Wednesday, June 02, 2010

இணையம்+தொலைக்காட்சி = கூகிள் டிவி


இணையத்தில் கால் பதித்த நாள் முதல் கூகிள் இழுத்த மூச்சுடன் இன்னமும் முதல் இடத்தில் உள்ளது மட்டும் அல்லாது, எந்த போட்டி நிறுவனமும் முந்த முடியாத தொலைவில் தான் வண்டி ஓட்டிக் கொண்டிருக்கிறது. அந்த வரிசையில், கூகிள் கால் பதித்துள்ள இடம் தான் "கூகிள் டிவி". இதைப் பற்றி விரிவாக அலசுவோம்.

தொலைக்காட்சிப் பெட்டி வாங்கி தான் அந்த தெருவிலேயே பணக்காரர் எனக் காட்டிக் கொண்டனர் ஒரு காலத்தில் நமது தாத்தாக்கள். பின்னர் கேபிள் தொலைக்காட்சி. சமீப காலமாக தொலைக்காட்சி நிகழ்ச்சியினை தொலைக்காட்சியிலோ அல்லது செட் டாப் பாக்ஸ் மூலமாகவோ சேமித்து வைத்து, பின்னர் பார்க்கலாம் என்றும், தொலைக்காட்சியி நிகழ்ச்சியினை rewind, forward, pause செய்தும் பார்க்கலாம். தொழில் நுட்பத்தின் அசுர வளர்ச்சி தான் இது. இப்போது, ஒரு தலைமுறை தாண்டிய முயற்சி தான் கூகிளின் இந்த கூகிள் டிவி. இந்த கூகிள் சுறுக்கமாக விளக்கினால், இதனை இணைய வசதியுடன் கூடிய தொலைக்காட்சியின் அனுகுமுறை என சொல்லலாம்.

விளக்கமாக சொல்ல வேண்டுமானால், இப்போது நீங்கள் தொலைக்காட்சி பார்த்துக் கொண்டிருக்கிறீர்கள். ஷாருக் கான் திரையில் தோன்றி "I love you I.. I.. I10" என்பார். உங்களுக்கும் ஐ10 பிடித்து இருக்கலாம். வாங்கும் என்னம் இருந்திருந்தால் உடனே அதன் விலை, இதர விபரங்களை சேகரிக்க செல்வீர்கள். அங்கேயே அம்ர்ந்து, டிவி ரெமோட் எடுத்து, க்ரோம் உலாவியினைத் திறந்து (டிவியில் தான்) அதன் விபரங்களை தேடிப் பெற முடியும். இது தான் கூகிள் டிவியின் குறிக்கோள். வெரும் தொலைக்காட்சியாக மட்டும் அல்லாமல், உங்களால் இணையத்தையும் உலாவலாம். இது நடைமுறைக்கு வந்தால், தொலைக்காட்சியையும், நிகழ்ச்சிகளையும், நாம் நினைக்கும் போதெல்லாம், நினைக்கும் பகுதியினைப் பார்க்கலாம். தொலைக்காட்சி நிகழ்ச்சிகளை நன்பர்களுக்கு பரிந்துரைக்கலாம். இன்னம் இணையத்தில் எதுவெல்லாம் சாத்தியமோ, அத்தனையும் சாத்தியமே.தொலைக்கட்சி பார்க்கும் போதே, ஓர்கட், ஃபேஸ்புக், ட்விட்டர் போன்ற தளங்களை இயக்க முடியும். திரைப்படங்களை உங்களுக்கான இணைய நினைவத்தில் சேமித்து வைத்து பார்க்கலாம்.
http://timesofindia.indiatimes.com/photo/5957770.cms
கூகிள் இதற்கான நிரல்களை முழு வீச்சுடன் உருவாக்கி வருகிறது. இப்போதே, கூகிள் டிவி பீட்டா வெளியிட்டுள்ளது. இந்த நிரல்கள் தொலைக்கட்சிகளிலும், BlueRay சாதனங்களிலும் பொறுத்தி செயல்படுத்தப்படும். தொலைக்காட்சி, BlueRay சாதனங்கள் ஆகியவை சோனி, லாஜிடெக், மற்றும் இன்டெல் நிறுவனம் செய்துக் கொடுக்கும். இதறகான ஒப்பந்தமும், கூகிள் டிவியின் அதிகாரப்பூர்வ அறிவிப்பினையும் சமீபத்தில் நடந்த Google IO 2010 நிகழ்வின் போது செய்யப்பட்டது.

இணையத்தில் webapp எனப்படும் இணைய பயன்பாட்டு நிரல்கள் கூகிள் டிவிக்கென மேம்படுத்தவே இந்த பீட்டா பாகம் வெளியிடப்பட்டுள்ளது. இந்த இணையத் தொலைக்காட்சி நடைமுறைக்கு வந்தால் தொலைக்காட்சிகளில் மட்டுமல்ல, இணைய வேகத்திலும் புரட்சி வரப் போவது(இந்தியாவில்) உறுதி.

எதிர்ப்பார்க்கப்படும் பயன்கள்:

>> கூகிள் தொலைக்காட்சியின் மூலம், நிகழ்ச்சியினை சேமிக்கலாம்

>> தொலைக்காட்சியின் நிரல்களை எளிதில் மேம்படுத்தலாம்

>> நிகழ்சிகளை தேடி கண்டுபிடித்துப் பார்க்கலாம்

>> திறந்த நிலை நிரல்கள் ஆதலால், வேண்டிய வகையில் மாற்றி அமைக்கலாம் (இதற்கான SDK கூகிள் தளத்தில் தகவலிறக்கம் தரப்படுகிறது)

>> தொலக்காட்சிப்பெட்டி மற்றூம் சாதனங்கள் மட்டும் தான் விலைக்கு வாங்க வேண்டி வரும்(விலை இன்னமும் நிர்ணயிக்கப்படவில்லை). மற்றபடி தொலைக்கட்சி ஒளிபரப்பு சேவை இலவசமாகக் கிடைக்கும். (HD உட்பட)

>> கூகிளின் ஆன்ட்ராய்டு அலைபேசியினையே ரிமோட் கருவியாக பயன்படுத்தலாம்.

அடுத்த இடுகையில் சந்திப்போம்.

-வினோ

0 கருத்துரைகள்:

Post a Comment

பட்டதை பட்-னு சொல்லிடுங்க -