Wednesday, June 30, 2010

கூகிள் Vs ஃபேஸ்புக்: இணையத்தின் அடுத்த சூடான போர்?

அமெரிக்காவில் கேம்ப்ரிட்ஜ் எனும் ஊரில் Mark Zuckerberg என்று ஒரு மாணவர் இருந்தார். ஹார்வார்ட் பல்கலைகழகத்தில் தனது படிப்பை பாதியிலேயே தூக்கி எறிந்தார். அவருக்கு அந்த பட்டம் தேவைப்பட்டிருக்கவில்லை. அப்படி தூக்கி எறியும் அளவிற்கு அவரிடம் என்ன இருந்தது? விடுதியில் தங்கி படித்தார்.

Monday, June 28, 2010

HDTV வாங்க போறீங்களா? பயனுள்ள குறிப்புகள்

தொலைக்காட்சி சாதனப் பெட்டி கண்டுபிடித்த நாள் முதல் பல தலமுறைகளைக் கடந்துவிட்டது. கேதோட்-ரே-டியூப் எனப்படும் CRT தொலைக்காட்சிப் பெட்டியின் கருப்பு-வெள்ளை தொகுப்பில் தொடங்கி இன்று HDTV வரை வந்துவிட்டோம். HDTV பற்றி அறியும் முன் சில தொலைக்காட்சி நுட்பங்களைப் பற்றி முதலில் அறிந்துக் கொள்வோம்.

Saturday, June 26, 2010

இந்திய கரண்சிக்கு புதிய குறீயீடா?

இந்திய கரண்சிக்கென தனி அடையாளச் சின்னம் ஒன்று ஆயத்தமாகி உள்ளது. டாலர் ($), பவுண்டு(£), யென்(¥) போன்ற கரன்சிகள் தனக்கென தனி அடையாளச் சின்னம் கொண்டுள்ளது. இது போல, இந்தியாவின் கரன்சிக்கென ஒரு அடையாளச் சின்னம் உருவாக்க நடுவன் அரசாங்கம் முடிவெடுத்திருந்தது. இதன் முயற்சியாக அடையாளச் சின்னம் உருவாக்குவதற்காக நாட்டின் பலவேறு வடிவமைப்பாளர்களிடம் போட்டி முறையில் தேர்வு நடைப்பெற்றது. அவற்றில் சிறந்ததாக 5 சின்னங்கள் தேர்ந்தேடுக்கப் பட்டுள்ளன.

Saturday, June 19, 2010

சிறந்த பத்து சிண்ணங்களின் இரகசியங்கள்

நிறுவனங்கள் தங்கள் வாடிக்கையாளர்களிடமும், நுகர்வோரிடமும் முதல் அபிப்பிராயம் ஆழ்ந்ததாகவும், வலிமையாக இருக்க உதவுகிறது அவைகளில் சின்னங்கள். பெயர் வைப்பதில் எவ்வளவு கவனம் வேண்டடுமோ அதே கவனம் சின்னத்திலும் செலுத்துதல் அவசியம். சிலர், பெயரினும் அதிக கவனம் சின்னத்தை அலங்கரிப்பதிலே இட்டு,

Friday, June 11, 2010

கூகிள் தேடலில் சுவாரசியம்


சுவாரசியமான பதிவு. உலகில் பெரும்பாலானோரைக் கவர்ந்த நிறுவனம் எனும் பெயர் வாங்கிய கூகிள் பற்றிய பதிவு. கூகிள் தனது வேகத்தாலும், சேவைகளாலும், கொள்கைகளாலும் நம்மைக் கவர்ந்தாலும் இங்கே இன்னமும் சில சுவாரசியமான கூகிளை சீண்டிப் பார்க்கக் கூடிய விஷயங்கள். நம்மில் பலருக்குத் தெரிந்திருக்கும். இருந்தாலும், ஓட்டளித்து தெரியாதோர்க்கும் கொண்டு சேரச் செய்யுங்கள்.

Tuesday, June 08, 2010

நோக்கியாவின் மடிகணினி அறிமுகம்


அலைபேசி வர்த்தக உலகின் ஜாம்பவானாக வலம் வரும் நோக்கியா நிறுவனம் அண்மையில் மடிகணினி வர்த்தகத்தில் இறங்கப் போவதாக அறிவித்துள்ளது.

