நீண்ட நாட்களாக ட்ராஃப்டில் வைத்திருந்த பதிவு. ஃபேஸ்புக் இந்தியாவின் முன்னனி என்ற அங்கீகாரம் பெற்றதைத் தொடர்ந்து இந்தப் பதிவினை முடித்துவிட முடிவு செய்துவிட்டேன். இதற்கு முன்னர் டுவிட்டரைப் பற்ற ஒரு பதிவு போட்டு மாபாதகம் செய்தேன். இப்போதும் அதனையே செய்கிறேன். பிடித்திருந்தால் share or like on facebook என்றுக் கேட்கவில்லை. பயனர்கள் விழிப்புடன் செயல்படுவது நல்லது. பவர் யூசர்ஸிற்கு பிரச்சனை இல்லாவிட்டாலும், 20.9 மில்லியன் பயனர்களும் பவர் யூசர்ஸ் அல்லர்.
இணையத்தின் ஜாம்பவான் என்று அழைக்கப்படும் கூகிள் நிறுவனம், பல வகை இணையதளங்களில் முன்னனியில் வகித்தாலும் சமூக வலையமைப்புத் தளம் என்று வரும் போது எழ எழ சறுக்கி விழுகிறது.
'இல்லாத ஊருக்கு இலுப்பைப் பூவும் சர்க்கரை' என்பது போல இந்தியாவில் இணையம் பூக்கப் போகும் காலத்தில் கூகிள் இந்த ஓர்கட் என்னும் சமூக வலைத்தளத்தினை கொண்டு வந்தது. அப்போது மின்னஞ்சல் சேவையில் புரட்சி செய்ததன் பயனாக பெரும்பான்மையான கூகிள் பயனர்கள் ஆர்குட்டில் இனைவதால் தனது பழைய நன்பர்களை எளிதில் தேடிக் கண்டுக்கொள்ளலாம் என ஓர்கட்டிற்கு படை எடுத்தனர் அத்தனை இந்திய இணையப் பயனர்களும். தன் நன்பர்களை தேடிக் கொடுத்த ஓர்கட், ஒத்த மனவலைக் கொண்ட மக்களினிடையே அறிவுப் பகிர்வு ஏற்பட குழுமங்களை அளித்ததும் அதற்கு ஒரு கூட்டல் (+ve).
தனிக்காட்டு ராஜாவாக வலம் வந்துக்கொண்டிருந்த ஓர்கட், இனி இக்காடு தனிக்காடு இல்லை என்பதை உணர அதிகமாகவே அவகாசம் எடுத்துக்கொண்டது. இந்நிலையில் ஃபேஸ்புக் என்ற அகில உலக உச்ச நட்சத்திரம் வந்து நமது இந்திய உச்ச நட்சத்திரமான ஓர்கட்டினை சீண்டி எழுப்பியது. அப்படியும் விழித்துக்கொள்ள மறுத்துவிட்டது. எந்த நேரத்திலும் ஓர்கட் பயனர்கள் தம்மை விட்டு நீங்க மாட்டார்கள், கூகிள் தொடர்புகளுடன் பினைந்துள்ளதால் ஓர்கட் தவிர்க்க முடியாததாகிவிடும் என்றே எண்ணி இருக்க வேண்டும்.
இந்நிலையில் ஓர்கட்டிற்கு விழுந்த முதல் அடி 'தனி-நபர் இரகசியம் காத்தல்' என்னும் கதாயுத தாக்குதல். இப்போது வரை இந்த அடியினை மறக்காமல் இருக்கிறது. ஆம், நீங்கள் ஓர்கட்டின் பயனர் எனும் பட்சத்தில், ஓர்கட்டில் நீங்கள் பகிரும் தகவல்களின் தனி-நபர் இரகசியம் காக்கப்படும் என்பதில் சந்தேகமே இல்லை.
ஃபேஸ்புக்கின் அசுர வளர்ச்சி:
உண்மையாக ஃபேஸ்பிக்கினை யாரும் தேடிச்செல்லவில்லை. ஃபேஸ்புக் பல வகைகளில் ஓர்கட்டினைக் காட்டிலும் உயர்ந்ததல்ல என்றே சொல்வேன். அதிலும், தனி-நபர் இரகசியம் காக்கப்பட வேண்டுமெனில் பணம் தரக் கேட்கும் ஃபேஸ்புக் முன்பு கூகிளின் தனி-நபர் இரகசிய காப்புக் கொள்கை உயர்ந்த இடத்தில் உள்ளது. தனி நபர் இரகசியங்களைக் காப்பதில் அதிகம் கவணம் கொண்ட கூகிள் அதுவே தனக்கு எதிரான அம்பு என்பதையும் ஏற்கனவே அறிந்திருக்கலாம்.
ஃபேஸ்புக் எவ்வாறெல்லாம் இந்தியாவில் முதலிடம் தொட்டிருக்கும்?
> பெரும்பாலான 2G மற்றும் 3G சேவை நிறுவனங்களுடன் கொண்டிருக்கும் டை-அப். இதனால், தங்களது பயனர்களுக்கு ஃபேஸ்புக்கினைப் பல நிறுவனங்கள் வலியுறுத்தின.
