Wednesday, June 30, 2010

கூகிள் Vs ஃபேஸ்புக்: இணையத்தின் அடுத்த சூடான போர்?

அமெரிக்காவில் கேம்ப்ரிட்ஜ் எனும் ஊரில் Mark Zuckerberg என்று ஒரு மாணவர் இருந்தார். ஹார்வார்ட் பல்கலைகழகத்தில் தனது படிப்பை பாதியிலேயே தூக்கி எறிந்தார். அவருக்கு அந்த பட்டம் தேவைப்பட்டிருக்கவில்லை. அப்படி தூக்கி எறியும் அளவிற்கு அவரிடம் என்ன இருந்தது? விடுதியில் தங்கி படித்தார்.
நன்பர்களை அழைத்து வைத்துக் கொண்டு ப்ராஜக்ட் செய்வதில் ஆர்வமாய் இருந்தார். தனது 20 வயதில் ஒரு ப்ராஜக்ட் வெற்றிகரமாக செய்து முடித்தும் விட்டார். தான் படிக்கும் பல்கலைக்கழக தோழர்களுடன் கருத்து பகிரவும், நட்புறவை பேணும் வகையிலும் உருவாக்கப் பட்ட அந்த ப்ராஜக்ட்டிற்கு [thefacebook] எனப் பெயரிட்டார். பல்கலைக்கழகமும் அதனை அனுமதித்தது. அப்போது பல்கலைக்கழக உறுப்பினர் மட்டுமே இனைய வசதி ஏற்படுத்தி இருந்தார். பின்னர், 2005ல் பிற கல்வி நிலையங்களுக்கும் இந்த இனைய அனுமதி அளிக்கப்பட்டது. தொடர்ச்சியாக 2006ல் பதிமூன்று வயதைக் கடந்த யாரும் இனைய வகை செய்தார். தனது ப்ராஜக்ட் இத்தனை தூரம் சென்றடையும் என்று அவருக்கு முதலிலேயே தோன்றி படிப்பை தொடராமல் கைவிட்டார். தன்னம்பிக்கை என்பது இது தான் போலும்.

இணைய உலகில் பேஸ்புக்கின் ஆளுமை:

2008-ஆம் ஆண்டு சமூகவலைத்தளங்களின் ஜாம்பவானாக இருந்தது மைஸ்பேஸ் (mySpace). அதனை இன்று குப்புற விழ வைத்தது ஆர்குட்டோ, ஃப்ரண்ட்ஸ்டரோ இல்லை. அன்மையிலேயே தொடங்கப்பட்ட ஃபேஸ்புக் தான். ஆர்குட் உள்ளிட்ட சமூகவலைதளங்கள் நட்புறவை வளர்க்க பயன்பட்டதே தவிர, ஃபேஸ்புக் மட்டுமே கருத்துக்களை பகிர வகை செய்தது. இதனை குறுவலைச்சரம் (MicroBlog) என்று அழைத்தனர். இதன் மூலம் உரை, படம், கானொளி, மற்றும் எந்த இனையப் பக்கங்களையும் MicroBlog செய்ய முடியும். இங்கே தான் இணைய உலக ஜாம்பவானான கூகிள் மீது முதல் குட்டு விழுந்தது. அடுத்த வேரு எந்த குட்டும் கூகிள் மீது தொடுக்க ஃபேஸ்புக்கிற்கு அவசியம் ஏற்படவில்லை. காரணம், முதல் குட்டில் குனிந்த தலை இன்னும் குனிந்தே உள்ளதே!

சமூக வலைத்தளம் அவசியமா?

