இந்திய கரண்சிக்கென தனி அடையாளச் சின்னம் ஒன்று ஆயத்தமாகி உள்ளது. டாலர் ($), பவுண்டு(£), யென்(¥) போன்ற கரன்சிகள் தனக்கென தனி அடையாளச் சின்னம் கொண்டுள்ளது. இது போல, இந்தியாவின் கரன்சிக்கென ஒரு அடையாளச் சின்னம் உருவாக்க நடுவன் அரசாங்கம் முடிவெடுத்திருந்தது. இதன் முயற்சியாக அடையாளச் சின்னம் உருவாக்குவதற்காக நாட்டின் பலவேறு வடிவமைப்பாளர்களிடம் போட்டி முறையில் தேர்வு நடைப்பெற்றது. அவற்றில் சிறந்ததாக 5 சின்னங்கள் தேர்ந்தேடுக்கப் பட்டுள்ளன.
இவை, ஆங்கிலத்தின் R எனும் எழுத்தின் அடிப்படையிலும், இந்தியின் र (ர) எனும் எழுத்தின் அடிப்படையிலும் தேர்ந்தெடுத்திருப்பதாகத் தெரிகிறது. இவை இரண்டும் இந்தியாவின் அலுவலக மொழிகள் என்பதால் இந்த முறைப் பயன்படுத்தப்பட்டுள்ளது என அறியலாம். ரூபாய் எனும் சொல் "ருப்யா" என்னும் இந்தி சொல்லின் அடிப்படையில் தோன்றியதும் குறிப்பிடத்தக்கது. கீழ்க்கண்ட, தேர்ந்தெடுக்கப்பட்ட 5 அடையாளச் சின்னங்களில் ஒன்றினைத் வெகு விரைவில், அதுவும் ஓரிரு நாட்களில் அறிவிக்கலாம் என எதிர்ப்பார்க்கப்படுகிறது. தேர்ந்தெடுக்கப்படும் அந்த சின்னத்தை வடிவமைத்தவருக்கு இரண்டரை இலட்சம் ரொக்கம் அளிக்கவும் அரசு அறிவித்துள்ளது. வடிவமைப்பு, காப்புரிமை, என அனைத்துமே அரசிடம் ஒப்படைக்கவே இந்த இரண்டரை இலட்சம்.
தேர்ந்தெடுக்கப்பட்டுள்ள ஐந்து அடையாளச் சின்னங்கள் |
இந்தியா தவிர, இலங்கை, பாகிஸ்தான், மொரீஷியஸ், நேபாளம், மாலத்தீவு உள்ளிட்ட பல நாடுகளுன் நாணய மதிப்பீட்டின் பெயராக "ரூபாய்" உள்ளதால், சர்வதேச அளவில் விலை மதிப்பீடுகளைக் குறிப்பிடும் போது எந்த கரன்சியின் அடிப்படையில் மதிப்பீடு செய்வது சுலபமாக இருக்கும் எனவும் இந்திய கரண்சியினை மற்ற கரண்சியுடன் வேறுபடுத்தி அறிய உதவும் எனவும் என்று கருத்துக்கள் கூறப்படுகிறது. விரைவில் அடையாளச் சின்னம் வெளிவந்தாலும், ரூபாய்த் தாள்களின் செய்யப் போகும் மாற்றம் அல்லது மாற்றம் செய்யப்படுமா என்பவை இன்னும் கேள்விக்குறிகள் தான்.
சைட் டிஷ்:
» சர்வதேச அளவில் இந்திய நாணயம் INR என்ற குறியீட்டுடன் அறியப்படுகிறது.
» 'ருபயா' என்ற இந்தி சொல்லின் தமிழ் அர்த்தம் 'வெள்ளி' ஆகும்.
» ரூபாய் தாள்கள் அதீத பாதுகாப்பு முறைகளுடன் தயாரிக்கப்படாமல் இருக்கும் பட்சத்தில், சர்வதேச சந்தையில் இந்திய நாணயத்தின் மதிப்பு குறைவாக உள்ள பட்சத்தில், இரு அடையாளச் சின்னம் இல்லாமல் போனது என்னக் குறை எனப் புரியவில்லை. இங்கே நடக்கும் மாநாடு வியாபாரம் போலத் தானோ?
கவுன்டரில் "வெள்ளி!?" செலுத்திவிட்டு செல்லவும். மீண்டும் வருக!!
0 கருத்துரைகள்:
Post a Comment
பட்டதை பட்-னு சொல்லிடுங்க -