> பெரும்பாலான அலைபேசி, கையடக்கக் கனினி, மடிகணினி ஆகியவற்றின் உற்பத்தியுடன் கொண்டிருக்கும் டை-அப். இதனால் அவ்வாறான எந்திரங்கள் ஆர்குட்டினை விட ஃபேஸ்புக்கினையே இயக்க எளிமையாக (எ.கா.: One touch fb launch) இயக்க வகை செய்கின்றன.
> மற்ற வர்த்தக நிறுவனங்களும் ஃபேஸ்புக்கின் தனி நபர் இரகசியம் என்னும் ஓட்டையினை வைத்து பல தகவல்களைத் திரட்டத் தொடங்கின. நமக்கு AXE Dark பிடித்திருந்தால் உபயோகிக்கலாமே, அதை ஏன் நாம் ஃபேஸ்புக்கில் விரும்ப(like) வேண்டும். இதனால், நிறுவனங்களுக்கு இலவசமாக விளம்பரம் ஏற்படுகிறதல்லவா?
> நேரம் கொல்லிகளான விளையாட்டுக்களும், இதர நிரல்களும் ஃபேஸ்புக்கின் வளர்ச்சிக்கு பெரிய அளவில் உதவி இருக்கின்றன (zynga போன்றவைகள்). விளையாட்டுகளில் பெரும்பாலான நேரம் செலவழித்து, இணையத் தகவல் பரிமாற்றத்தினை தேவை இல்லாமல் வீணடிக்கிறது என்பது எல்லோரும் அறிந்ததே.
> பயனர்களின் விசயங்களை மூன்றாமவர்களான இணையமேம்பாட்டாளர்களுடன் பகிர்ந்துக் கொள்ளல். நன்பர் ஒருவர் தம்மைப் பற்றிக் கூறியுள்ளதாகவும், அதனை அறிந்துக்கொள்ள தனது கணக்கு விவரங்களைப் பகிரத் தேவை எனவும் சொல்லும் போது பெரும்பாலானோர் அதனை அறிய ஆவலோடு தகவல் இயக்க உரிமை அளித்துவிடுகின்றனர். இது போன்ற அழைப்புகள், ஃபேஸ்புக்கில் இல்லாதவர்களுக்கும் மின்னஞ்சல் மூலம் அனுப்பப்படுவதால் பலர் இதில் சேர முனைகின்றனர். பயன்? ஒன்றுமே இல்லை!
> வர்த்தகம்! 'ஃபேஸ்புக் கிரெடிட்ஸ்' என்று தனக்கென்று இணையத்தின் பணமாற்றம் செய்யும் சேவையினை ஃபேஸ்புக் பயனர்களிடம் அளித்துள்ளது. விருப்பம் இருப்பவர்கள் பயன்படுத்தலாம். விருப்பம் அல்லாதோருக்கு எதற்கு 15 கிரெடிட்ஸ்களை வாரித்தர வேண்டும்?
> யாரோ, யாரிடமோ, என்னவோ கேட்டால், அதற்கு அவர் என்னவோ பதில் அளித்துவிட்டுப் போகப்போகிறார். அதனை உலகம் அறியக் கொண்டுப் போய் சேர்ப்பது எனும் செயலிலேயே ஃபேஸ்புக்கின் தரம் குறைந்துவிட்டது.
ஓர்கட்டிற்கு இந்த நிலை எதனால்?
> மேம்பாடுகள் வெகு மந்தமாக செயல்பட்டதால் பயனர்களுக்கு அலுத்துப் போய் இருக்கலாம். அதிலும் சில மேம்பாடுகள் பயனர்களுக்கு பிடிக்காதவையாக இருந்தன.
> முழுக்க முழுக்க ASP தொழில் நுட்பப் பயன்பாட்டால் எளிதில் 'கனக்குக் களவாடல்' ஏற்பட்ட காலத்தில் ஓர்கட்டின் இயலா நிலை. பெரும்பாலும் குப்பை எனப்படும் SPAM தகவல்கள் பரப்பப்படுவதை கட்டுப்படுத்தப்படாத சூழ்நிலை.
> மேலே ஃபேஸ்புக் கையாண்ட பல செயற்பாடுகளைக் கையாளாமை.
வர்த்தகம் என்பதைத் தாண்டி, போதிய வருமானத்துடன் சேவை அளித்து வந்த ஓர்கட்டினை ஓரங்கட்டிவிட்டு வர்த்தகர்கள் எனும் திமிங்கலங்கள் வாழும் சமுத்திரத்தில் பயனிக்கும் படகுகளாகப் பயனர்கள் இருக்கின்றனர். தன்னைக் காப்பாற்றிக் கொள்ள, தன்னையும் திமிங்கலமாக மாற ஓர்கட்டும் சில நடவடிக்கைகள் எடுக்கத் துவங்கியுள்ளது. அவைப் பற்றி விரைவில் அலசுவோம்
-வினோ
Subscribe to:
Post Comments (Atom)
2 கருத்துரைகள்:
நல்ல பதிவு..
அருமையான பதிப்பு
Post a Comment
பட்டதை பட்-னு சொல்லிடுங்க -