சகல வசதிகளைக் கொனர்ந்த வண்ணம் உள்ள கூகிள் நிறுவனம், தற்போது Google Docs என்னும் ஆவண திருத்தி இனைய-நிரலில் இப்போது மிகவும் சிறப்பான வசதி ஒன்றினை அமலுக்கு கொண்டு வந்துள்ளது. ஆங்கிலத்தில் OCR (Optical Character Reading) எனவும் தமிழில் ஒளி எழுத்துணரி என்றும் அழைக்கப்படும் இந்த நுட்ப வசதி, மற்ற ஆண்லைன் ஆவண திருத்தி நிரல்களிடம் இருந்து தன்னை பல அங்குலம் அப்பால் கொண்டு நிறுத்திக் கொண்டது.
இந்த வசதி மூலம், நாம் எழுத்துணராத PDF-ல் இருந்தும், மற்றும் மேவப்பட்ட (Scanned) நிழற்படத்தில் உள்ள எழுத்துக்களில் இருந்தும் எழுத்துக்களை உணரப்பட்டு, அதனை தொகுக்கத் தக்க ஆவனமாக மாற்றம் செய்து அளிக்கிறது.
எழுத்துணரி அவசியம் தானா?
எழுத்துனரி வசதி தரப்பட்டதன் அவசியம் ஏதேனும் உண்டா என்று கேட்டால், அதற்கு நேரடியான ஒருமித்த கருத்து சொல்ல முடியாது. அனைத்துமே எண்முறை ஆக்கமாக மாறிவரும் நிலையில், பலருக்கு இந்த வசதி தேவைப்படலாம். உதாரணத்திற்கு, ஒரு ஆசிரியர் பல ஆண்டுகள் முன்பு புத்தகம் ஒன்று எழுதி வெளியிட்டார். இப்போது அந்த புத்தகத்தினை தொகுத்த, மேலதிக பதிப்பாக வெளியிட விரும்புகிறார். ஆனால், அப்போது அச்சடித்த புத்தகம் மட்டும் தான் அவரிடம் உள்ள பட்சத்தில், அந்த பக்கங்களை மேவி, நிழற்படத்தைத் கூகிளில் தரவேற்றிவிட்டால், அவருக்குத் தொகுக்கக் கூடிய வகையில் ஆவணம் கிடைத்து விடும். அது மட்டும் அல்லாமல், மேவி உருவாக்கப்பட்ட PDF வகை மின்-நூல்களும் இதே வகையில் பயன்படுத்தலாம். அந்த வகையில், பலருக்கு இந்த வசதி வரவேற்கத்தக்கதாக இருக்கும். பலருக்கு இதன் தேவையே இல்லாமல் இருக்கும்.
சோதித்ததில்:
கூகிள் ஆவணம் இந்த வசதியினை அதிக கவனத்துடனே கையாண்டிருக்க வேண்டும். அதனால், அதன் அவுட்புட் நன்றாகவே வந்தது. தரவேற்றம் செய்யும் நிழற்படமே அல்லது மின்-நூலோ, தனது தெளிவு (ரெசொலியூஷன்) அதிகம் ஆக ஆக, மாற்றம் செய்து வரும் ஆவணம் துல்லியமாக வரும்.
நானே ஒரு நிழற்படம் ஒன்றினை Photoshop கொண்டு உருவாக்கி, தரவேற்றிய பின் பெற்ற அவணத்தில் எந்த பிழையும் இல்லாமல் இருந்தது. இதில் நான் கொரியர் நியூ வகை எழுத்துரு கொண்டு படம் செய்திருந்தேன். பின்னர், டைம்ஸ் நியூ ரோமன் பயன்படுத்திப் பார்த்த போது ஒரு சில பிழைகள் இருந்தன. கொரிய நியூ எழுத்துரு டைம்ஸ் நியூ ரோமன் எழுத்துருவை விட தெளிவாக உள்ளதால் இந்த வேறுபாடுகள்.
கூகிளின் ஒளி எழுத்தணரி பற்றி எனது கருத்து:
கூகிளின் இந்த வசதி இன்னும் நிறைய மேம்படுத்தப்பட வேண்டும். அதை செய்யாமலேயே பிற மொழிகளிலும் இந்த வசதியைக் கொடுக்க முனைந்துள்ளது பலவீனமே ஆகும்.
சைடு டிஷ்:
மாணவர்களே, உங்கள் assignment இனி எளிதாகி விட்டது. கலக்குங்கள்!
Subscribe to:
Post Comments (Atom)
Blog Archive
-
▼
2010
(33)
-
▼
07
(18)
- மின்னல் வேக Firefox 4.0b1 புதுசு கண்ணா புதுசு!
- மாற்றி யோசிக்கும் நெறோட் - புதிய டோறன்ட் தேடுதளம்
- கூகிள்-ஆவணங்களில் ஒளி எழுத்துணரி - புதிய வசதி
- தமிழ் தொழில்-நுட்ப வலைக்கான டெம்ப்ளேட்
- உலகிலேயே சிறிய 7mm HDD
- கணினிகளுக்கு தீங்கு விளைக்கும் 6 வித வைரஸ்கள்
- நன்பர்களுக்கு 'தொப்பி' கொடுக்க Scripts ரெடி!
- பட்ஜட் மொபைல் வாங்க குறிப்புகள்
- பைரேட்-பே டோறன்ட் இணையதளம் பயன்படுத்துகிறீர்களா? இ...
- 4k (2304p) துல்லிய காணொளிகள் - யூடியூப்-ன் அகல கால்?
- ஃபோட்டோஷாப் (1) - செதுக்கப்பட்ட எழுத்துக்கள்
- தமிழில் ஜாவா முயற்சி - நகைச்சுவை
- குரோமில் பல மின்னஞ்சல் கணக்குகள் - கூகிளில் அறிமுகம்
- இந்தியாவின் உலாவி - எபிக் பிரவுசர்
- டிவிட்டர் தேவை தானா?
- மின்னஞ்சல் முகவரி சேமிப்பு (E-Mail Harvesting) என்...
- கீ லாகிங் - இணையக் கள்வர்களிடம் இருந்து காத்துக்கொ...
- ஃபயர்ஃபாக்ஸ் நீட்சிகள் பாதுகாப்பனவையா?
-
▼
07
(18)
6 கருத்துரைகள்:
இது பற்றி மதிப்பிறுகுறிய நண்பர் திரு.பிகேபி அவர்கள் 2006 ம் ஆண்டு ஒரு பதிவு எழுதியிருந்தார் முயற்சி செய்து பாருங்களேன் http://pkp.blogspot.com/2006/11/ocr.html
பார்த்தேன் ஜிஎஸ்ஆர், நல்ல இனைப்பு கொடுத்தீர்கள். நன்றி. =)
Hi
see the link
http://alturl.com/rwty
ஓட்டு போட வந்தேன். பதிவே போட வேண்டியதாகிவிட்டது.
மகிழ்ச்சி tamilfa. நேரம் இல்லாத காரணத்தினால் தமிழிஷில் இனைக்கவில்லை. பதிவே மிக சுலுவாக போட்டுவிட்டேன். எடுத்து வைத்த screenshot கூட இனைக்கவில்லை..
நன்றி!
நீங்கள் சொல்வது உண்மைதான் நண்பரே
Post a Comment
பட்டதை பட்-னு சொல்லிடுங்க -