Saturday, June 05, 2010

ஆர்குட் கணக்கினை ஹாக்கர்ஸிடம் இருந்து காக்க


ஆர்குட் கணக்கினை ஹாக்கர்ஸிடம் இருந்து காப்பது பற்றி பார்ப்போம். இந்தியாவில் பெரிதளவில் சாதித்த சமூகவலை இணையம் ஆர்குட்டாக தான் இருக்க முடியும். ஃபேஸ்புக், டுவிட்டர் போன்றவையெல்லாம் சமீபத்தில் தான் இந்தியாவில் பரவலாகப் பயன்படுத்தப்படுகின்றன. எத்தனை இணையம் வந்தாலும், பெரும்பாலானோர் தற்சமயம் விரும்பி பயன்படுத்துவது ஆர்குட் மட்டுமே. ஆர்குட் இணையம் முழுக்க முழுக்க JAVASCRIPT மூலமாக வடிவமைக்கப்பட்டுள்ளது.

Wednesday, June 02, 2010

இணையம்+தொலைக்காட்சி = கூகிள் டிவி


இணையத்தில் கால் பதித்த நாள் முதல் கூகிள் இழுத்த மூச்சுடன் இன்னமும் முதல் இடத்தில் உள்ளது மட்டும் அல்லாது, எந்த போட்டி நிறுவனமும் முந்த முடியாத தொலைவில் தான் வண்டி ஓட்டிக் கொண்டிருக்கிறது. அந்த வரிசையில், கூகிள் கால் பதித்துள்ள இடம் தான் "கூகிள் டிவி". இதைப் பற்றி விரிவாக அலசுவோம்.

Tuesday, June 01, 2010

மொமைல் கேமரா மூலம் அழகாய் படம் எடுக்க குறிப்புகள்

நம்மில் பலர் புகைப்படம் எடுப்பதில் ஆர்வம் அதிகம் இருந்தாலும், தன்னிடம் சொந்தமாக ஒரு டிஜிட்டல் கேமரா இருக்காது. எனினும், முயன்ற அளவு திருப்திகரமான புகைப்படங்களை நம் அலைபேசியில் உள்ள கேமரா மூலம் சுட முடியும். அதற்கான சில சின்ன சின்ன வழிமுறைகள்.வெளிச்சம் தேவை:


பல அலைபேசிகளில் உள்ள கேமராக்களில் ஃப்ளாஷ் இல்லாத்தால் புகைப்படங்கள் இருளான சூழலில் சுடுவது கடினம் தான். அலைபேசிகளில் உள்ள கேமரா பொருத்தமட்டில் வெளிச்சம் ஒரு பெரிய பிரச்சனையாகவே உள்ளது. படம் எடுக்கும் போது நீங்கக் எடுக்க போகும் பொருள் (subject) குறைந்தபட்சம் வெளிச்சம் தெளிவாக இருக்க வேண்டும். பளீச் என மின்ன வேண்டாம். அதே சமயம் இருளாகவும் இருந்து விடக் கூடாது. நம் கண்கள் போல் அல்ல கேமராக்கள். ஆக, நமக்கு தெரியும் ஒளி கேமராவிற்கு தெரியாது. பல வெளிச்சங்களில் புகைப்படம் எடுத்துப் பாருங்கள். பிறகு ஒளி அளவின் தேவைப் பற்றி அறிய முடியும். விளக்குகளும் பயன்படுத்துங்கள். சரியான அளவினான ஒளியுடன் கூடிய விளக்குகள் subject மீது ஒளிக்கச் செய்து படங்கள் எடுக்கலாம். subject-இன் பின்புறம் உள்ள வெளிச்சம் subject மீது உள்ள வெளிச்சத்தை விட குறைவாக இருக்க வேண்டும். இதில் அதிக கவனம் தேவை.

அசையாத நிலை அவசியம்:

