Thursday, July 22, 2010

ஃபயர்ஃபாக்ஸ் நீட்சிகள் பாதுகாப்பனவையா?

இணைய உலாவிகள் பல எண்ணிக்கைகளில் வெளிவந்த வண்ணம் இருந்தாலும் பெரும்பாலான பயனர்களுக்கு தங்கள் விரும்பத்தக்க உலாவி ஃபயர்ஃபாக்ஸ் உலாவியாகத் தான் இருக்கிறது. இதன் காரணம் ஃபயர்ஃபாக்ஸ் உலாவியின் வேகம் மட்டுமல்ல. விதவிதமாக நாம் விரும்பும் வகையில் விரும்பும் வசதியுடன் பயன்படுத்த மொசில்லா நிறுவனம் தரும் ’நீட்சிகள்’ வசதியும் தான். ஃபயர்ஃபாக்ஸ், நீட்சிகளின் பயனால் இணைய உலாவிகளிடம் இருந்து தம்மை வெகு தொலைவில் கொண்டுப் போய் நிறுத்திக் கொண்டது.

Wednesday, July 21, 2010

கீ லாகிங் - இணையக் கள்வர்களிடம் இருந்து காத்துக்கொள்வோம் - 1

இணையத்தில் நமது கணக்கைனை களவாடும் கள்வர்கள் அதிகமாகி வருகின்றனர். இந்த சமயத்தில் நமது கணக்கினைக் காத்துக்கொள்வது பற்றி நாம் தெரிந்துக் கொள்ள வேண்டும். கணக்குக் களவாடல் எந்தெந்த வழிகளில் நடக்கிறது என்று நாம் ஏற்கனவே இங்கே சொல்லி இருந்தோம். அங்கே சொல்லப்பட்ட வழிகளில் ஒன்றான கீ லாகிங் முறையைப் பற்றியும் அதைத் தடுப்பது பற்றியும் இங்கே பகிர்வோம்.

Sunday, July 18, 2010

மின்னஞ்சல் முகவரி சேமிப்பு (E-Mail Harvesting) என்றால் என்ன?

தனிநபர் இரகசியம் என்ற ஒரு விடயத்தில் மட்டும் நான் விட்டுத்தரவே மாட்டோம். என்ன தான் இணையத்தில் கலந்துப் போய் இருந்தாலும் நமது தனிப்பட்ட விபரங்களை நம் நன்பர்கள் கேட்டாலும் சொல்வதாக இல்லை. என்ன தான் முன்னெச்சரிக்கையுடன் இருந்தாலும், பல சமயங்களில் நம்மையும் மீறி நம் தனி-நபர் விடயங்கள் மற்றவர்களால் களவாடப்பட்டுவிடும். பெரும்பாலும் நாம் பயன்படுத்தும் கடவுச்சொற்கள் தான் அதிகம் களவாடப்படுகிறது நாம் எண்ணிக் கொண்டிருக்கிறோம். ஆனால், பிரச்சனை வேறு விதமாகவும் வருகிறது.

Friday, July 16, 2010

டிவிட்டர் தேவை தானா?

சமூக வலதளங்களில் தனக்கென ஒரு இடத்தினை பிடித்துக் கொண்டிருக்கும் வலை தளம் இந்த டிவிட்டர். ஃபேஸ்புக் போன்ற சமூக தளங்களுடன் வேறுபடுத்திக் காட்டிக் கொள்ளும் இந்த வலைதளத்தினை உபயோகிப்பவர்களின் என்னிக்கை நாளுக்கு நாள் உயர்ந்துக் கொண்டு வருகிறது. எதற்காகத் தான் இந்த டிவிட்டர் என்று சிந்தித்துப் பார்த்தேன். இது நம் அன்றாட இணைய வாழ்விற்கு அவசியமான ஒன்று தானா? யார் இந்த 'பின்பற்றுவோர்கள்'? அவர்களுக்கு நம் கருத்து எந்த வகையில் உதவும் என்று சிந்தித்தேன். டிவிட்டரால் யார் சாதித்தது என்ன? மிஞ்சிப் போனால் எனக்கு இந்த பதிவு போட காரணமாக இருக்கிறது டிவிட்டர். சிந்தித்ததன் விளைவாக தோன்றிய கருத்துக்களை இங்கே பதிவுலகில் பகிர்ந்துக் கொள்கிறேன்.

இந்தியாவின் உலாவி - எபிக் பிரவுசர்

இந்தியாவிற்கென்றே தயார் செய்துள்ள உலாவியான எபிக்-பிரவுசர் வெளிவந்துள்ளது. பெங்களூருவைத் தலைமையகமாகக் கொண்டுள்ள Hidden Reflex என்னும் மென்பொருள் நிறுவனம் இந்த உலாவி நிரலை வடிவமைத்து நிரலாக்கம் செய்துள்ளனர். இந்த உலாவியின் மூல நிரல்கள் மொசில்லா நிறுவனத்தின் ஃபயர்ஃபாக்ஸ் உலாவியினுடையது என்பது குறிப்பிடத்தக்கது. இது இந்தியாவிற்கென்றே தயாரித்தது மட்டுமின்றி, மற்றொரு சிறப்பும் உண்டு.

