Tuesday, June 08, 2010

நோக்கியாவின் மடிகணினி அறிமுகம்


அலைபேசி வர்த்தக உலகின் ஜாம்பவானாக வலம் வரும் நோக்கியா நிறுவனம் அண்மையில் மடிகணினி வர்த்தகத்தில் இறங்கப் போவதாக அறிவித்துள்ளது.
நோக்கியா நிறுவனம் FINLAND தாயகமாக கொண்ட நிறுவனம். ஆசிய, ஐரோப்பிய நாடுகளில், வாடிக்கையாளர்களால் பெரிதும் கவரப்பட்ட நிறுவனம் நோக்கியா ஆகும். தனக்கான உதிரி பாகங்களைத் தயாரிக்கவும், நோக்கியா சீய்மண்ட்ஸ் எனும் இனை நிறுவனம் ஒன்றையும் தன்னகம் வைத்துள்ளது. இணைய வழி வர்த்தகம் செய்ய, OVI எனும் இணையதளம் ஒன்றினையும் துவக்கி அதிலும், குறிப்பிடும் அளவு வெற்றிக் கொண்டுள்ளது. ஐரோப்பிய நாணயமதிப்பின் படி, நோக்கியா நிறுவனம் ஆண்டொன்றிற்கு 41 பில்லியன் லாவம் ஈட்டுகிறது. இவ்வாறாக வர்த்தக நுனுக்கங்களை கையாளும் நோக்கியா நிறுவனம், இப்போது, மடிகணினி வர்த்தகத்தில் இறங்குவதாக அறிவித்துள்ளது. ஒரு அலைபேசி நிறுவனம் கணினி வர்த்தக உலகில் கால் பதிப்பதற்கு காரணம் இன்றைய சூழலில் பிரசித்தம் ஆகி வரும் அலைவழி இணைய தொடர்புகள் தான். வளர்ந்த நாடுகளில் கிட்டத்தட்ட அனைத்து நாடுகளிலும் தற்சமயம் 3ஜி அலைவரிசை இணைய சேவை வழக்கில் வந்துள்ளது. நோக்கியா நிறுவனம் அறிவிப்பிலும், விளம்பரங்களிலும், இந்த 3ஜி வசதி தான் பெரிதும் சொல்லப்படுகிறது.

நோக்கியா நிறுவனம் தனது மடிகணினியினை வரும் அக்டோபர் மாதம் சந்தைக்குக் கொண்டு வருவதாக அறிவித்துள்ளது.

இந்த மடிகணினியில், 3ஜி வசதி செய்யப்பட்டிருப்பதால், இதில் இணையம் எளிதாக்கப்பட்டுள்ளது. MODEM தேவையில்லை.

நோக்கியா மடிகணினியில் கொடுக்கப்பட்டுள்ள பேட்டறி தொடர்ந்து 12 மணி நேரம் இயக்காற்றல் கொண்டவை.

நோக்கியா மடிகணினியில் windows 7 இயங்குதளம் நிறுவப்பட்டு வெளியிடுகிறது.

நோக்கியா மடிகணினி வெறும் 2செ.மீ தடிமன் கொண்டதாகவும், HD வசதி கொண்ட ஒளி பிரதிபளிக்காத திரை இருப்பதும் இன்னும் சிறப்பு.

நோக்கியா மடிகணினியில், SMS, GPS போன்ற வசதிகளும் இடம்பெற்றிருக்கும்.

வர்த்தக உலகில், நோக்கியா மடிகணினிகள் பெரிய அளவில் எதிர்ப்பார்ப்புகளை ஏற்படுத்தியுள்ளது.

Configuration:

மென்பொருள்:
மைக்ரோசாஃப்ட் ஆஃபிஸ் (60 நாட்கள் பரீட்சிக்க)
OVI இணையதிற்கான நிரல்
F-Secure இணைய காப்பு நிரல்.

வன்பொருள்:
அளவில்: 265 x 185 x 19.9 (மி.மீ.)
எடை: 1250 கிராம்.
WIFI, 1.3 MP கேமரா, SIM slot, 10.1" திரை.
1 GB RAM, 120 GB HardDisk, Intel® Atom™ Z530, 1.6 GHz (அ) Intel® Poulsbo US15W

இன்னும் பல, நோக்கிய இணைய தளத்தில்...

பிடித்திருந்தால், தமிழ்10ல் வோட்டுப் போடுங்கள்.
பின்னூட்டம் வரவேறகப்படிகின்றன.
நன்றி,
வினோ.

0 கருத்துரைகள்:

Post a Comment

பட்டதை பட்-னு சொல்லிடுங்க -