ஒவ்வொரு கேமராவிற்கும் உள்ள பண்பு நலன்களில் shutter speed முக்கியமானது. ஷட்டர் ஸ்பீட் என்பது, கேமரா ஒளியினை தன் உள்ளே ஊடுறுவ அனுமத்திக்கும் காலம் என்பதனை குறிக்கும். ஒரு தரமான கேமரா என்றால் குறைந்த பட்சம் 1/200 வினாடி கால அவகாசம் மட்டுமே ஒளி உள்ளே செல்ல அனுமத்திக்கும். இதனால், அசையும் பொருளினை படம் எடுத்தாலும், அது நிற்பது போலவே காட்சி அளிக்கும். அலைபேசியில் உள்ள கேமராக்களில் ஷட்டர் ஸ்பீட் அதிகமாகவே இருக்கும். வெளிச்சம் குறைவான சூழலில் இது இன்னும் அதிகமாக் இருக்கும். எனவே, முடிந்த வரை நீங்கள் எடுக்க போகும் subject எந்த காரனத்தாலும் அசையாமல் பார்த்துக்கொள்ளுங்கள். கையில் பிடித்து படம் எடுக்கும் போது சில சமயம் கை நடுங்கும். நடுங்காவிட்டாலும், 'க்ளிக்' செய்யும் போது கண்டிப்பாக அசையும். அதனால், அனைத்து கேமராக்களிலும் டைமர் (timer) எனும் வசதி தரப்பட்டிருக்கும். அதில் 5 வினாடி (உதாரனமாக்) அமைத்துவிட்டு, 'க்ளிக்' செய்துவிட்டு நிலையான இடத்தில் சப்ஜக்ட் நோக்கி வைத்து விடுங்கள். 10 வினாடிகளில் தானாக 'க்ளிக்' செய்துக்கொள்ளும். subject-ம் கேமராவும் அசையாத பட்சத்தில், தெளிவான படம் கிடைப்பது உறுதி.

Zoom வேண்டவே வேண்டாம்:

subject உங்கள் படத்தில் எவ்வளவு அருகில் வேண்டுமோ அவ்வளவு அருகில் சென்று படம் எடுங்கள். Zoom என்பது தூரத்தில் உள்ள நமது subject அருகில் சென்று எடுப்பது போன்ற உணர்வினைத் தரவே பயன்பட்டாலும், அதில் இரண்டு வகை உள்ளது. ஒன்று- ஆப்டிக்கல் ஜூம்: இது, ஒரு ஜோடி லென்ஸ் தனக்குள் இருக்கும் தூரத்தை அதிகப்படுத்தி, தொலைவில் உள்ள பொருளினை அருகில் இருப்பது போல் காட்டும். இதனால், படம் எடுக்கும் போது zoom செய்யப்பட்ட ஒளி மட்டுமே கேமரா உள்ளே செல்கிறது. இரண்டாம் வகை: டிஜிட்டல் ஜூம்: இது, தொலைவில் இருக்கும் பொருளை தொலைவிலேயே படம் எடுத்து, அதை pixel enlargement செய்யும். அதாவது, ஒரு பிக்ஸலில் உள்ள விவரம் (definition) ஒன்றிற்க்கு மேற்பட்ட பிக்ஸல் தேவைப்படும் விதம் பெரிதாக்கி கொள்ளும். இதனால், படத்தின் துள்ளியம் குறைகிறது. அலைபேசிகளில், டிஜிட்டல் ஜூம் எனப்படும் அம்சம் மட்டுமே காணப் படுகிறது( சமீபத்தில் ஸ்பைஸ் மொபைல் ஆப்டிகல் ஜூம் வசதியுடன் அலைப் பேசியினை அறிமுகப்படுத்தி உள்ளது). எனவே, டிஜிட்டல் ஜூம் வசதியினை முடிந்த வரை தவிர்த்து பொருளின் அருகில் சென்று படம் எடுங்கள். "என்னய்யா..? அப்புறம் எதுக்கு இந்த டிஜிட்டல் ஜூம்னு ஒன்னு இருக்கு' என்றால், அதன் அவசியம் தவிர்க்க முடியாத சில சமயங்களில் தேவையே படுகிறது. உதாரணத்திற்கு, தொலைவில் உள்ள பொருளினை படம் எடுக்கப் போகிறீர்கள் என வைத்துக் கொள்வோம். அந்த பொருள் எதிர் வீட்டில் உள்ள உங்கள் காதலி என் வைத்துகொள்வோம்(சும்மா வைத்துகொள்வோம்). அவள் அவளது அறையில் இருக்கிறாள், நீங்கள் உங்கள் ஜன்னலில் இருந்து படம் எடுக்கிறீர்கள். இருவர் வீட்டிற்கும் இடையில் உள்ள திறந்த வெளியினால், ஆதவன் உங்கள் காதலியின் பிரகாசத்தை குறைத்துவிடுவான். அப்போது, இந்த ஜூம் வேறு வழி இல்லாமல் பயன்படுத்தியே தீர வேண்டும். ஜன்னல் வரை ஜூம் செயவதால், இடையில் உள்ள வெளிச்சம் காணாமல் போகும், இதனால் கேமரா தானாகவே வெளிச்சம் அதிகப்படுத்தி, காதிலையை அவர் இருப்பது போல் பிரகாசமாகவே காட்டும்( ஐடியா தவறான வழியில் பயன்படுத்தப்பட்டால் கம்பெனி பொறுப்பல்ல!). தவிர்க்க முடியாத சூழல் தவிர முடிந்த வரை ஜூம் வசதி வேண்டவே வேண்டாம்.

