற தளங்களின் நலன் கருதி, நெறோட்டில் சில மாற்றங்கள் செய்து நெறோட்-2 தொகுப்பு வெளியிட முடிவு செய்துள்ளார். இதனால், மற்ற தளங்களுக்கும் தனது வாடிக்கையாளர்களை அனுப்பி வைப்பதாக இப்போதே தனது தளத்தில் உறுதி அளித்துள்ளார். <b>அதுவரை தற்போதுள்ள நெறோட்டினையும் மூடிவிட்டார்.</b><br />
<br />
<b>சைடு டிஷ்:</b><br />
<br />
<ul><li>நிக்கோலஸ் எல்லாவற்றையுமே மாற்றி யோசிப்பார் போல. Torrent என்பதையே திருப்பிப் போட்டு Nerrot என்று பெயரிட்டுள்ளார்.</li>
</ul><ul><li>நெறோட் தளத்திற்கு, ஒரே ஒரு வலைப்பக்கம் மட்டுமே அதுவும் முகப்பு பக்கம் மட்டுமே உள்ளது. உலாவிகளில் இந்த பக்கம் எளிதாகவும், விரைவகவும் ஏற்றப்படுகிறது.</li>
</ul><ul><li>திறந்த-மூல நிரல்களை மேம்படுத்துவோருக்கு வரமாகவும், இறுக்கப்பட்ட மூடிய-மூல நிரல்களை மேம்படுத்துவோருக்கு கலக்கமாகவும், ஹாக்கர்களுக்கு தங்கள் ஆளுமைக்குட்பட்ட ஏரியாவாகவும், இருக்கும்.</li>
</ul><ul><li>"Nerrot: every pirate's best weapon." என்று நொகோலஸ் அவர்களே தனது டிவிட்டர் பக்கத்தில் பகிரங்கமாக அறிவித்தார் என்பதும் குறிப்பிடத் தக்கது.</li>
</ul><br />
நிகோலஸ் தனது நெறோட் தளத்தின் புதிய தொகுப்புடன் வெளிவருவார் என்று நாமும் எதிர்ப்பார்ப்போம்!<br />
<br />
நம்பகமான மூலத்தின் டோறன்ட் பயன்படுத்துவோம், Hack செய்யப்பட்ட நிரல்களைத் தவிர்த்திடுவோம், இணையத்தின் சுதந்திரம் அதில் திளைத்திடுவோம். <br />
<br />
சந்திப்போம்<br />
-வினோ =)vinohttp://www.blogger.com/profile/03124692495591373673noreply@blogger.com1