குரோமில் பல மின்னஞ்சல் கணக்குகள் - கூகிளில் அறிமுகம்

பெரும்பாலான ஜி-மெயில் மின்னஞ்சல் பயனர்கள் பெரிதும் விரும்பும் ஒரு வசதியை அறிமுகம் செய்துள்ளது கூகிள் நிறுவனம். நம்மில் ஏறத்தாழ அனைவருமே ஒன்றிற்கும் அதிகமாக ஜி-மெயில் வைத்திருப்போம்.

Thursday, July 15, 2010

தமிழில் ஜாவா முயற்சி - நகைச்சுவை

நேற்று ஒரு சுவாரசியமான மின்னஞ்சல் ஒன்றினை தோழி ஒருவர் அனுப்பி இருந்தார். சுவாரசியமாக மட்டுமல்லாமல் நகைச்சுவையாகவும் இருந்தது. நாம் செய்யும் ஜாவா நிரலாக்க மொழியினை தமிழில் மொழிப் பெயர்க்க முயற்சியினை அந்த மின்னஞ்சல் மூலமாக பகிர்ந்துள்ளனர். அதனை நம் வலைப்பூ மூலம் பகிர்கிறோம். படித்து ரசியுங்கள். இது மின்னஞ்சலில் வந்ததே அன்றி எனது படைப்பல்ல என்று மீண்டும் சொல்லிகொள்கிறேன்.

ஃபோட்டோஷாப் (1) - செதுக்கப்பட்ட எழுத்துக்கள்

இதற்கு முன், ஃபோட்டோஷாப் பாடமாக அந்த பதிவும் செய்ததில்லை. அதனால், இம்முறை சிறிய முயற்சியாக இந்த முறை செய்கிறேன். சரியாக வரும்பட்சத்தில் தொடர்ந்தும் இந்த வகை பதிவுகள் இடுவோம்.

இணைய வடிவமைப்பில் பிரபலமாகி வரும் ஸ்டைல் தான் Engraved Text" என்று அழைக்கப்படும் செதுக்கப்பட்டது போல தோற்றமளிக்கும் எழுத்துக்கள். தலைப்பிற்கோ அல்லது பொத்தானின் வடிவமைப்பிலோ இது பெரும்பாலும் பயன்படுத்தப் படுகிறது. இதை எவ்வாறு செய்வது என்பதை பார்ப்போம்.

Tuesday, July 13, 2010

4k (2304p) துல்லிய காணொளிகள் - யூடியூப்-ன் அகல கால்?

போன வருடம் கூட தொலைக்காட்சிகள் எல்லாம் கேபிள் டிவி முறையில் தான் இயங்கிக் கொண்டிருந்தன. என்னமோ தெரியவில்லை, பொழுதுபோக்குத் துறையில் என்ன ஒரு அசுர வளர்ச்சி. பொருளாதார வீழ்ச்சியில் இருந்து உலகம் மீண்டு எழத் தொடங்கி ஆறு மாதம் கூட ஆகவில்லை. சரி, ரஜினிக்கும் இதுக்கும் என்ன சம்மந்தம் என்று யோசிக்காதீர்கள். மேலே கீழே?! :( படியுங்கள்

Monday, July 12, 2010

பைரேட்-பே டோறன்ட் இணையதளம் பயன்படுத்துகிறீர்களா? இதை கவனியுங்க!

என்ன ஆச்சு தெரியுமா? பைரேட்-பே என்னும் டோறன்ட் இணையதளம் ஒன்று ஹாக்கர்களால் கடந்த ஏழாம் தேதி மாலை 8 மணியளவில்(ஏறத்தாழ) தனது சேவையகம், தகவல் கூட்டமைப்பான DataBase ஆகியவை முடக்கப்பட்டது. டோறன்ட் பயன்படுத்தும் நண்பர்களுக்கு இந்த இணையதளம் கட்டாயம் தெரிந்திருக்கும். தெரியாதவர்கள் தெரிந்துக் கொள்ளுங்கள். பைரேட்-பே (Pirate Bay) என்னும் இணையதளம்.

Thursday, July 08, 2010

பட்ஜட் மொபைல் வாங்க குறிப்புகள்

இப்போதெல்லாம் அலைபேசி இல்லை என்று சொல்வது எல்லாம் ஆச்சரியப்படும் விஷயமாகிவிட்டது. வசதிற்கேற்ப அவரவர் தனக்கென்று ஒரு அலைபேசியை வாங்கி கையில் வைத்துக் கொண்டு தான் தங்கள் தனிமையை போக்கிக்கொள்கின்றனர். இன்னும் சிலர், அலைபேசிக்காகவே தன்னை தனிமைப்படுத்திக் கொள்கின்றனர் என்பது வேதனையான விசயம். அறிவியல் கண்டுபிடிப்புகளை சரியாக உபயோக்கிக்காமல் தவறான-முறையில்/தவறாக உபயோகிப்பது அறிவீனமான செயல் என்றுக் கருதுகிறேன். இந்த தத்துவத்துடன் தலைப்புக்கு வருவோம்.

