சுவாரசியமான பதிவு. உலகில் பெரும்பாலானோரைக் கவர்ந்த நிறுவனம் எனும் பெயர் வாங்கிய கூகிள் பற்றிய பதிவு. கூகிள் தனது வேகத்தாலும், சேவைகளாலும், கொள்கைகளாலும் நம்மைக் கவர்ந்தாலும் இங்கே இன்னமும் சில சுவாரசியமான கூகிளை சீண்டிப் பார்க்கக் கூடிய விஷயங்கள். நம்மில் பலருக்குத் தெரிந்திருக்கும். இருந்தாலும், ஓட்டளித்து தெரியாதோர்க்கும் கொண்டு சேரச் செய்யுங்கள்.
கூகிள் தேடுபொறி இணையத்திற்கு சென்று,
1. world cup என டைப் செய்து, பின்னர் அதன் தேடுதல் முடிவுகள் பக்கத்தின் கீழே பாருங்கள். உலகக்கோப்பையினை வெல்ல என்ன தேவை என கூகிள் Goooooooooogle என்ற பகுதி சொல்லும்.
2. கூகிள் முகப்பிற்கு சென்று, who is the cutest என டைப் செய்து, "அதிர்ஷ்டம் என் பக்கம்" அதாவது I am feeling lucky என சொடுக்குங்கள். உலகிலேயே யார் அழகு எனத் அறிவீர்கள்.
3. find Chak Noris என டைப் செய்து அதிர்ஷ்டம் என் பக்கம் என சொடுக்குங்கள். உங்களுக்கு அதிர்ஷ்டம் இருந்தால், நீங்கள் chak noris-ஐ கண்டுபிடித்து எனக்கும் சொல்லுங்கள்.
4. கூகிள் முகப்பில், elgoog அதாவது, 'google' என்பதனை திருப்பிப் போடுங்கள். உங்களால் இணையத்தினையே திருப்பிப் போட முடியும். முயற்சியுங்கள்.
5. கூகிளின் மகிழ்வூட்டக்கூடிய சில பக்கங்கள்
- http://www.google.com/pacman/
சில தினங்களுக்கு முன்னர், கூகிளின் முகப்புப் பக்கத்திலேயே இடம்பெற்ற சிறு விளையாட்டு.
- http://www.google.com/Easter/feature_easter.html
ஈஸ்டர் தினத்தின் போது, கூகிள் முகப்புப் பக்கத்தில் இடம்பெறச்செய்த சிறு விளையாட்டு.
- http://www.google.com/unclesam
இது அமெரிக்க அரசாங்கத்தின் கீழ் வரும் ".gov" என முடியும் இணையத் தளங்களின் முடிவுகளை மட்டுமே தரும்.
__________________________________________
கடைசியாக ஒரு நக்கலான படம். கூகிள் தளம் 2084 ஆண்டில் எவ்வாறான சேவைகளைக் கொடுக்கும் என ஒரு கற்பனை. போகிற வேகத்தில், 2084 ஆண்டிற்கு முன்னமே இச்சேவைகளை கூகிள் அறிமுகம் செய்தாலும் ஆச்சரியமில்லை.
மீண்டும் சந்திப்போம்
-
வினோ
பி.கு: தகவல்கள் அனைத்தும், இணையத்தில் பல்வேறு தளத்தில் இருந்து தேடிப் பெற்றது.
1 கருத்துரைகள்:
கூகிள் கூகிள் தான்
Post a Comment
பட்டதை பட்-னு சொல்லிடுங்க -