Sunday, September 12, 2010

கீச்சுக்கு போட்டியாக மீமீ - களத்தில் குதிக்கிறது யாஹூ

WOW! என்றும் கூட இன்னும் சில மாதங்களில் இணைய உலகம் முழங்கிக் கொண்டிருக்க நேரலாம். சமூகவலைதளத்தில் கூகிளினைப் போலவே தொடர் தோல்வியைத் தழுவி வந்த யாஹூ நிறுவனம் இப்போது கையில் எடுத்துள்ள ஆயுதத்திற்கு meme என்று பெயரிட்டுள்ளது. குறுவலைச்சரம் என்று தன்னை அறிமுகப்படுத்திக்கொள்ளும் யாஹூ மீமீ உண்மையிலேயே டுவிட்டரைத் தூக்கும் திறன் படைத்தது என்றால் மிகையாகாது.

Wednesday, September 08, 2010

கூகிளின் DOODLE! திட்டம் யூகிக்கப்படுகிறது!!

நேற்று கூகிளின் UK டொமைனில் கூகிளின் இலட்சனை எவ்வாறிருந்தது என்று பகிர்ந்தோம். இன்று அதன் இலட்சனை சற்று வினோதமாக இருந்தது. இணையப்பக்கத்திற்கு சென்றதும் வண்ணமயமான கூகிள் இணையதளம் இன்று வண்ணமே இல்லாமல் இருந்தது. கூகிள் எனும் பெயர் வெறும் கருப்பு வெள்ளையில் தெரிந்தது. இன்றைய வடவமைப்பின் காரணம் யூகிக்கக் கூடியதாக இருக்கிறது.

Tuesday, September 07, 2010

கூகிளின் புதிய HTML5 ஆக்கப்பூர்வமான இலட்சனை!

கூகிள் வலைப்பக்கத்தில் இன்று வடிவமைத்துள்ள இலட்சனை பெரும் வரவேற்பைப் பெற்றுள்ளது. கூகிள் தனது பிறந்த நாள் எதிர்வருதை அடுத்து இந்த இலட்சனை வடிவமைத்து இருக்கலாம் என்றுக் கருதப்படுகிறது. தற்சமயம், அதாவது நான் இந்த பதிவினை எழுதும் நேரம், இந்த இலட்சனை கூகிளின் UK டொமைன்-இல் மட்டுமே காண முடிகிறது.

Sunday, September 05, 2010

அலைபாயும் கூகிள் Wave

கடந்த 2009-ஆம் ஆண்டு பெரிய அளவில் இணைய உலகினைக் கலக்கியது கூகிளின் வேவ் எனும் ப்ரோஜக்ட். இணைய மேம்பாடடாளர்கள் இடையே பெரும் வரவேற்பினைப் பெற்ற வேவ் பல புரட்சிகர அம்சங்ளைத் தன்வசம் கொண்டிருந்தது. சமூக வலைத்தளங்களில் பின் தங்கி இருக்கும் கூகிள், அதே சமூக வலைதளங்களின் இடையே மிகவும் உபயோககரமான செயற்பாடுகள் மேற்கொள்ளுமாறு வடிவமைத்து வெற்றி அடைய எடுத்த பெரிய முயற்சி தான் இந்த வேவ்.