Saturday, June 19, 2010

சிறந்த பத்து சிண்ணங்களின் இரகசியங்கள்

நிறுவனங்கள் தங்கள் வாடிக்கையாளர்களிடமும், நுகர்வோரிடமும் முதல் அபிப்பிராயம் ஆழ்ந்ததாகவும், வலிமையாக இருக்க உதவுகிறது அவைகளில் சின்னங்கள். பெயர் வைப்பதில் எவ்வளவு கவனம் வேண்டடுமோ அதே கவனம் சின்னத்திலும் செலுத்துதல் அவசியம். சிலர், பெயரினும் அதிக கவனம் சின்னத்தை அலங்கரிப்பதிலே இட்டு,

அதன் மூலம் மற்றவர்களை ஆச்சரியத்தில் ஆழ்த்தி இருக்கின்றனர். அவைகளில் சிறந்த (என்னைப் பொருத்த வரையில்) பத்து சின்னங்களை தேடி பிடித்து பதிவில் இடுகிறேன்.


பத்தாவது இடம்:



இந்த சின்னத்தில் எழுத்துக்கள் அனைத்துமே தன்னை நிறுவனத்தின் பெயரான 8 எனும் "எண்"ணை குறிக்கின்றன. மிக துல்லியமாகவும் தெளிவாகவும் செய்த நேர்த்தி.

ஒண்பதாவது இடம்:


அமேசான் இணைய தளம் நமக்கு நன்கு தெரிந்த தளம் தான். இந்த சின்னத்தில் என்ன அப்படி இருக்கிறது? வாடிக்கையாளர்களின் மகிழ்ச்சி தான் முக்கியம் என்பது போல பெயருக்கு கீழே ஒரு சிரிக்கும் குறி இருக்கிறது, அவ்வளவு தானே என்கிறீர்களா? நிதானித்துப் பாருங்கள், எங்களிடம் A to Z எல்லாப் பொருட்களும் கிடைக்கும் என சொல்வதை உணர்வீர்கள்.

எட்டாவது இடம்:


டாஸ்டிடாஸ் எனும் நொறுக்குத் தீனீ நிறுவனம், இரண்டு பேர் கொண்டாடிய வன்னம் உன்பதாகக் காட்டுவது போல தனது சின்னத்தை வடிவமைத்துள்ளனர். இனிமே கடலை போடாமல், சிப்ஸ் போடுங்கப்பா!

ஏழாவது இடம்:


ஃபெடெக்ஸ் நிறுவனம், நாங்கள் நில்லாமல் முன்னோக்கி சென்றுக் கொண்டே இருப்போம் என்பதை, E மற்றும் X இடையில் உள்ள வற்றிடத்தை அம்புக்குறியோடு உணர்த்துகின்றனராம். எளிமையான ஆனால் ஆழமானக் கருத்துடைய சின்னங்களில் ஒன்று.

ஆறாவது இடம்:


எலிஃபான்ட் நிறுவனம் தனது சின்னத்தில் என்ன சிறப்பாக கொண்டுள்ளது? முதல் எழுத்தான "e" என்ற எழுத்தை சின்னமாக இருக்கிறது என்போர் கவனிக்க, கருமை நிற பொட்டில், யானையின் துதிக்கை உள்ளதை!

ஐந்தாவது இடம்:


பிக்டெண் தன்னுள் மொத்தம் 11 அணிகளைக் கொண்டது. ஆதனால், பெயரைக் கண்டு குழம்பிவிடக் கூடாதென்றெண்ணி, "T" இரு பக்கத்திலும், 11 என்று தோன்றுமாறு வடிவமைத்து விட்டனர். அது சரி, பிக்டெண் என்று பெயர் வைக்க வேண்டுமா? "பிக்இலெவண்" என்று வைத்திருக்கலாமே?

