ஒன்று அலுவலக ரீதியான தொடர்புகளுக்கும், ஒன்று நன்பர்/உறவினர்களுடன் தொடர்புடன் இருக்கவும், ஒன்று வலைப்பூ எழுதவும், ஒன்று வலைப்பூக்களில் குழப்பத்தை உண்டாக்கவே பின்னூட்டம் போடவும் என பல மின்னஞ்சல் கணக்குகள் வைத்திருக்கும் நிலையில், ஏதேனும் ஒரு கணக்கில் தான் ஒரு உலாவியில் உள்நுழைந்து இருக்க முடியும்.
இதனால், நாம் எத்தனை கணக்குகள் வைத்திருக்கிறோமோ அத்தனை உலாவிகள் நிறுவிக்கொள்ளும் நிலை இருக்கிறது. இல்லையெனில், ஒரே உலாவியில் ஒன்றன் பின் ஒன்றாகத் தான் பயன்படுத்த முடியும். நாம் படும் அல்லல்களை கண்டுக்கொண்ட கூகிள் இப்போது ஒரே உலாவியில் இருந்தவாறே பல கணக்குகளுக்குள் உள்நுழைந்து பயன்படுத்த முடியும். ஆனால் இதைப் பயன்படுத்த கூகிள் குரோம் உலாவியின் incognito சாளரம் ஒன்றினை திறந்து பயன்படுத்த வேண்டும். பரிசோதித்து விட்டேன். சரியாகவே வேலை செய்கிறது.
சைடு டிஷ்
- ஜி-மெயிலின் Offline வசதியினைப் பயன்படுத்துவோர் இந்த வசதியினைப் பெற முடியாது.
- Chrome incognito சாளரம் Ctrl+Shift+N ஆகிய விசைகளை ஒருசேர அழுத்தும் போதும் தோன்றும்
0 கருத்துரைகள்:
Post a Comment
பட்டதை பட்-னு சொல்லிடுங்க -