Wednesday, July 06, 2011

கூகிள் பிளஸ் வருகை - மேலும் இணையத்தில் புரட்சிகள்

சமூக வலைதளத்தில் சிறந்த நிரலாக்க வழிமுறைகளை, கட்டுமானங்களையும் கொண்டவை கூகிள் வேவ் மற்றும் முகநூல் மட்டுமே. கூகிள் வேவ் சரிந்ததும், முகநூல் உச்சத்திற்கு செந்ததும் கூகிள்-ற்கு பெரிய பின்னடைவை ஏற்படுத்தி உள்ளதாக இணைய உலக மேதைகள் கருதினர். எந்திரன் பாணியில், 'என்னை யாராலயும் அழிக்க முடியாது' என்கிற கர்ஜனையுடன் உலகம் முழுவதும் தனது வலைக்குள் கொண்ட கூகிள் நிறுவனம் முற்பட்டதான் விளைவே கூகிள் பிளஸ்.

கூகிள் பிளஸ் தொடக்கம் மற்றும் அதனை தொடர்ந்து நடக்கும் மாற்றங்கள் குறித்து பதிவு எழுதினால், பல பதிவுகள் கேட்கும் என்பதால் ஒரே பதிவில் முடிந்த வரை சுருக்கமாக சொல்லி முடித்து விடுகிறேன். மேலும் பெரும்பாலானோருக்கு தெரிந்த 'யடா யடா'-வை தீவிர்த்துக் கொள்கிறேன்.

கூகிள் தனது கூகிள் பிளஸ் வெளியிட்ட பிறகு, அதனை தனது பிரதான சேவையாக எடுத்துக்கொள்ள முடிவெடுத்துள்ளது. இதனை அடுத்து, மற்ற கூகிள் சேவைகளான மின்னஞ்சல், பதிவர், மற்றும் பிகாசா, ஒர்குட், மற்றும் தனது 'கிளவுட் கம்ப்யூட்டிங்' அடிப்படையில் வழங்கும் சேவையான 'டாகுமெண்ட்ஸ்' ஆகியவை கூகிள் பிளஸ் தரத்திற்கு மாற்றதித் துவங்கி உள்ளனர்.

இதன் முதல் கட்டமாக கூகிள் காலண்டரை பிளஸ் தரத்திற்கு மெருகேற்றி உள்ளதை நாம் பார்திருப்போம். இரண்டாம் கட்டமாக தனது மிகப்பெரிய சேவையான கூகிள் தேடல். இதனையும் பிளஸ் தரத்திற்கு முன்னேற்றி உள்ளது. மூன்றாம் கட்டமாக மின்னஞ்சல் சேவை. ஜிமெயில் இடைமுகத்தினை பிளஸ் தரத்திற்கு மற்றும் பணி மும்முரமாக நடைபெற்று வருகிறது. ஜிமெயில் தீம்ஸ்-இல் இரண்டு புதிய தீம்ஸ்-இணை வைத்து ஓரளவு புதிய இடைமுகத்தினை பழக்கிக் கொள்ளலாம்.

பிளாக்கர் பெயர் மாற்றம்?
கூகிள் தனது சேவைகள் அனைத்தையும் பெயரளவிலும் தரம் உயர்த்த முடிவெடுத்துள்ள நிலையில், ப்ளாகர் தளம் 'கூகிள் பிளாக்ஸ்' என்றும், பிகாசா தளம் 'கூகிள் போட்டோஸ்' என்றும் பெயர் மாற்றம் செய்ய முடிவெடுத்துள்ளது. இந்த மாற்றத்திற்கு பின்னர், கூகிள் பிளஸ் உடன், பிகாசா போல பிளாக்கர் தளத்தினையும் இணைப்பதாகத் தெரிகிறது.

அடுத்து, முகநூலின் ரியாக்சன்!
பிளஸ் சேவை தொடங்கிய மறுநாளே மார்க் ஜக்கர்பர்க் அவர்கள் வரைவில் தானும் முக்கிய சேவை ஒன்றை தரப் போவதாக அறிவித்துள்ளார். இது முகநூலில் வீடியோ சாட் வசதியாகவோ அல்லது முகநூலின் அலைப்பேசிக் கருவி integration (தமிழ் சொல் பரிந்துரைக்கவும்) ஆகவோ இருக்கலாம் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

முகநூலின் வெற்றிக்கு காரணமாகிய 'சமூக விளயாட்டுக்களை' பிளஸ்-இலும் விரைவில் கொண்டு வரப்படும் என்று கூகிள் அறிவுத்துள்ளது.

மேலும், வர்த்தக நிறுவனங்கள் முகநாளின் 'பேஜ்' வசதியினை பயன்படுத்தி வரும் நிலையில், பிளஸ்-இலும் பிசினஸ் பேஜ்-இணை விரைவில் காண முடியும். இந்த பக்கங்கள் கூகிள் ஹாட்பாட் சேவையுடன் இணைத்து செயல்படுவதால், பயனாளர்கள் தங்களுக்கு வேண்டிய உணவகங்களோ, விடுதிகளோ, மருத்துவனைகளோ கூட அலைபேசி மூலம் தனக்கு அருகில் உள்ள இருப்பு விவரங்களை நண்பர்கள் பரிந்துரைகள் உட்பட அறிந்துக்கொள்ள முடியும். இதனால், முகநூல் பெரிதும் பாதிப்படைய நேரிடும் என்பது கிட்டதட்ட உறுதியாகி விட்டது.

டிவிட்டர்:
சமீபத்தில் ட்விட்டருடன் கூகிள் வைத்துக் கொண்ட உடன்படிக்கை காலாவதி ஆனதால், கூகிள் தேடலில் 'latest' மற்றும் 'realtime' ஆகியவை நீக்கப்பட்டுள்ளன. பிளஸ் பொது சேவை தொடங்கிய பிறகு, பிளஸ்-இன் பப்ளிக் பகிர்வுகள் கூகிள் realtime-ற்கு பயன்படும் என்று தெரிகிறது.

பிளஸ் அழைப்பிதழ்:

மின்னஞ்சல் மூலம் நமது நண்பர்களை அழைப்பதினை கூகிள் நிறுவனம் பிளாட்பார்ம் ஸ்டெபிலிட்டி கருதி நிறுத்தி வைத்துள்ளது. இருந்தும் உங்கள் நண்பர்களை நீங்கள் அழைக்கலாம். ஆம், உங்கள் நண்பர்களை உங்கள் நட்பு வட்டங்களில் சேர்த்து விட்ட பின்னர், அவர்களுடன் ஏதேனும் பகிரும் போது, அவர்களுக்கு மின்னஞ்சலில் அந்த பகிர்வு சென்றடையும். அந்த மின்னஞ்சலையே அவர் அழைப்பிதழாக பயன்படுத்தி இணைந்துக்கொள்ள முடியும்.

கூகிள் பிளஸ் நட்பு வட்டாரங்கள் பற்றி விரைவில் காண்போம்.

கூல் தானே? ம்ம்ம்... கூல்!

இண்ட்லி-யின் ஓட்டளிப்புப் பட்டை இங்கே இயங்க வில்லை:( விரும்பினால் இண்ட்லி தளத்திற்கு சென்று ஓட்டளியுங்கள் நண்பர்களே