Friday, July 02, 2010

மாற்றி யோசிக்கும் நெறோட் - புதிய டோறன்ட் தேடுதளம்

டோறன்ட் பயன்பாட்டாளர்களுக்கு ஒரு மகிழ்ச்சியான செய்தி. டோறன்ட் தேடுதளங்களில் சற்று மாற்றி யோசிக்கும் தேடுதளம் ஒன்று உருவாகி, மற்ற தளங்களில் இருந்து தனது தனித்துவத்தை நிலை-நாட்டியுள்ளது. அவர்களுக்கே ஒரு கசப்பான செய்தியும்: இந்த சேவை தற்சமயம் மூடப்பட்டுள்ளது.
பலருக்கு டோறன்ட் என்பது ஒரு புரியாட புதிராகவே உள்ளது. அதனால், அவர்களுக்கு எந்த டோறன்ட் இறக்கம் செய்து பயனடுத்த வேண்டும் என்று தவிப்பு எப்போதும் உண்டு. seed அதிகம் இருக்க வேண்டுமா? leeches என்றால் என்ன? peer என்றால் என்ன? இதை எல்லாம் இப்போதாவது தெரிந்துக் கொள்ளலாம் என்று டோறன்ட் பற்றித் தெரியாதவர்கள் ஆர்வமாக இருப்பீர்கள். ஆனால் அதைக் கற்க வேண்டிய அவசியம் எல்லாம் காலாவதியாக்கிவிட்டது இந்த நெறோட். ஆம், எதற்கு அதெல்லாம் தெரிந்துக்கொள்ள வேண்டும்.

கிட்ட தட்ட கூகிளின் "I'm Feeling Lucky" அம்சத்தைப் போலவே இந்த தேடல் எந்திரத்தின் செயல்பாடு உள்ளது. நாம் உள்ளிடும் டோறன்டின் பெயரை வைத்து டோறன்ட்களைத் தேடி, அதில் சிறந்தவற்றை ஆராய்ந்து, வரிசைப்படுத்தி, அதில் முதல் டோறன்டினை நமக்கு தகவலிறக்கம் செய்துத் தருகிறது.



இந்த தளத்தின் மற்றொரு சிறப்பு, தளத்தின் வடிவமைப்பு முழுதும் சுத்தமாகவும், தெளிவாகவும் அமைக்கப்பட்டுள்ளது. விளம்பரங்கள், பாப்-அப் சாளரங்கள் எதுவும் தோன்றி தொல்லைக் கொடுக்காத ஒரே டோறன்ட் தளம் என்னும் பெருமை நெறோட்-டிற்கு தான் சேரும். தள வடிவமைப்பைப் பற்றி,

 நெறோட் உரிமையாளரும், உருவாக்கியவருமான நிகோலஸ் ட்விட்டரில் சொன்ன சேதி

இந்த அதிரடி வருகையால், மற்ற தளங்களுக்கு பாதிப்பு உள்ளதாக கருதி, ஏனைய தளங்களும் நெறோட்டிற்கு உடன்படிய மறுக்கின்றன. இதனால், நிகோலஸ் அவர்கள், மற்ற தளங்களின் நலன் கருதி, நெறோட்டில் சில மாற்றங்கள் செய்து நெறோட்-2 தொகுப்பு வெளியிட முடிவு செய்துள்ளார். இதனால், மற்ற தளங்களுக்கும் தனது வாடிக்கையாளர்களை அனுப்பி வைப்பதாக இப்போதே தனது தளத்தில் உறுதி அளித்துள்ளார். அதுவரை தற்போதுள்ள நெறோட்டினையும் மூடிவிட்டார்.

சைடு டிஷ்:

  • நிக்கோலஸ் எல்லாவற்றையுமே மாற்றி யோசிப்பார் போல. Torrent என்பதையே திருப்பிப் போட்டு Nerrot என்று பெயரிட்டுள்ளார்.
  • நெறோட் தளத்திற்கு, ஒரே ஒரு வலைப்பக்கம் மட்டுமே அதுவும் முகப்பு பக்கம் மட்டுமே உள்ளது. உலாவிகளில் இந்த பக்கம் எளிதாகவும், விரைவகவும் ஏற்றப்படுகிறது.
  • திறந்த-மூல நிரல்களை மேம்படுத்துவோருக்கு வரமாகவும், இறுக்கப்பட்ட மூடிய-மூல நிரல்களை மேம்படுத்துவோருக்கு கலக்கமாகவும், ஹாக்கர்களுக்கு தங்கள் ஆளுமைக்குட்பட்ட ஏரியாவாகவும், இருக்கும்.
  • "Nerrot: every pirate's best weapon." என்று நொகோலஸ் அவர்களே தனது டிவிட்டர் பக்கத்தில் பகிரங்கமாக அறிவித்தார் என்பதும் குறிப்பிடத் தக்கது.

நிகோலஸ் தனது நெறோட் தளத்தின் புதிய தொகுப்புடன் வெளிவருவார் என்று நாமும் எதிர்ப்பார்ப்போம்!

நம்பகமான மூலத்தின் டோறன்ட் பயன்படுத்துவோம், Hack செய்யப்பட்ட நிரல்களைத் தவிர்த்திடுவோம், இணையத்தின் சுதந்திரம் அதில் திளைத்திடுவோம்.

சந்திப்போம்
-வினோ =)

1 கருத்துரைகள்:

Saran said...

Thanks for adding my blog in your site(sidebar).

i don't know how to contact you thats why sending through comment

Post a Comment

பட்டதை பட்-னு சொல்லிடுங்க -

Blog Archive