நமது தனி-நபர் விவரங்களை யாராவது சேகரித்தால் நமக்குப் பிடிக்குமா? கண்டிப்பாக இல்லை. கேட்டால் ஓட விரட்டுவோம், இல்லையென்றால் ஓடிப் போய்விடுவோம். அதனால் இந்த சமூகவலைத் தளங்கள் கூகிளிற்கு அவசியமாகிப் போகிறது. ஃபேஸ்புக், தனது தளத்தில் உள்ள விளம்பரங்கள் மூலம் லாபம் ஈட்டுகிறது. எந்த விளம்பரதாரர் அதிகம் பயன் பெறுகிறார் என்பதை அறிய, பயனர்களிடம் எந்த விடயம் ஈர்க்கப் படுகிறது என ஆராய வேண்டும். இதை ஃபேஸ்புக் செய்துக் கொடுக்கிறது. கூகிளோ, தனக்கென்று உலகலாவிய விளம்பர சேவையினை இயக்கிக் கொண்டிருக்கிறது. இணையப் பயனாளர்களை எந்த விடயம் அதிகம் கவர்கிறது என்றுத் தெரியாமல் எந்த ஒரு விளம்பர நிறுவனமும் இயங்க முடியாது. கூகிள் தேடலையும் தாண்டி, பயனர்கள் கருத்துக்களை ஏறாளமாக பகிர்ந்து, வெளிப்படுத்தும் ஒரு சமூக வலைத்தளம் தேவை ஆகிவிட்டது. கூகிளின் இந்த அடிமடியில் தான் ஃபேஸ்புக் கைவைத்தது.

கூகிளின் தத்தளிப்பும், போராட்டமும்:


இணைய உலகில் கூகிள் மட்டும் என்ன லேசா? ஜிமெயில் மூலம், யாஹூ மெயில், லைவ் போன்ற இன்னும் பல மின்னஞ்சல் சேவைகளை மன்னைக் கவ்வ வைத்தது. சில சேவைகள் மன்னிற்குள் புதைந்தே போனது. தேடல் எந்திரம் மூலம், யாஹூ தேடல் தன்னையே தொலைத்துவிட்டு தேடிக்கொண்டிருக்கிறது. மைக்ரோசாஃப்ட் சர்ச், லைவ் சர்ச், பிங் என பல கோனங்களில் முட்டி மோதிக் கொண்டிருக்கிறது மைக்ரோசாஃப்ட் நிறுவனம். விளம்பர சேவையில் கூகிளை மிஞ்ச முடியாதென் மற்ற நிறுவனங்களுக்கும் தெரியும். இனையத்திலேயே அலுவலக ஆவணங்களை திருத்த கூகிள் டாக்ஸ் எனப் பல துறைகளில் வெற்றியை நிலை நாட்டிய கூகிள், சமூகவலைதளம் என்று வரும் போது மட்டும் ஃபேஸ்புக் முன்னர் அப்பாவியாக நிற்கிறது. ஃபேஸ்புக் ஏறத்தாழ உலகம் முழுதும் பயன்படுத்தப்படுகிறது. ஆனால், கூகிள் வாடிக்கையாளர்களின் எண்ணிக்கை ஃபேஸ்புக் மிக அதிகம். ஆனாலும், BUZZ எனும் புதிய நிரல் மூலம் ஃபேஸ்புக்கை அசைக்க முடியவில்லை.

Buzz எனும் புதிய நிரலை ஜிமேயிலின் மேம்பாடாக வெளியிட்டதன் காரணம், BUZZல் இனையுமாறு அனைவரையும் வேண்டாமல், வாடிக்கையாளர்கள் ஏற்கனவே பயன்படுத்தும் ஜிமெயிலுடன் இனைத்தால் நேரடியாக அனைவரையும் சென்றடையும்.

BUZZ தோல்வியும், WAVE என்ற ஒரே நம்பிக்கையும்:
BUZZ தோல்வி அடைந்ததாக வெளிப்படையான அறிவிப்பு இல்லாவிடிலும், தனது போட்டியாளரான ஃபேஸ்புக்கீடம் தோற்று தான் போனது. காரணம், கூகிளின் BUZZல் கருத்துப் பகிரும் MicroBlog வசதி இருந்தது. ஆர்குட்டிலே சமூக இனக்கம் இருந்தது. இரண்டும் வெவ்வேறு பகுதியில் இருப்பதால், வாடிக்கையாளர்களுக்கு இரண்டையும் இனைத்துப் பார்க்கத் தோன்றும் என எதிர்ப்பார்ப்பது நகைச்சுவையான ஒன்று. இதனை கூகிள் மனதில் கொண்டுள்ளது என்றே எதிர்ப்பார்ப்போம். கூகிளின் தத்தளிப்பிற்கு மற்றொரு காரணம், தனது போட்டியாளரான ஃபேஸ்புக்கில் இருக்கும் அம்சங்களை தனது வலைகளிலும் கொண்டு வர வேண்டும் என நினைப்பது. இதனால், ஃபேஸ்புக்கிற்கு நிகராக ஒரு வலை ஏற்படுத்தினாலும் ஏற்கனவே உள்ள வசதி தானே என்று பெரும்பாலான பயனர்கள் கண்டுக்கொள்ளக் கூட மாட்டார்கள்.

