Thursday, June 02, 2011

வந்தாச்சு கூகிளின் +1 பொத்தான்

இணைய தேடல் பக்கத்தில் மட்டும் வெளியிட்டு சோதனை செய்துக்கொண்டிருந்த கூகிள், இப்போது வெவ்வேறு இணைய தளங்களுக்குள்ளும் பயன்படுத்தும் வகையில் நிரலாக்கிக் கொள்ளும் வசதி கொடுத்துள்ளது.
கீச்சின் மறுபகிர்வு மற்றும் '#' குறி போலவும், முகநூளின் 'விருப்பம்' போலவுமான அமைப்புகள் இணையத்தில் உள்ள தகவல்களை, தனது முக்கியத்துவத்தின் படி முதன்மைப் படுத்த ஏதுவாக இருக்கும். இதனால், கீச்சு மற்றும் முகநூல் ஆகிய நிறுவங்கள் தங்கள் தளத்தில் விளம்பரங்களை முதன்மை வாரியாக தொகுத்து காட்சிபடுத்த முடியும். எடுத்துக்காட்டாக, முகநூளில் 'Icecream' பற்றி எதாவது உங்கள் நிகழ்நிலை புதுப்பித்தால், ஐஸ் கிரீம் தொடர்பான விளம்பரங்களோ அல்லது முகநூல்-பக்கங்களையோ உங்களுக்கு 'பரிந்துரை' பகுதியில் காட்சிப்படுத்தப்படும். ஒரு வேலை, ஐஸ் கிரீம் பற்றி பெரும்பாலானோர் தகவல் பரிமாறி இருந்தால், அங்கு ஐஸ் கிரீம், முகநூளின் முக்கிய தகவல் குரிச்சொல்லாகிறது. இதனால், விளம்பரங்களை வகைப்படுதிக்கொள்ள அவர்களால் முடியும். இதை கீச்சில் 'trend' என்று அழைக்கிறோம்.

ஏற்கனவே, கூகிளை விருந்தினர்களை காலக்கணக்கில் வசப்படுத்தி வைக்க தவறி முகநூல் இந்த விசயத்தில் முதல் நிலைக்கு வந்தது நினைவிருக்கலாம். அதனினும் கவனிக்க வேண்டியது, சமீபத்தில், முகநூல் விளம்பரங்களின் வருமானம், கூகுளின் ஆட்சென்ஸ் விளம்பரப் பிரிவை முந்தி கூகிளை அதிர்சிக்குள்ளாக்கியது. ஏற்கனவே மேலே சொல்லிய முக்கியத்துவம் வாரியாக முதன்மைப் படுத்தப்பட்ட தகவல்கள் முகநூளில் இருந்து பிங் (bing) தேடல் இயந்திரத்திற்கு பயன்படுத்தப்படுத்துவதன், கூகிளின் கருவறையான தேடல் இயந்தரத்தின் மீது அடுத்த குறி வைத்துள்ளது மைக்ரோசாப்ட் - முகநூல் கூட்டணி.

தனது நிலையினை தக்க வைத்துக்கொள்ள, தேடலரசன் கூகிள் கிச்சின் # குறி போலவும், முகநூளின் 'விருப்பம்' போலவும், தனக்கும் ஒரு சமூக-ஊடக ஆயுதம் தேவை என்பதை உணர்ந்தது. அதன் முயற்சியின் விளைவு தன கூகிள் +1.

கூகிள் +1 செயல் விளக்கம்:

இணையத்தில் நாம் உலவும் போது, நமக்கு பிடித்தமான அல்லது நண்பரகளுடன் பகிரக்கூடிய தகவல்களைக் காண நேர்ந்தால், சட்டென இந்த பொத்தானை அழுத்தி விடுகிறோம். இதனால், அந்த இணையதளம்(அதாவது நீங்கள் படித்து அறிந்த பக்கத்தின் URL) உங்கள் நண்பர்களுடன் தற்சமயம் கூகிள் ப்ரோபைல் பக்கத்தில் மூலமாக பகிர்கிறீர்கள். அதே நேரம், கூகிள் தேடல் இயந்திரமானது எந்த இணையப்பக்கங்கள் அதிக அளவில் பகிரப்படுகிறதோ, அந்த இணையப்பக்கங்கள் கூகிள் தேடல் முடிவுகளில் முக்கியத்துவம் பெரும்.

இதை உங்கள் பக்கத்தில் இணைக்க?

* முதலில் இதற்கான script குறியை உங்கள் <head> </head>பகுதியில் இணையுங்கள்.
குறியின் மூல நிரல்:

<script type="text/javascript" src="http://apis.google.com/js/plusone.js"></script>


* பின்னர் +1 பொத்தான் உங்களுக்கு எங்கு வேண்டுமோ அங்கே இணைத்துக்கொள்ளலாம்.
+1 பொத்தான் மூல நிரல்:

<g:plusone></g:plusone>


இணையதள வடிவமைப்பு மேதைகள் இங்கு சென்று மேலும் அறிக.
இணையதள வடிவமைப்பு அதி-மேதாவிகள் இங்கு சென்று மேலும் அறிக.

அப்படியே இங்கயும் ஒரு கிளிக் பண்ணிடுங்க

என்னையும் மதித்து கேள்விகள் கேட்பதாக இருந்தால், கருத்துரைப் பகுதிக்கு வரவும்! ;)

மீண்டும் பதிவிட வந்த மகிழ்ச்சியுடன் விடைபெறுகிறேன். சந்திப்போம் :)

2 கருத்துரைகள்:

Mahan.Thamesh said...

GOOD POST

Tamil Fa said...

மீண்டும் உங்களை சந்திப்பதில் மகிழ்ச்சி...

உங்களுக்கு தொழில் கிடைக்காத கவலையால் நீங்கள் பதிவிடாமல் இருந்ததாக நினைத்தேன். இப்போது தொழில் கிடைத்துவிட்டதா?

மேலும் பதிவுகளை தொடர வாழ்த்துக்கள்.

============

Post a Comment

பட்டதை பட்-னு சொல்லிடுங்க -