இன்று மாடிக்கு மாடி டிஷ் வைக்கப்பட்டுள்ளது, எந்நேரமும் அளவில்லா இணைய வசதி இனைப்பு பெருமளவில் எடுத்துக்கொள்ளப்பட்டுள்ளது என முன்னேறி வரும் நிலையில், இணையதளங்களும் தம்மை மேம்படுத்தி தலைமுறை மாற்றத்திற்கு ஈடு கொடுத்தவன்னம் உள்ளன. காணொளிகளை இணையத்தில் வழங்கும் இணையதளத்தில் முக்கியமானது அனைவருக்கும் தெரிந்த யூடியூப் தான். கடந்த ஆறு திங்களுக்கு யூடியூப் இணையதளம், தனது HD உயர் துல்லிய காணொளி சேவையை கொடுத்துக் கொண்டிருக்கிறது. 3D காணொளிகளும் யூடியூபில் பார்க்கலாம் என்பதும் சிலருக்கு பலருக்குத் தெரிந்திருக்கும். அதிகபட்சமாக 1080p அளவிலான துல்லியமான காணொளிகளை வழங்கி வந்த யூடியூப் இணையதளம், இப்போது அகல கால் வைத்துள்ளது. பொதுவாக 4k (நான்காயிரம்) என்று அளவிடப்படும் இந்த துல்லிய காணொளிகள் 4096x2304 அதாவது 2304p அளவான காணொளிகளை வழங்கத் தொடங்கி உள்ளது. 1080 காணொளிக் கேமராக்களின் விலை வீழ ஆரம்பித்து இருக்கும் இந்த காலக்கட்டத்தில், யூடியூபின் இந்த 2304p அளவு துல்லிய காணொளி சேவை, மீண்டும் கேமராக்கள் சந்தையில் ஒரு பாதுப்பு உருவாகும் என எதிர்ப்பார்க்கலாம். அதுவும், இந்த வகை அதி-உயர் துல்லிய காணொளிகள் உருவாக்கி இணையதளத்தில் வெளியிட யூடியூப் நிறுவனமே பொருளாதார உதவி செய்யவிருப்பதாக அறிவித்துள்ளது. இன்னும் சில ஆண்டுகளில், இணையத்தில் 2304p காணொளிகளின் பயன்பாடு அதிகம் காணப்படும் என எதிர்ப்பார்க்கலாம்.
உதாரணத்திற்கு இந்த காணொளி:
இது 2304p அளவிலான அதி-உயர் துல்லிய காணொளி யூடியூப் தளத்தில் இருந்து. எம்பெட் செய்யப்பட்ட காணொளிகள் அதி-உயர் துல்லிய அளவுகளை வழங்காததால், http://youtu.be/feXigKevTFU சொடுக்கிப் பாருங்கள். PIXAR நிறுவனத்திற்காக இந்த காணொளியை வடிவமைத்தவர், தான் 3D rendering மென்பொருள் கொண்டு இந்த காணொளியை உருவாக்கியதாகவும், 8 நொடிகள் ஓடும் இந்த காணொளியின் நினைவக அளவு 11 GB இருந்ததாகவும், இதனை தொகுக்கும் திறன் கொண்ட மென்பொருள் கிடைக்காததால் அதனை அப்படியே தரவேற்றம் செய்துவிட்டதாகவும் தெரிவித்திருக்கிறார்.
சைடு டிஷ்:
- நமது கணினித் திரையில் 720p மற்றும் 1080p இரண்டிற்குமே வேறுபாடு உணர நம்மால் முடியாது. எனவே, இதனைக் காணும் போது பெரிதும் வித்தியாசம் உணர முடியாது.
- 2304p அளவு துல்லிய காணொளிகளை 25அடிகள் நீளமான திரையில் தெளிவாக காண முடியும். இதை, நமது 17 அங்குல திரையில் பார்க்க வேண்டியது அவசியம் தானா?
- நமது உச்ச நட்சத்திரம் நடித்து வெளியான சிவாஜி திரைப்படத்தின் "ஒரு கூடை சன் லைட்" பாடல் 4k துல்லிய அளவில் சுடப்பட்டு, தொகுக்கவும் செய்யப்பட்டது என்பது இங்கே குறிப்பிட்டே ஆக வேண்டும்
- இந்தியாவின் விதிமுறைகள் படி, பெரும்பாலும் உபயோகிக்கப்படும் திரைகளின் துல்லிய அளவு, 800x600 மட்டுமே. மற்றும், குறைந்த பட்சம் 256 kbps வேகம் கொண்டிருக்கும் இனைப்புகள் அகல அலைவரிசை வகை சார்ந்தவை எனவும் இருக்கிறது. இதை ஏன் இந்த தலைப்புல் குறிப்பிட வேண்டும் என்று நீங்களே யூகித்துக் கொள்ளுங்கள்.
கடற்கரைக்குப் போனால் கூட ஒரு சுண்டல் சாப்பிட்ட பேப்பரைப் போட்டு விட்டு வருவோம். இங்கே என்ன செய்யப் போகிறீர்கள்? :P
2 கருத்துரைகள்:
good info !!
தமிழ் செய்திகள்,விளையாட்டு,சினிமா,பொழுதுபோக்கு.
ur phone supported tamil font then
join this channel u will get tamil SMS.
ON ETAMILMINT to 09870807070
(Indian Mobile user only)
Post a Comment
பட்டதை பட்-னு சொல்லிடுங்க -