நான்காவது இடம்:



கணினி உபயோகிக்கும் அனைவருக்கும் தெரியும், சன் நிறுவனம். (தொலைக்காட்சி பார்ப்பவர்கள் தவறாகப் புரிந்துக் கொண்டால், அவர்கள் பன்ச் வசனம் கேட்டே செவிடாக போவார்கள் என்று சபிக்கவில்லை, இருந்தாலும் எச்சரிக்கை). அதாவது, சன் மைக்ரோ சிஸ்டம்ஸ் சின்னம், ஆம்பிகிராம் (Ambigram) என்னும் வடிவமைப்பு நுனுக்கத்தில் உருவாக்கப்பட்டுள்ளது. இந்த சின்னத்தை, நீங்கள் எந்த கோனத்தில் திருப்பியும் (குப்புர அல்ல), திரும்பியும் (பின் பக்கம் அல்ல) பார்த்தாலும் ஒரே மாதிரி தான் தெரியும், விளங்கும்.

மூன்றாவது இடம்:


நார்த்வெஸ்ட் விமான சேவை நிறுவனத்தின் சின்னத்தை மேலோட்டமாகப் பார்த்தால், W என்ற எழுத்தின் மீதே, N எனும் எழுத்தினையும் காட்ட முயற்ச்சிப்பது போல தெரியும். அதையும் தான் செய்திருக்கிறார்கள். "N"ஐத் தவிர்த்துப் பார்த்தால், ஒரு முக்கோன அம்புக்குறி மாதிரி இருக்கும். அது, வரைபடங்களின் முறைப்படி North-West திசையைக் குறிக்கிறது. இதனை வடிவமைக்க மிக நேர்த்தி மற்றும் புத்திக் கூர்மை வேண்டும்.

இரண்டாவது இடம்:


F1 சின்னத்தில் கருப்பு நிற "F" பக்கத்தில் சிகப்பு நிறத்தில் 1 இருப்பது போல தோன்றும். உண்மையில், F மற்றும் சிகப்பு நிற 1 இடயிலான காலி இடமே "1" என்ற எண்ணின் உருவத்தில் இருக்கும். அதாவது, 1 என்ற எண் அதிவேகமாக F மீது மோதுவது போல இருக்கும்.

முதல் இடம்:


SONY VAIO மடிகணினியின் சின்னம் இது. இதன் வடிவமைப்பு பார்ப்பதற்கு கவரும் வகையில் தான் இருக்கும். ஆனால் அது அர்த்தம் வாய்ந்ததாகவும் தான் வடிமைத்துள்ளனர். அதாவது, V A இரண்டும், Analog signal என்பதினை குறிக்கிறது. I O இரண்டும் Digital Signal என்பதினைக் குறிக்கிறது. சோனியின் இன்த சின்னம் தான் நமது ரேட்டிங்கில் முதல் இடம். இதை வடிவமைத்த விதம் பற்றி சொல்லவே தேவையில்லை.


கௌரவ பட்டம்:

உலகிலேயே வெகு சில நிறுவனங்களே தங்கள் சின்னத்தில் தனது பயரைப் பயன்படுத்தாமல் வெறும் சின்னத்தின் வடிவம் மட்டுமே பயன்படுத்திருக்கும். அவைகளில், வசீகரமானதும், அதிகம் பேரைக் கவர்ந்த சின்னம் ஆப்பிள்-ன் சின்னம் ஆகும்.



சந்த்திப்போம்..

-வினோ

7 கருத்துரைகள்:

Saran said...

nice post..

with good information.... keep going..

selva kumar said...

Very good information...
very interesting

vino said...

சரன், செல்வ குமார் இருவருக்கும் நன்றி. மேலும் இது போன்ற பதிவை தொடர்ந்து இடுவோம். அவ்வபோது வந்து செல்லவும் =)

Valaakam said...

Nice info... tnx.. :)

Tamil Fa said...

wow, very best post.
-www.tamilfa.blogspot.com

please insert follower gadget.

vino said...

Welcome Timas, I have inserted the follower gadget. It is in the bottom of the blog site named as "வாடிக்கையாளர் பெருமக்கள்". In other way, you can follow the blog by clicking on the "Follow" link in the top navigation bar.

Thanks for coming and commenting. Come again.. =)

kathir said...

very nice ...lot of info is there in single logo....

Post a Comment

பட்டதை பட்-னு சொல்லிடுங்க -