ஃபேஸ்புக்கினை தற்போதுள்ள தலைமுறையாகவும், கூகிளின் நிரல் அடுத்த தலைமுறையாகவும் இருத்தல் அவசியம். இதை உணர்ந்த கூகிள் ஃபேஸ்புக்கினை முந்தி செல்வதை விட, பெரிய தாவுதல் ஒன்று வேண்டும் என்று உனர்ந்தது. அதிக தொலைவு செல்ல இரண்டு வழிகள் உண்டு. ஒன்று, மெதுவாக ஓடினாலும், நில்லாமல் ஓடிக்கொண்டே இருக்க வேண்டும். மற்றொன்று accelerated வகை. அதாவது, உந்தி எழுப்பப்பட்ட நகர்வு. ரஜினிகாந்த் இன்று என்ன சொன்னாலும் பன்ச்! காரணம் அவர் தொடக்கத்திலேயே தொடுத்த acceleration! இன்று எத்தனைப் பேர் வந்தாலும் எடுபடாது. இப்படிப்பட்ட acceleration தேவை என தொலை நோக்குப் பார்வையுடன் சிந்தித்துள்ளது கூகிள். இதன் வெளிப்பாடே கூகிள் WAVE. இது realtime collaboration அதாவது, நிகழ்-நேர தகவல் பரிமாற்றம் என்று தனது WAVE-இன் குண-நலன்களாக கூகிள் கூறுகிறது.

கூகிள், தான் சமூகவலைத்தளம் எதனையும் உருவாக்கும் வேலையில் என சொல்லாமல் சொல்லி இருக்கும் பட்சத்தில், இப்போதே தனது பயனர்களைத் தக்க வைத்துக் கொள்ள, தனது சமூகவலைத்தளமான ஆர்குட்டிலும், பல மேம்பாடுகளைக் கொனர்ந்த வன்னம் உள்ளது. உலக அளவில் வெற்றிப் பெறாத ஆர்குட், இந்த மாற்றங்களால், வெற்றி அடைவது என்பது, இழையைக் கொண்டு மலையை இழுப்பது போலத் தான். WAVE தளத்தின், BETA தொகுப்பு வெளியான இந்த சமயத்தில், குறிப்பிடத்தக்க அளவிற்கு முன்னேற்றம் கண்டுள்ளது எனலாம். தலைமுறைகள் தாண்டிய வசதியைத் தரும் இதுப் போல தளங்களைப் பயன்படுத்தி, இணையத்தில் மீண்டுமொரு புரட்சியை ஏற்படுத்துவது எப்போதும் போல பயனர்கள் கையில் தான் உள்ளது. ஃபேஸ்புக் எனும் பழம் புளிக்கும் பட்சத்தில் தான் இது நடக்கும் என வல்லுனர்கள் அறிகின்றனர்.

