இதற்கு முன், ஃபோட்டோஷாப் பாடமாக அந்த பதிவும் செய்ததில்லை. அதனால், இம்முறை சிறிய முயற்சியாக இந்த முறை செய்கிறேன். சரியாக வரும்பட்சத்தில் தொடர்ந்தும் இந்த வகை பதிவுகள் இடுவோம்.
இணைய வடிவமைப்பில் பிரபலமாகி வரும் ஸ்டைல் தான் Engraved Text" என்று அழைக்கப்படும் செதுக்கப்பட்டது போல தோற்றமளிக்கும் எழுத்துக்கள். தலைப்பிற்கோ அல்லது பொத்தானின் வடிவமைப்பிலோ இது பெரும்பாலும் பயன்படுத்தப் படுகிறது. இதை எவ்வாறு செய்வது என்பதை பார்ப்போம்.
நாம் வினோ'ஸ் கஃபே-யின் பெயரினைக் கொண்டு இலட்சனை செய்துப் பார்ப்போம். நினைவிருக்கட்டும், இந்த வடிவமைப்பிற்கு நான் ஃபோட்டோஷாப்பின் சி.எஸ்.4 பதிப்பினைப் பயன்படுத்தி உள்ளேன்.
முதலில், ஃபோட்டோஷாப் திறந்துக் கொள்ளவும். Ctrl+N அழுத்தியவுடன் புதிய கோப்பினை உருவாக்க ப்ராம்ப்ட் வரும். அதில்,
Preset : Custom
Width : 300
Height : 100
Color Mode : RGB / 8 BIT
எனத் தேர்ந்தெடுத்து உள்ளிட்ட பின்னர், OK பொத்தானை அழுத்தவுடன். இப்போது, புதியதாக ஒரு கோப்பு வெள்ளை பின்னனியுடன் தோன்றி இருக்கும்.
பின்னர், புதிதாக ஒரு Layer உருவாக்கிக் கொள்ளுங்கள். Rectangular Marquee (M) பயன்படுத்தி ஒரு நீள்சதுரக் கட்டம் வரைந்து அதில் படத்தில் காட்டியது போல Gradient (G) பயன்படுத்தி நிறம் அடித்துக் கொள்ளுங்கள்.
வெறும் நிறமாக இருப்பதை விட, Matte என்றழைக்கப்படும் texture கொடுத்தால் அழகாகத் தெரியும். இதற்காக, Filter -> Noise -> Add Noise தெரிவு செய்து, வேண்டிய அளவு (இங்கே 1.5 கொடுத்துள்ளேன்) உள்ளிட்டு 'Enter' தட்டவும்.
பின்னர், Ctrl அழுத்திக்கொண்டே, Layer-ன் Thumbnail மீது சொடுக்கினால், அந்த Layer முழுதும் தேர்வாகிவிடும். இப்போது, Select -> Modify -> smooth எனத் தெரிவு செய்து, பின்னர் வேண்டிய அளவினைக் கொடுத்தால் வளைந்த மூலைகள் உருவாக்கப்படும்.
இப்போது, எழுத்துக்கள். Text (T) தெரிவு செய்து வேண்டிய எழுத்துருவையும் தேர்ந்தெடுத்துக்கொள்ளுங்கள். இப்போது, படத்தின் மீது தட்டச்சு செய்யலாம். இங்கே நம் வலைப்பூவின் பெயரைத் தட்டச்சு செய்துள்ளேன். நிறம் கருப்பினை தேர்வு செய்துக் கொள்ளுங்கள்.
உருவாக்கிய எழுத்து Layer-இனை இன்னொறு பதிப்பாக ஒன்று எடுத்துக்கொள்ள வேண்டும். இதை செய்ய, Layer -> Duplicate Layer தேர்வு செய்யலாம் அல்லது, Alt விசையினை அழுத்திப் பிடித்தவாறு Layer-இனை இழுத்தால், மற்றொன்று உறுவாகிவிடும். புதிதாக உருவாக்கப்பட்டுள்ள இந்த எழுத்துக்களுக்கு வெள்ளை நிறம் தெரிவு செய்துக்கொள்ளுங்கள்.
இப்போது, வெள்ளை நிற எழுத்துக்கள் கொண்ட Layer கருமை நிற எழுத்துக்கள் கொண்ட Layer-க்கு அடியில் கொண்டு சென்றுவிடுங்கள். இப்போது, Move (v) தேர்வு செய்துக்கொள்ளுங்கள். வெள்ளை நிற Layer தேர்வாகி இருக்கிறதா என்றுப் பார்த்துக்கொள்ளுங்கள். இல்லையென்றால், தெரிவு செய்துக்கொள்ளுங்கள். இப்போது, வெள்ளை நிற எழுத்துக்களை ஒரு Pixel கீழிறக்க வேண்டும். சுலபமாக விசைப்பலகையில் உள்ள ↓ விசையினை ஒரு முறை அழுத்தி 1 பிக்ஸள் கீழிறக்கிவிடலாம்.
அவ்வளவு தான். தக தகவென மின்னும் செதுக்கப்பட்ட எழுத்துக்கள் தயார்!
கருத்துக்கள் பெரிதும் எதிர்ப்பார்க்கப்படுகின்றன நன்பர்களே!
Subscribe to:
Post Comments (Atom)
Blog Archive
-
▼
2010
(33)
-
▼
07
(18)
- மின்னல் வேக Firefox 4.0b1 புதுசு கண்ணா புதுசு!
- மாற்றி யோசிக்கும் நெறோட் - புதிய டோறன்ட் தேடுதளம்
- கூகிள்-ஆவணங்களில் ஒளி எழுத்துணரி - புதிய வசதி
- தமிழ் தொழில்-நுட்ப வலைக்கான டெம்ப்ளேட்
- உலகிலேயே சிறிய 7mm HDD
- கணினிகளுக்கு தீங்கு விளைக்கும் 6 வித வைரஸ்கள்
- நன்பர்களுக்கு 'தொப்பி' கொடுக்க Scripts ரெடி!
- பட்ஜட் மொபைல் வாங்க குறிப்புகள்
- பைரேட்-பே டோறன்ட் இணையதளம் பயன்படுத்துகிறீர்களா? இ...
- 4k (2304p) துல்லிய காணொளிகள் - யூடியூப்-ன் அகல கால்?
- ஃபோட்டோஷாப் (1) - செதுக்கப்பட்ட எழுத்துக்கள்
- தமிழில் ஜாவா முயற்சி - நகைச்சுவை
- குரோமில் பல மின்னஞ்சல் கணக்குகள் - கூகிளில் அறிமுகம்
- இந்தியாவின் உலாவி - எபிக் பிரவுசர்
- டிவிட்டர் தேவை தானா?
- மின்னஞ்சல் முகவரி சேமிப்பு (E-Mail Harvesting) என்...
- கீ லாகிங் - இணையக் கள்வர்களிடம் இருந்து காத்துக்கொ...
- ஃபயர்ஃபாக்ஸ் நீட்சிகள் பாதுகாப்பனவையா?
-
▼
07
(18)
0 கருத்துரைகள்:
Post a Comment
பட்டதை பட்-னு சொல்லிடுங்க -