முன்னரெல்லாம் தொலைக்காட்சி அனலாக் சிக்னல் அதாவது "தொடர்முறைக் குறிகை" மூலமாக மட்டுமே இயங்கக் கூடியதாக இருந்தன. தொலைக்காட்சிகளில் படங்கள் நிழற்படங்களாக பெறப்படும். அனலாக் சிக்னல் மூலமாக இயங்கிய தொலைக்காட்சி சாதனங்கள் 4:3 (LetterBox) நீள-அகல விகித படங்களை ஒளிபரப்பியன. பெறப்பட்ட நிழற்படங்களை ஒன்றன் பின் ஒன்றாக நொடிக்கு 25 நிழற்படங்களை காட்சிக்கு தருமாறு வடிவமைக்கப்பட்டன.
சில தலைமுறைகளுக்குப் பின்னராக இன்று HDTV என அழைக்கப்படும் உயர்-துல்லிய தொலைக்காட்சிகள் வழமைக்கு வந்துவிட்டன. LCD, LED, மற்றும் Plasma ஆகிய வகைகளில் இவ்வகைத் தொலைக்காட்சிகள் சந்தைகளில் கிடைக்கப்பெறுகின்றன.
HDTV மற்றும் முந்தையத் தலைமுறைத் தொலைக்காட்சிகளின் வித்தியாசங்களை பெரும்பாலும் முதற் பார்வையிலேயே சொல்லி விட முடியும். சில குறிப்பிடத் தக்க வித்தியாசங்கள்
HDTV தொலைக்கட்சிகளில் 16:9 நீள-அகல விகிதப் படங்கள் தோன்றும், ஆனால் CRT போன்றத் தொலைக்கட்சிகளில் 4:3 விகத படங்கள் தோன்றும்.
HDTV தொலைக்கட்சியின் துல்லியம் அளவில் 1080 நீள வரிகள் வரை இருக்கும். ஆனால், CRT போன்றத் தொலைக்கட்சிகளில் வெறும் 30 நீள வரிகளே கொண்டிருக்கும்.
HDTV தொலைக்காட்சி முறை LCD, LED, Plasma ஆகிய தொழில்நுட்பத்தில் உருவாக்கப் படுவதால் மின்சாரத்தின் தேவை மிகவும் குறைவானதே. ஆனால், CRT வகைத் தொலைக்காட்சிகளில், கேதோட்-ரே-கண் (Cathode-ray emitting gun) பயன்படுத்தப் படுவதால் மின்சாரப் பயன்பாடு அதிகமாக் இருக்கும். இதனால் CRT தொலைக்காட்சிகள் இன்றையத் தலைமுறைத் தொலைக்காட்சிகளை விட பல மடங்கு அதிக மின்சாரம் வீனடிக்கின்றன.
HDTV தொலைக்காட்சிகள் அனைத்துமே 16:9 தெளிவு விகிதமாக இருப்பதால் 16:9 விகித அளவுக் கொண்ட படங்களை தெளிவாகக் காணலாம்.
HDTV-யில் பயன்படுத்தப்படும் சிக்னல்:
- 720p - 720 வரிகள் கொண்ட Progressive மேவுதல்
- 1080p - 1080 வடிகள் கொண்ட Progressive மேவுதல்
- 720i - 720 வரிகள் கொண்ட Interlace மேவுதல்
- 1080i - 1080 வரிகள் கொண்ட Interlace மேவுதல்
HDTV-யில் கவனிக்க வேண்டிய அம்சங்கள்:
- HD அளவு:
ஒரு முழு HD (FullHD) = 1080p அல்லது 1080i = 1920x1080 pixels
ஒரு அரை HD (HD Ready) = 720p அல்லது 720i = 1280x720 pixels
நீங்கள் வாங்கப் போகும் தொலைக்காட்சி 42'-ற்கு மேற்பட்டு இருந்தால் முழு HD வகை தேர்ந்தெடுங்கள். குறைவாக இருந்தால், அரை HD வகை தேர்ந்தெடுங்கள். 42'ற்கும் குறைவாக இருக்கும் தொலைக்காட்சிகளில் முழு HD மற்றும் அரை HD ஆகியனவற்றிற்கான வேறுபாடுகள் தெரியாது, அதனால், போதுமான அளவான அரை HD தேர்ந்தெடுக்கொம் போது நீங்கள் பணத்தை மிச்சப்படுத்துகிறீர்கள்.
- வண்ண பேத விகிதம் (Contrast Ratio)
- Refresh Rate:
- மற்றவை:
ஒரு RGB-OUT
மூன்று RGB-IN (பின் பக்கம் இரண்டும், பக்க வாட்டில் ஒன்றும்)
இரண்டு HDMI-IN (பின் பக்கம் ஒன்றும், பக்க வாட்டில் ஒன்றும்)
இரண்டு USB-IN (ஒன்று பராமரிப்பிற்காக)
ஒரு Antenna-IN
குறைந்த பட்சம் இந்த வசதிகள் உள்ள HDTV வாங்குவதற்கு பரிந்துரைக்கலாம்.
HD பற்றியும், ப்ரொக்ரசிவ் மற்றும் இன்டர்லேசிங் ஸ்கேனிங் பற்றியும், இன்னும் சில தொழில் நுட்பம் பற்றியும் தனி தனி இடுகைகளில் காண்போம்.
சைடு டிஷ்:
Dynamic Contrast இருப்பின், படத்திற்கு ஏற்ப காட்சியின் வெண்ண பேதம் மாறித் தோன்றி காட்சியில் இயல்பாய் இருக்கும்.
தெரியாத பலருக்கு சென்று சேர்த்திடுங்கள். தமிழ்10 மூலம்!
சந்திப்போம்,
-வினோ. =)
2 கருத்துரைகள்:
சிறந்த மற்றும் உபயோகமான பதிவு.
நன்றி
thank ulavu.com and someone who wanted to encourage me =)
Post a Comment
பட்டதை பட்-னு சொல்லிடுங்க -