Tuesday, September 07, 2010

கூகிளின் புதிய HTML5 ஆக்கப்பூர்வமான இலட்சனை!

கூகிள் வலைப்பக்கத்தில் இன்று வடிவமைத்துள்ள இலட்சனை பெரும் வரவேற்பைப் பெற்றுள்ளது. கூகிள் தனது பிறந்த நாள் எதிர்வருதை அடுத்து இந்த இலட்சனை வடிவமைத்து இருக்கலாம் என்றுக் கருதப்படுகிறது. தற்சமயம், அதாவது நான் இந்த பதிவினை எழுதும் நேரம், இந்த இலட்சனை கூகிளின் UK டொமைன்-இல் மட்டுமே காண முடிகிறது.
Flash, Silver Light போன்ற எந்த நிரல்களையும் பயன்படுத்தாமல் வெறும் HTML5 மற்றும் CSS3 வகை வலை வடிவமைப்பு முறையினை மட்டுமே பயன்படுத்தி செய்திருப்பது குறிப்பிடத்தக்கது. இந்த இலட்சனை interactive(தமிழ் சொல பரிந்துரைக்கவும்) ஆக செயல்படுகிறது. சுட்டெலியினை இலட்சனை அருகிலே கொண்டு செல்ல, இலட்சனையில் உள்ள மணிகள் சுட்டெலிக்கு அப்பால் சென்று திரை முழுது வலம் வந்து தனது இடத்தினை அடைககிறது.




இதனால் கூகிள் என்ன சொல்ல வருகின்றனர் என்பது பெரும் குழப்பமாகவே உள்ளது.
> பிறந்த நாளினை முன்னிட்டு செய்யப்பட்டுள்ளதா ?
> புதிய குரோம்-இன் இயக்க சக்தியினை விளம்பரப்படுத்தவா ?
> புதியதாக இரகசியமாக தயாரித்து வரும் சமூக வலைத்தளத்தினை வெளியிடும் காலம் நெருங்கி விட்டதா ?
> HTML5 பற்றி பயனர்களிடையே விழுப்புணர்வு ஏற்படுத்தவா?

எனப் பலக் கேள்விகளை எழுப்பி விட்டுள்ளது இந்த இலட்சனை

சைடு டிஷ்:
சமீபத்தில் யூடியூப் தளமும் தனது மீடியா இயக்கயினை ஃப்லாஷ் அல்லாமல் வெறும் HTML5 கொண்டே வடிவமைத்துள்லது. ஆனால், தற்போது யூடியூப் தளம் இந்த வசதியினை சோதனைக்காக மட்டுமே வழங்கிக் கொண்டிருக்கிறது. HTML5-இன் ஏறத்தாழ அனைத்து அம்சங்களையும் இயக்கும் வகையில் சமீபத்தில் கூகிள் நிறுவனம் தனது குரோம் இணைய உலாவியினை வெளியிட்டுள்ளதும் இங்கே குறிப்பிடப்படுகிறது.

1 கருத்துரைகள்:

பொன் மாலை பொழுது said...

Interactive - பிரதி வினை / பதில் வினை /எதிவினை /ஏற்பு வினை - எது வேண்டுமானாலும் வைத்துகொள்ளலாம்.
--

Post a Comment

பட்டதை பட்-னு சொல்லிடுங்க -