சைடு டிஷ்:
சமூக வலைத்தளங்கள் நமது தனி நபர் விவரங்களை ஆராய்வதால் நமது தனி-நபர் விவரம் காப்பதில் பங்கம் ஏற்படுமோ?
கண்டிப்பாக ஏற்படும். எனினும், பல தளங்கள் தங்களுக்கென்று சில வரைமுறைகளி பகுத்து வைத்துக் கொண்டுள்ளன. அதாவது, நாம் பயன்படுத்தும் IP முகவரி கொண்டு நாம் வசிக்கும் பகுதி முதற்கொண்டு அறிந்துக் கொள்ள முடியும். மற்றும், நாம் பகிரும் விவரங்களையும் சேர்த்து, நமக்கு என்ன பிடிக்கும், என்ன தேவை என்பதை அறிந்து அதற்கேற்ப விளம்பரங்களை வழங்கும். அவ்வாறான விளம்பரங்களுக்கு முக்கியத்துவமும் அளிக்கும். இத்தோடு நின்றால் பிரச்சனை இல்லை. நமது விவரங்களை, மூன்றாம் நபருக்குக் கொடுக்கும் போது தான் ஆபத்து. எமக்கு தெரிந்த வரையில் கூகிள் தான் உலகிலேயே பெரிய அளவில் தனி-நபர்களுக்கி எந்த விடயத்தில் ஆர்வம் என்று ஆராய்கிறது. ஆனால், கூகிள் மட்டுமே அதிக கட்டுப்பாட்டுடனும் இருக்கிறது. தேடலிலேயே encrypted protocol எனப்படும் பாதுகாக்கப்பட்ட தகவல் பரிமாற்றம் வழங்குவது கூகிள் மட்டும் தான். ஃபேஸ்புக்கோ, நம் தகவல் பாதுகாக்கப்படுமானால், நாம் அதற்கு பணம் செலுத்த வேண்டும். இந்த வகையில், நமது பரிந்துரை - கூகிள் பக்கம் தான்!

சத்தமே இல்லாமல் பந்தயத்தில் முந்திக் கொண்டிருக்கும் டிவிட்டரைப் பற்றியும் விரைவில் அலசலாம்!

20 கருத்துரைகள்:

உதயன் said...

சூப்பர்...

shirdi.saidasan said...

Will it be possible for you in future to limit your posts to tech articles only.

vino said...

yes, I decided to post only technology related articles in this blog!

Anonymous said...

please concentrate on spelling mistake

vino said...

//please concentrate on spelling mistake//

I am new to blogger and I am improving my tamil vocabulary. My tamil skills screwed by our education system :P

Jayadev Das said...

Good. One funny thing is people who don't interact even with their own neighbours would be made after the friends they found in the Social Websites! One suggestion to you: Please make the sub titles Bold that gives to avoid confusion while reading.

Jayadev Das said...

//Please make the sub titles Bold that gives to avoid confusion while reading.// I have written something utterly nonsense! Let me rephrase it:
Kindly make the subtitles to the articles into Bold Letters, [When I was reading, I was bewildered why the same thing is repeating again, and then understood that it is the title]. This confusion to the readers can be avoided by making the fonts for the subtitles Bold or something distinctly different.

vino said...

Good. One funny thing is people who don't interact even with their own neighbours would be made after the friends they found in the Social Websites!//
well said jayadeva! Atleast social networking sites bringing the ability to enhance people's social relationship..

//Please make the sub titles Bold that gives to avoid confusion while reading.//
this is valuable suggestion! I planned to make them bold while typing. but later, I totally forgot to do.

//I have written something utterly nonsense://
ha ha.. thing is, the statement is understood. Atleast we have common sense.. :)

thanks for coming, keep visiting for more information to be shared..

Anonymous said...

//vino said...
yes, I decided to post only technology related articles in this blog!//

Thanks. Then only I can promote such blogs.

Anonymous said...

Have you subscribed to my rss bundle? listed in my page top

vino said...

!now subscribed to the feed!
=)

Anonymous said...

////vino said...
yes, I decided to post only technology related articles in this blog!///

you are smart enough to realise which way will give you maximum mileage.

Anonymous said...

//vino said...
yes, I decided to post only technology related articles in this blog!//

you can write other topics in your other blogs.

vino said...

^^^
thanks =)

eseak said...

why don't you write a post for eseak.com

Anonymous said...

உங்கள் எழுத்துநடை அருமையாக விருவிருப்பாக இருக்கிறது. நன்றி.

vino said...

ரொம்ப நன்றி தோழர்.. =)

suresh said...

மிகவும் அருமை

Admin 5 said...

join now http://www.voicebook.wall.fm/join

Admin 5 said...

மிக அருமை

Post a Comment

பட்டதை பட்-னு சொல்லிடுங்க -