Thursday, July 01, 2010

மின்னல் வேக Firefox 4.0b1 புதுசு கண்ணா புதுசு!

இந்த இணைய உலாவிகளின் போட்டிகள் பற்றி சொல்லி முடிக்க முடியாது. ஒருவருக்கு ஒருவர் முந்திக் கொண்டு போர் பந்தய வாகனம் போலப் பறப்பதைப் பார்த்து இணைய உலகமே அவ்வபோது அதிர்கிறது. அந்த வரிசையில் இப்போது Firefox 4 உலாவியின் முதல் beta பதிப்பு வெளியிடப்பட்டுள்ளது.
லினக்ஸ் மற்றும் இலவச திறந்த-மூல நிரல்களை விரும்புவோர் மத்தியில் மகிழ்ச்சியும் உற்சாகமும் பெருகியுள்ளது. காரணம், இப்பதிப்பில் மொசில்லா நிறுவனம் பல மேம்பாடுகளைச் செய்துள்ளது. குறிப்பாக இதன் வேகம்! பிந்தைய பதிப்புகளைக் காட்டிலும் இது குறிப்பிடத் தக்க வேகம் கொண்டு உலாவ வழி செய்கிறது. இதன் முழு பதிப்பு வெளிவரும் போது, மற்ற உலாவி நிரல்களை பின்னுக்கு தள்ளலாம் என்று எதிர்பார்க்கப் படுகிறது.


இது பீட்டா-வின் முதல் பதிப்பு என்பதால் என்னற்ற நிரழ்ப்பிழை உள்ளது. சோதனை செய்யவே இந்த பதிப்பு வெளியிடப்பட்டுள்ளது என்பதால், பதிவிறக்கம் செய்து பயன்படுத்திப் பாருங்கள். ஆனால், பயனர் ஐ.டி. மற்றும் கடவுச்சொல் ஆகியவை உள்ளிடும் போது கவனமாக இருக்க வேண்டும்.

vino's Café இந்த பதிப்பை சோதித்து பார்த்த போது மாற்றங்கள் மற்றும் மேம்பாடுகள் என்னன்ன என்பதைப் பற்றி அலசுவோம்.

தற்போதைக்கு நாம் இந்த பதிப்பில் கானும் மேம்பாடுகள்:

1. GUI என சொல்லிக்கூடிய பயனர் இடைமுக வடிவமைப்பில், Firefox தனது தனித்துவத்தை விட்டுக்கொடுத்துவிட்டது. இதன் காரணம் என்ன என்று தெரியவில்லை. குரோம் உலாவியினை ஒத்து இருப்பதால் குரோம் பயன்படுத்துவோருக்கு இந்த இடைமுக வடிவமைப்பு அறிதாக இருக்காது.

2. Windows TaskBar-ல் preview பார்க்கும் போது இன்டெர்-நெட் எக்ஸ்ப்லோரர் மற்றும் குரோம் உலாவிகளைப் போல, Tab-களை பிரித்து தனித்தனியே பார்க்க முடியும்.

3. ஆர்குட் தளம் தனது புதிய இடைமுகம் அறிமுகப் படுத்தியது எல்லோருக்கும் தெரியும். இந்த புதிய இடைமுகம் இந்த பதிப்பில் தோன்றாமல், பழைய இடைமுகம் மட்டுமே தோன்றுகிறது.

4. பீட்டா பதிப்பு என்பதால் எந்த addon-னையும் இனைக்க முடியவில்லை.

5. ஒரு வலைப்பக்கம் இறக்கம் செய்யும் போது, Tab தலைப்பின் முன்னர் ஒரு வட்டமான வடிவத்தில் நிரைவேறும் அளவினை நிகழ்-நேரத்தில் தோன்றுகிறது. இது பழைய பதிப்புகளில், Status Bar-ல் தோன்றும்.

இவை தான் தற்சமயம் அறிய முடிந்த மேம்பாடுகள் (அல்லது) மாற்றங்கள். இதை இன்னும் ஆராய்ந்து மேலும் சில அறிந்த விடயங்களை பகிர்வோம் என எதிர்பார்க்கலாம்.

இங்கே தகவலிறக்கம் செய்துக்கொள்ளுங்கள்

இனிமையான அனுபவம் திறந்த-மூல நிரல்களில் மட்டுமே..

-வினோ =)

8 கருத்துரைகள்:

Anonymous said...

Please send your new posts' link to youthful@vikatan.com as soon as you post them in your blog. they may publish in their blogs corner

vino said...

sent a mail to the ID with Blog title and its link. Is this enough? was that right?

Anonymous said...

Right. Please continue to do it for every new post without delay.

Anonymous said...

you have to give the link for that specific new post. not the blog name link.

vino said...

yes, I sent the exact post link to them!

Anonymous said...
This comment has been removed by a blog administrator.
VJ 279 said...

மிகவும் நன்றாக உள்ளது.
www.dailypcnews.blogspot.com

suri said...

வாசகர்கள் பயனபெற்று மகிழ நல்ல முயற்ச்சி

Post a Comment

பட்டதை பட்-னு சொல்லிடுங்க -

Blog Archive