அது என்ன வேறு விதம்?
நாம் மின்னஞ்சல் முகவரி ஒன்றினை உருவாக்கி விடுகிறோம். அது பிறருக்கு கொடுக்கவே என்றாலும், அனைவருக்கும் கொடுக்க மாட்டோமே. நம்பத்தகுந்தவர்களுக்கு மட்டுமே கொடுத்து தகவல் பரிமாற்றம் செய்துக்கொள்வோம். அதுவே, நமக்குத் தேவை இல்லாத ஒருவருக்கு நமது மின்னஞ்சல் முகவரி சென்றடைந்துவிட்டால்? நிச்சயம் அது நமக்கு விரும்பத்தகாத ஒன்றாகவே தோன்றும்.
அதில் எனக்கு எந்த பிரச்சனையும் இல்லை, நம் முகவரி மட்டும் தானே மற்றவர்களிடம் பெறப்படுகிறது. கடவுச்சொல் எதுவும் கிடைக்கப்படவே இல்லையே, இதில் என்னப் பிரச்சனை இருக்கிறது என்று நினைப்பவர்கள் கட்டாயம் மேற்கொண்டு படிக்கவும்.
இணையத்தில் மின்னஞ்சல் முகவரி சேமிப்பு அதாவது E-Mail address Harvesting என்று ஒன்று வழக்கில் இருக்கிறது. நாம் மின்னஞ்சல் முகவரியினை எங்குப் பயன்படுத்தினாலும் அங்கேயே குறி வைத்து முகவரியினை சேகரித்துக்கொள்கின்றனர். இதற்குப் பல வழிகள் உள்ளன.
மின்னஞ்சல் முகவரி சேகரிப்பு என்பது இணையத்தில் உலாவுல் இணையப்பயனர்களின் மின்னஞ்சல் முகவரிகளை அவர்கள் விருப்பமில்லாமலோ, அல்லது அவர்கள் அறிவுக்கு கொண்டு சொல்லாமலோ சேகரிக்கும் செயல் ஆகும்
அனைவருமே SPAM பற்றிக் கேள்விப்பட்டிருப்போம். ஸ்பேம் அஞ்சல்கள் நமக்கு வரும் பட்சத்தில் நமது மின்னஞ்சல் முகவிரி யாரோ ஒரு கயவரால் சேகரிக்கப்பட்டுவிட்டதை யூகிக்கலாம். தொடர்ந்து வரும் பட்சத்தில் சேகரிக்கப்பட்டது உறுதியாகிறது.
ஸ்பேம் அஞ்சல்கள் வருவதற்குக் காரணம் என்ன?
இதற்குக் காரணம் சீக்கரமாகவே லாபம் சம்பாதிக்கும் எண்ணம் கொண்ட நிறுவனங்களும், பணம் மீது மோகம் கொண்டுள்ள கள்வர்களுமே காரணம். இவர்கள் நேரடியாக சந்தைக்குள் நுழைந்து வியாபாரம் செய்தோ, விளம்பரம் செய்தோ வருமானம் பெறவதை விட, கொஞ்சம் செலவில், அதிகம் பேரைச் சென்றடையும் மின்னஞ்சல் உத்தியைப் பயன்படுத்துகின்றனர். இதற்காக அவர்கள் பெரிய எண்ணிக்கைகளில் மின்னஞ்சல் முகவரிகளை விலைக்கு வாங்குகிறார்கள்.
மின்னஞ்சல்களை சேகரிப்பவர்கள் இரு விதங்களாக சேகரிக்கிறார்கள். பரவலாகப் பயன்படுத்தப்படும் பெயர்களும், எண்களும் இனைத்து அவர்களே யூகித்த மின்னஞ்சல் முகவரிகள். இவை அனைத்துமே யூகித்த முகவரிகள் ஆதலால் பயன்பாட்டில் உள்ள முகவரிகளாக இருக்க வாயிப்புகள் குறைவு. அதனால், இந்த மின்னஞ்சல் முகவரிகளைப் பயன்படுத்த அவர்கள் விரும்புவதில்லை. இரண்டாம் வகை, உறுதி செய்யப்பட்ட முகவரிகளை சேகரித்தல். இந்த முகவரிகளுக்கு அவர்கள் அதிகம் ஆர்வம் கொண்டு சேகரிக்கின்றனர்.
இந்த வேறுபாட்டிற்கான காரணம், இணையத்தில் பயனர்களின் செய்கைகளை ஆராய்ந்து அவர்கள் கணித்து வைத்திருக்கும் புள்ளிவிபரம் ஆகும்.
அவர்களின் புள்ளி விபரங்களின் படி,,
உறுதி செய்யப்படாத முகவரிகளுக்கு 1000 ஸ்பேம் மடல்கள் அனுப்பும் போது அதில், குறைந்த பட்சம் 1 'இன்பாக்ஸ்'ஆவது ஸ்பேம் தடுப்புகளை மீறி நுழைந்துவிடும். இதுவே, உறுதி செய்யப்பட்ட முகவரிகளுக்கு அனுப்பும் போது குறைந்தபட்சம் 100 இன்பாக்ஸ் சென்றடையும். அதாவது 10 விழுக்காடு இலக்கினை அடைந்து விடுவர். மடல்களைப் பெற்ற 100 பேரில் குறைந்த பட்சம் 10 பேராவது அந்த மடலில் ஆர்வம் காட்டுகின்றனர். அதில் ஒருவராவது கயவரிடம் சிக்கிக் கொள்வார். இதன் மூலம், 1000 ஸ்பேம் அனுப்புவதன் மூலம், கயவர்களுக்கு 10 அமெரிக்க டாலர்கள் லாபம் கிடைக்கிறது என்கிறது அந்த கணக்கீடு
இதனால், 1000 மின்னஞ்சல் முகவரிகளுக்கு ஒரு விலை என்று நிர்ணயம் செய்து வியாபாரம் செய்வதெற்கென பல வியாபாரிகள் உள்ளனர். உதாரணத்திற்கு, இவர் 20,000 உறுதி செய்யப்பட்ட மின்னஞ்சல் முகவரிகளை எங்கேயோ சேகரித்து அதை விற்கவும் தயாராகிவிட்டார். எதிர்பாராத விதமாக நமக்கு அதன் விலையினை விசாரிக்க முடியாமல் போனது.
எப்படி சேகரிக்கின்றனர்?
எப்படி தடுக்கலாம்?
இரண்டாம் பகுதியில் தொடரும்...!
2 கருத்துரைகள்:
சமூகம் தெரிந்துகொள்ள வேண்டிய விஷயம். உங்கள் அக்கறைக்கு நன்றி.
நல்லா சதியை ஆரம்பிச்சிட்டு இப்படி பாதியில விட்டுடீங்களே..
Post a Comment
பட்டதை பட்-னு சொல்லிடுங்க -