Tuesday, July 06, 2010

நன்பர்களுக்கு 'தொப்பி' கொடுக்க Scripts ரெடி!

உங்கள் நன்பர் உங்களுக்கு அப்பப்போ தொப்பி கொடுக்கிறாரா? பதிலுக்கு பதில் தொப்பிக்கு தொப்பி கொடுக்கலாம் வாருங்கள். பின்வரும் 4 வழிகளில் ஒன்றினைத் தேர்ந்தெடுத்து அவரது கணினியில் இயங்கவிட்டுவிடுங்கள். கணினி விஷயத்தில் அந்நியாயத்துக்கு அப்பாவியாக இருந்தால், மெயிலிலேயே அனுப்பிவிடுங்கள்.

கணினிகளுக்கு தீங்கு விளைக்கும் 6 வித வைரஸ்கள்

கணினியினை பயன்படுத்துவதை விட, அதைப் பாதுகாத்து வைப்பதே பெரிய வேலையாக இருக்கிறது. எப்படி தான், மனைவியைக் கூட புறம் தள்ளிவிட்டு இந்த கணினிகளுக்கு அடிமையாகிறார்களோ தெரியவில்லை. "உமக்கு என்னய்யா அக்கறை? அதிலெல்லாம தலையிடாதே!!" என்று அதட்டுவது எனக்கு கேட்டுவிட்டதால் நேராக விசயத்திற்கே வந்திவிடுவோம்.

Monday, July 05, 2010

உலகிலேயே சிறிய 7mm HDD

ஹிட்டாச்சி நிறுவனம் வெறும் ஏழு மி.மீ. தடிமன் அளவே கொண்ட வன்-தட்டினை அறிமுகப்படுத்தியுள்ளது. தகவல் நினைவகம் மற்றும் வன்பொருள் தயாரிப்பில் தொடர்ந்து தனது இடத்தை தக்க வைத்து வரும் ஹிட்டாச்சி நிறுவனம் இந்த புதிய கண்டுபிடிப்பை நிகழ்த்தியுள்ளது. மடிகணினி மற்றும் உள்ளங்கை அளவுக் கணினிகளின் வடிவமைப்புக்கி இந்த கண்டுபிடிப்பு முகவும் உபயோகக் கரமாக இருக்கும் என்பதால் இந்த வன்-தட்டு வன்பொருளிற்கு துறையில் பெரிய அளவில் வரவேற்புக் கிடைத்துள்ளது.

Sunday, July 04, 2010

தமிழ் தொழில்-நுட்ப வலைக்கான டெம்ப்ளேட்

தகவல்-நுட்பம் மற்றும் எண்ணியல், அறிவியல் தொடர்பான செய்திகள், ஆய்வுகள், போன்றவற்றை பகிர நினைக்கும் பதிவர்களுக்காக இந்த டெம்ப்ளேட்டினை தமிழில் கஸ்டமைஸ் செய்து இருக்கிறேன்.

கூகிள்-ஆவணங்களில் ஒளி எழுத்துணரி - புதிய வசதி

சகல வசதிகளைக் கொனர்ந்த வண்ணம் உள்ள கூகிள் நிறுவனம், தற்போது Google Docs என்னும் ஆவண திருத்தி இனைய-நிரலில் இப்போது மிகவும் சிறப்பான வசதி ஒன்றினை அமலுக்கு கொண்டு வந்துள்ளது. ஆங்கிலத்தில் OCR (Optical Character Reading) எனவும் தமிழில் ஒளி எழுத்துணரி என்றும் அழைக்கப்படும் இந்த நுட்ப வசதி, மற்ற ஆண்லைன் ஆவண திருத்தி நிரல்களிடம் இருந்து தன்னை பல அங்குலம் அப்பால் கொண்டு நிறுத்திக் கொண்டது.

Friday, July 02, 2010

மாற்றி யோசிக்கும் நெறோட் - புதிய டோறன்ட் தேடுதளம்

டோறன்ட் பயன்பாட்டாளர்களுக்கு ஒரு மகிழ்ச்சியான செய்தி. டோறன்ட் தேடுதளங்களில் சற்று மாற்றி யோசிக்கும் தேடுதளம் ஒன்று உருவாகி, மற்ற தளங்களில் இருந்து தனது தனித்துவத்தை நிலை-நாட்டியுள்ளது. அவர்களுக்கே ஒரு கசப்பான செய்தியும்: இந்த சேவை தற்சமயம் மூடப்பட்டுள்ளது.

Thursday, July 01, 2010

மின்னல் வேக Firefox 4.0b1 புதுசு கண்ணா புதுசு!

இந்த இணைய உலாவிகளின் போட்டிகள் பற்றி சொல்லி முடிக்க முடியாது. ஒருவருக்கு ஒருவர் முந்திக் கொண்டு போர் பந்தய வாகனம் போலப் பறப்பதைப் பார்த்து இணைய உலகமே அவ்வபோது அதிர்கிறது. அந்த வரிசையில் இப்போது Firefox 4 உலாவியின் முதல் beta பதிப்பு வெளியிடப்பட்டுள்ளது.

Blog Archive