Automatic தவிர்த்துவிடுங்கள்:

டிஜிட்டல் கேமராக்களில்ஆட்டோ எனும் வசதி தரப்பட்டிருக்கும். இது, "white balance" எனும் வசதியின் கீழ் இருக்கும். white balance என்பது நீங்கள் படம் எடுக்கப் போகும் பொருளினை, நிறம் மாற்றாம் இல்லாமல் எடுக்கவே. இதை auto modeல் வைத்து விட்டு அதன் பயனே தெரியாமல் படம் எடுக்காதீர்கள். நீங்கள் இருக்கும் சூழல், விளக்கின் நிறம் பொருத்து பொருளின் நிறம் மாறி தோன்றும். இதனால், நீங்கள் white balance பயன்படுத்தி உண்மையான நிறம் அல்லது, வேண்டிய நிறத்தில் படம் எடுக்கலாம். இருளில் கூட அதாவது தேவையற்ற புள்ளிகள் (grains) ஏதும் கூட இல்லாமல் படம் எடுக்க முடியும். அதுவும் இல்லாமல், mood-ற்கு தகுந்தவாறும் நிறம், தோற்றம் மாற்றி அமைக்கலாம். இதில் பல ஆய்விகளை நீங்களே நடத்திக் கொள்ளுங்கள். மிகவும் பயனுள்ளதாகவும், சுவாரசியமாகவும் இருக்கும்.

அதிகபட்ச resolution:

உங்கள் கேமராவில் உள்ள அதிகபட்ச ரெசொல்யூஷன் செட் செய்யுங்கள். பிறகாலத்தில் எடிட் செய்வதற்கு உதவியாக இருக்கும். படத்தின் விவரமும்(definition) அதிகமாகவும், துள்ளியமாகவும் இருப்பதால், படத்தில் மாற்றங்கள் செய்யும் போது ஏற்படும் விவர நட்டம் (reduced definition) குறைவாகவும், வேண்டாத பெரிய மாற்றங்கள் ஏதும் ஏற்படாமலும் இருக்கும். ஒரு 2 megapixel கேமராவின் அதிகபட்ச resolution 1600 பிக்ஸல் அகலமும், 1200 பிக்ஸல் உயரமும் இருக்கும். இதனை, 1600x1200(அகலம்xஉயரம்) என்ற முறையின் கீழ் குறிக்கப்படும்.

ஒரே பொருள், பல முறை:

ஒரு பொருளை படம் எடுக்கும் போது, ஒரு முறை எடுத்து, அது திருப்திகரமாய் இருந்தாலும் மேலும் பல முறை சுட்டுக் கொள்ளுங்கள். அலைபேசியில் உள்ள திரையில் தோன்றும் பிரகாசம், கனிணி திரையில் தெரியாது. எனவே, அலைபேசியின் திரையினைப் பார்த்து ஏமார்ந்து விடாதீர்கள். பல படங்கள் எடுப்பதன் மூலம், கனிணியில் அனைத்தையும் பார்த்து, அவற்றில் இருந்து ஒன்று தேர்ந்தெடுக்க வசதியாக இருக்கும். ஃபில்ம் ரோல் தேவை இல்லாததால், தேவையற்ற படங்களை பின்னர் அழித்து விட்டு, நினைவினை மீள பெற முடியும். எனவே, சிக்கனம் பார்க்காமல் சுட்டுத் தள்ளுங்கள்.

மற்றும், கேமரா லென்ஸினை அவ்வபோது சுத்தம் செய்துக்கொள்ளுங்கள். மூக்குகண்ணாடி துடைக்கப் பயன்படும் துனி, காது குடையும் காட்டன் பட்(cotton bud) ஆகியவை கேமராவினை துடைக்க சிறந்த பொருட்கள்.

பின்குறிப்பு:

நெனச்ச நேரத்துல, அப்பப்ப பார்க்கும் அறிய விஷயங்கள ஃபோட்டோ எடுக்றதுக்கு தான் ஃபோன்ல கேமரா இருக்கு. இவ்வளவும் பண்ணிக்கிட்டிருந்தா எப்புடினு நெனக்கரவங்களுக்கு,

அசப்பில் சில அழகான தருனங்கள் வரும் போது, 'எனக்கும் அதே ஃபீலிங் தான்'.

சந்திப்போம்,
-வினோ.