Sunday, September 12, 2010

கீச்சுக்கு போட்டியாக மீமீ - களத்தில் குதிக்கிறது யாஹூ

WOW! என்றும் கூட இன்னும் சில மாதங்களில் இணைய உலகம் முழங்கிக் கொண்டிருக்க நேரலாம். சமூகவலைதளத்தில் கூகிளினைப் போலவே தொடர் தோல்வியைத் தழுவி வந்த யாஹூ நிறுவனம் இப்போது கையில் எடுத்துள்ள ஆயுதத்திற்கு meme என்று பெயரிட்டுள்ளது. குறுவலைச்சரம் என்று தன்னை அறிமுகப்படுத்திக்கொள்ளும் யாஹூ மீமீ உண்மையிலேயே டுவிட்டரைத் தூக்கும் திறன் படைத்தது என்றால் மிகையாகாது.


இனையத்தில் நாம் கானும் கானொளி அல்லது நிழற்படங்கள் ஆகியவற்றை மற்றவர்களுடன் பகிர நினைத்தால் இதோ வந்துவிட்டது மீமீ. வலைச்சரமாகவே கூட பயன்படுத்தும் வகையில் எளிதாக வடிவமைத்துள்ளனர். பக்கம் தரவேற்றப்படுவதில் அலாதி வேகமும் எளிமையான வடிவமைப்பும் வெற்றிக்கு வழிவகுக்கும் என்று எதிர்ப்பார்க்கிறோம். முன்னமே பயனில் இருக்கும் Pulse-உடன் பகிர்வுத் தன்மைக்கான அமைப்புகளை பொதுவாக ஏற்றுக்கொள்கிறது. டுவிட்டரைப் போல ஃபால்லோவரை சேர்க்கலாம். நன்பர்களைத் தேடிப் பிடித்து ஃபால்லோ செய்யலாம்.




சில மாதங்களுக்கு முன் ஸ்பெய்ன் நாட்டிலும் பின்னர் போர்ச்சிகீசு நாட்டிலும் சோதனை செய்த யாஹூ தற்போது ஆங்கிலததில் உலகம் முழுதும் பீட்டா-வாக சோதனை செய்கிறது. யாஹூவின் முயற்சி சிறப்பானதே எனினும் மிகவும் காலம் தாழ்ந்த ஒரு முயற்சி. அது சரி, மீமீ என பெயர் வைக்கக் காரணம் என்னவாக இருக்கும். கூகிள் மீ என்றால் இவர்கள் மீமீ என்கிறார்களே.

~கருத்துக்களை சொலலுங்கள்~
-வினோ =)

1 கருத்துரைகள்:

"தாரிஸன் " said...

பயனுள்ள தகவல்... நன்றி...

Post a Comment

பட்டதை பட்-னு சொல்லிடுங்க -