Monday, July 05, 2010

உலகிலேயே சிறிய 7mm HDD

ஹிட்டாச்சி நிறுவனம் வெறும் ஏழு மி.மீ. தடிமன் அளவே கொண்ட வன்-தட்டினை அறிமுகப்படுத்தியுள்ளது. தகவல் நினைவகம் மற்றும் வன்பொருள் தயாரிப்பில் தொடர்ந்து தனது இடத்தை தக்க வைத்து வரும் ஹிட்டாச்சி நிறுவனம் இந்த புதிய கண்டுபிடிப்பை நிகழ்த்தியுள்ளது. மடிகணினி மற்றும் உள்ளங்கை அளவுக் கணினிகளின் வடிவமைப்புக்கி இந்த கண்டுபிடிப்பு முகவும் உபயோகக் கரமாக இருக்கும் என்பதால் இந்த வன்-தட்டு வன்பொருளிற்கு துறையில் பெரிய அளவில் வரவேற்புக் கிடைத்துள்ளது.
இது 320 ஜி.பி அளவிற்கு தகவல்களை நினைவில் கொள்ளும் எனவும், இதன் வேகம் 7200 rpm அளவிற்கு இருக்கும் எனவும் தெரிவித்துள்ளனர். விரைவில் இந்த கண்டுபிடிப்பினை, Porable MPx Player-களிலும் இனைத்துத் தயாரிக்க முனைந்துள்ளனர்.
அடிப்படை விபரங்கள்:

கொள்ளளவு: 320 GB; 250 GB; 160 GB

Record Zone எண்ணிக்கை: 24

இடைமுகம்/வகை: SATA

வேகம்: 7200 rpm

எடை: 95 கிராம்

மேலும் இதைப் பற்றி அறிய, ஹிட்டாச்சி நிறுவன அதிகார்ப்பூர்வ டேட்டா ஷீட்டினை தரவிறக்கிப் பாருங்கள்

0 கருத்துரைகள்:

Post a Comment

பட்டதை பட்-னு சொல்லிடுங்க -

Blog Archive