Wednesday, September 08, 2010

கூகிளின் DOODLE! திட்டம் யூகிக்கப்படுகிறது!!

நேற்று கூகிளின் UK டொமைனில் கூகிளின் இலட்சனை எவ்வாறிருந்தது என்று பகிர்ந்தோம். இன்று அதன் இலட்சனை சற்று வினோதமாக இருந்தது. இணையப்பக்கத்திற்கு சென்றதும் வண்ணமயமான கூகிள் இணையதளம் இன்று வண்ணமே இல்லாமல் இருந்தது. கூகிள் எனும் பெயர் வெறும் கருப்பு வெள்ளையில் தெரிந்தது. இன்றைய வடவமைப்பின் காரணம் யூகிக்கக் கூடியதாக இருக்கிறது.

வெறும் கருப்பு வெள்ளை நிறத்தில் இருந்த கூகிள் இலட்சனை மீது சுட்டெலி கொண்டு செல்லும் போதோ அல்லது அதனை சொடுக்கும் போதோ ஏதும் நிகழவில்லை. கருப்பு வெள்ளையாக வெளியிடக் காரணம் என்ன என்றும் ஏதாவது துனுக்கு கிடைக்கிறதா என்றும் கூகிளின் வலைப்பக்கத்தை நோட்டம் விட்டுக் கொண்டிருந்தேன். ஏதும் சிக்கவில்லை. எப்போதும் போல தேடல் செய்ய சென்றேன். தட்டச்சு செய்யும் போது தான் ஆச்சரியம். தட்டச்சு செய்ய செய்ய கூகிள் வண்ணம் பெற்று அருமையாக மாற்றம் கொண்டது. பின்னர் இதன் மூலம் கூகிள் என்ன கருத்துத் தெரிவிக்க விரும்புகின்றனர் என்பதை தெளிவாக உணர முடிந்தது.




கூகிள் தனது லைவ் சர்ச் அதாவது நிகழ் நேர தேடல் எந்திரத்தினை சில தினங்களுக்கு முன்னர் சோதித்துப் பார்த்ததைப் பலரும் அறிவோம். அறியாதவர்கல் கீழே உள்ள காணொளியைப் பாருங்கள். இந்த தொழில்-நுட்பம் மூலம், நாம் தட்டச்சு செய்ய செய்ய நாம் உள்ளிடும் வார்த்தையின் தேடல் முடிவுகள் நிகழ் நேரத்தில் தோன்றியவன்னம் இருக்கும்.



இதைத் தான் இன்றைய கூகிள் இலட்சனம் கூற விழைகிறது என்று நம்பலாம். வழக்கம் இதனையும் கூகிள் HTML5 பயன்படுத்தி செய்திருப்பதை நினைவில் கொள்கிறோம்.

ஒருவேளை இது உண்மையாக இருப்பின், ஏற்கனவே கூகிளின் Image தேடல் எப்படி குறு-வரிசை இணையப் பயனாளர்களுக்க மேலும் கஷ்டத்தினைத் தர நேரும் என்பதில் கூகிள் எந்த அளவிற்கு முக்கியத்துவம் தருகிறது என்று தெரியவில்லை. பொருத்திருந்துப் பார்ப்போம்.

3 கருத்துரைகள்:

சசிகுமார் said...

thanks

அணில் said...

html5 தெரிந்தால் சொல்லித் தாருங்கள்.

Admin said...

சசிகுமார்: நல்வரவு =)
ராஜ்குமார்: கண்டிப்பாக நன்பரே. எனக்குத் தெரிந்த அளவிற்கு பதிவுகளாகத் தருகிறேன் =)

கருத்துரைகள் தாம் உற்சாகப்படுத்துகின்றன.வருகைக்கும் கருத்துரைக்கும் நன்றி. =)

Post a Comment

பட்டதை பட்-னு சொல்லிடுங்க -