டோறன்ட் கோப்புகளை வாடிக்கையாளர்களுக்கு வழங்குவதிலும், டோறன்டிற்கான நிரல், கோப்புகளை ஆராய்ந்து, நெறிப்படுத்தி அனைத்து கணினிகளுக்கும் பிரித்து அனுப்பும் சேவையினையும் செய்யும் இணையதளமே! பல இணையதளங்கள் இருந்தாலும், 'பைரேட்-பே'விற்கு இருக்கும் சிறப்பே தனி தான். எதிலும் வேகம், விபரம் அறிந்து கொடுப்பதிலும் வேகம், டோறன்ட்டின் நிலைமை அறிந்து தெரிவிப்பதிலும் வேகம், டோறன்ட்டினை பயனர்கள் தேடுவதிலும் துல்லியம் ஆன தனக்கே உரிய சிறப்புடன், டோறன்ட் உலக வாடிக்கையாளர்களின் மனதிற்குப் பிடித்த இணையதளம் பைரேட்-பே தான். இவர்களுக்கு போட்டியாக இருந்த மினி-நோவா கூட சில காலங்களுக்கு முன்னர், பல சட்ட பிரச்சனைகளால் காலாவதியாகிப் போனது. இப்போது, பைரேட்-பே தான் டோறன்ட் கடலின் தலைவன்!
இந்த தலைவனின் அடிமடியில் கை வைத்தவர் தான் ருஷ்ஷோ என்பவர். அர்ஜன்டின நாட்டினை சேர்ந்த இவர் தான் இந்த விபரீத விளையாட்டினைக் கையாண்டார். இவரே இதைப் பற்றி பல விடயங்களை இணையத்தில் பகிர்ந்துக் கொண்டார். இவர் சொல்லும் ஒவ்வொரு விடயமும் பைரேட்-பே பயனர்களுன் நாடித்துடிப்பை பன்மடங்கு உயர்த்துகிறது. தானே எதிர்ப்பார்க்காத பல குறைபாடுகள் உள்ள பாதுகாப்புக் கட்டமைப்பினை பைரேட்-பே வடிவமைப்பாளர்கள் செய்திருப்பதாக நக்கலடிக்கிறார். அதிர்ந்துப் போன இணைய உலகம் தமது பரந்த பார்வையினை இவர் மீதும் திருப்பியது. ருஷ்ஷோ, தான் மிக எளிதாக கட்டமைப்பை உடைத்து உள்ளே நுழைந்தது எளிதாக இருந்தது எனவும், இணையதள சேவையகம் தனது கட்டுப்பாட்டில் வந்துவிட்டது எனவும் மிரட்டி இருக்கிறார். கூடவே, தான் பைரேட்-பே தளத்துன் மொத்த விபரத்தையும் தன்னிடம் சேமித்து வைப்பிருப்பதாகவும், பயனர்களின் பெயர், மின்னஞ்சல் முகவரி, நாடு என அனைத்தும் தன்னிடம் இருப்பதாக பயனர்களுக்கு குண்டு வைத்தார். ஆனால் தான் இதனை தவறான முறையில் பயன்படுத்தப் போவதில்லை எனவும், யாருக்கும் லாபத்திற்காகவோ, அல்லது இலவசமாக கையளிக்கப் போவதில்லை என்கிறார் ருஷ்ஷோ. பைரேட்-பே இணைய தளத்தில் எந்த பாதிப்பினையும் ஏற்படுத்தவில்லை எனவும் அறிவித்தார்.
இதுப் பற்றி பைரேட்-பே இணையதளம் எந்த அறிவிப்பும் தரவில்லை. இதனால், ருஷ்ஷோ சொன்ன தகவல்களையும் எளிதில் நம்பிவிட முடியாது. 'பைரேட்-பே'விற்கு இனி தனது ஆளுமை மெல்ல மெல்லக் காணாமல் போகும் அபாயமும் ஏற்பட்டுள்ளது.
இலவச/திறந்த-மூல மென்பொருள் பயனர்களுக்கும், சட்ட ரீதியாக நிரல்களை பயன்படுத்துவோர்களுக்கும் சில மணி நேர வேடிக்கையாகவும் இருந்தது என்பது மிகவும் தலையாய செய்தி!
0 கருத்துரைகள்:
Post a Comment
பட்டதை பட்-னு சொல்லிடுங்க -