Sunday, September 05, 2010

அலைபாயும் கூகிள் Wave

கடந்த 2009-ஆம் ஆண்டு பெரிய அளவில் இணைய உலகினைக் கலக்கியது கூகிளின் வேவ் எனும் ப்ரோஜக்ட். இணைய மேம்பாடடாளர்கள் இடையே பெரும் வரவேற்பினைப் பெற்ற வேவ் பல புரட்சிகர அம்சங்ளைத் தன்வசம் கொண்டிருந்தது. சமூக வலைத்தளங்களில் பின் தங்கி இருக்கும் கூகிள், அதே சமூக வலைதளங்களின் இடையே மிகவும் உபயோககரமான செயற்பாடுகள் மேற்கொள்ளுமாறு வடிவமைத்து வெற்றி அடைய எடுத்த பெரிய முயற்சி தான் இந்த வேவ்.

கூகிள் வேவ் தளத்தில், நவீன முறையில் வேண்டிய வகையில் வடிவமைத்து மின்னஞ்சல் அனுப்ப இயலும், பலருடன் இனைந்து கலந்துரையாட முடியும், புகைப்படம், காணொளி, மற்ற இனையதளம் ஆகியவற்றை இனைத்துப் பகிர முடியும், நமது ப்ரோஜக்ட் முதலியவற்றின் செயற்பாட்டினை சரியாக Track(தமிழ் சொல் பரிந்துரை செய்க) செய்ய உதவும், மேலும் பல வேவ் அல்லாத மற்ற நிரல்களையும் வேவ் மூலம் பயன்படுத்த முடியும்.

சொடுக்கி முழுதாகப் பார்த்தால்
எவ்வாறு நிகழ் நேரத்தில் இணைவாக்கத்தில்
ஈடுபட வேவ் உதவியது என்று அறியலாம்
எல்லாவற்றையும் விட, வேவ்-இல் மிகவும் மகத்துவம் வாய்ந்த அம்சம் அன்பது, நிகழ் நேர இணைவாக்கத்தில் ஈடுபட முடிடும். இதற்கென புதியதாக ஒரு இணைப்பு முறை நிரல் (Protocol) ஒன்றினை பிரத்தியேகமாக உருவாக்கினர். மேம்பாட்டளர்களின் முன்னோட்டத்தின் பிறகு சில மாதங்களுக்கு முன்னர் தான் சோதனைப் பதிப்பு (Beta) வெளியானது. ஆனால், பயனர்களிடம் போதிய வரவேற்பு கிடைக்கவில்லை. சிலர் தொடர்ந்து வேவ்-இனை பயன்படுத்தி வந்தாலும் ஏறக்குறைய பெரும்பாலான இணையப் பயனாளர்கள் இதனை பயன்படுத்திப் பார்க்கக் கூட விருப்பம் காட்டவில்லை. பெரும் அளவில் பொருளாதார முதலீடு செய்த கூகிள் நிறுவனம், தற்போது வேவ் தளத்தினை மூடி விட முடிவு செய்துள்ளதாக அறிவித்துள்ளது.

கூகிளின் இந்த திடீர் முடிவிற்குக் காரணமும் இருக்கின்றன. என்னைப் பொருத்த வரையில், இந்த வேவ் இணைப்பு முறை அடுத்த இணையத் தலைமுறைக்கு ஏற்றதாக இருந்திருக்குமே தவிர, தற்போதுள்ள பயனர்களைக் கவரும் வகையில் அது எளிதானதாக வடிவமைக்கப்படிவில்லை. கல்வி சார்ந்த பலருக்கு இந்த தளம் சோதனைப் பதிப்பிலேயே பெருமளவில் உதவி இருக்கிறது. ஆனால், ஏனையப் பயனர்களுக்கு வேவ்-இன் செயற்பாடுகள் பற்றி அறிய சிரமமாகவே இருந்திருக்கிறது. மேலும் இதற்கென நேரத்தை செலவிடவும் பெரும்பாலானோர் விரும்பவில்லை. இதன் விளைவாக கூகிள் நிறுவனம் இந்த முடிவினை எடுத்துள்ளதாக அறிவித்துள்ளது.

தற்போது கூகிள், புதிய அறிக்கை ஒன்றினை அறிவித்துள்ளது. அதாவது, கூகிள் வேவ் தளத்தில் செய்றபாடுகள் முடக்கப் பட்டாலும் இந்த தொழில் நுட்பத்தினை தனது மற்ற சேவை தளங்களில் பயன்படுத்த முடிவெடுத்துள்ளது. முதல் படியாக இப்போதே கூகிள் ஆவணங்கள் தளத்தில் இந்த சேவையினை வழங்கி உள்ளனர். இதற்கு பயனாளர்களிடையே குறிப்பிடும் அளவிற்கு வரவேற்பும் கிடைத்துள்ளது. இது, வேவ் இணைப்பு முறையினை நிரலாக்கம் செய்த வல்லுனர்களுக்கு ஆறுதலையும் உற்சாகத்தினையும் அளித்துள்ளது. விரைவில், வேவ் பல கூகிள் தளங்களில் பயன்பாட்டிற்கு வரும்.

மற்ற தளங்களில் வேவ் இணைப்பு முறையினைப் பயன்படுத்தும் போது இந்த நுட்பத்தினை 'Wave in a Box' என்று அழைக்கிறது.

சைடு டிஷ்:

1. கடந்த ஆகஸ்ட் மாதத்தில் 2 சமூக வலைதளத்தின் நிரலமைப்பு நிறுவனங்களான angstro மற்றும் Social Desk ஆகிய நிறுவனங்களை வாங்கி உள்ளது

2. Slide எனப்படும் புகழ்ப்பெற்ற ஆவணப் பகிர்வு தளத்தினையும் சென்ற மாதத்திலேயே வாங்கி உள்லது.

3. வேவ் தொழில்-நுட்பத்தினை மற்ற தளங்களில் பயன்படுத்த உள்ளது.

4. சமீபத்தில் கூகிள் நிறுவனம் தனது தனி-நபர் காப்புக் கொள்கையினை சீர் திருத்தம் செய்துள்ளது.

5.  jaambool எனும் இணைய பணம் பரிமாற்ற தளத்தினையும் வாங்கி உள்ளது.

6. இதன் மூலம் என்னத் யூகிக்க முடிகிறது என்பதினை பின்னூட்டத்தில் குறிப்பிடவும்!

0 கருத்துரைகள்:

Post a Comment

பட்டதை பட்-னு சொல்லிடுங்க -