அந்த சிறப்பு யாதெனில், முதன்முறையாக ஒரு உலாவி நிரல், தன்னை மட்டும் காக்காமல், தான் நிறுவப்பட்டிருக்கும் கணினியையும் காக்கும் என்பதே. காரணம், உலாவியுடனே இனைந்திருக்கும் Anti-Virus நிரலும் இனைந்து இயங்கும். இந்த Anti-virus நிரலினைக் கொண்டு, நமது கணினியில் உள்ள வைரஸ்களையும் மேவிப் பிடித்து அழித்துவிடலாம். மேலும் இந்த உலாவியுடன், பெரும்பாலான இந்திய மொழிகளில் தட்டச்சு செய்ய முடியும். ஃபயர்ஃபாக்ஸ் Plug-in கூட இந்த எபிக் பிரவுசருடன் இனைந்து செயல்படும் ஆற்றல் கொண்டிருக்கிறது. அத்துடன், கிட்டதட்ட ஓபெரா உலாவியில் உள்ள சைட்பார் போன்று ஒரு சைட்பார் உள்ளது. இந்த சைடுபார் எந்த அளவிற்கு உபயோகமாக இருக்கிறது என்று நீங்களே உபயோகித்துப் பாருங்கள். அசந்துப் போவது உறுதி.
இன்னும் பல புதிய அம்சங்களுடன் பிரகாசிக்கிறது இந்த எபிக் பிரவுசர். நாம் பயன்படுத்தும் போது, நமது நடவடிக்கைகளை நிரலினை மேம்படுத்தும் பொருட்டும் கூட மேமபாட்டாளர்கள் சேகரிப்பதில்லை. வேகம் எல்லாம் ஃபயர்ஃபாக்ஸ் போலவே பின்னி எடுக்கிறது. பயன்பாட்டில் மொஜில்லாவுடன் ஒப்பிடுகையில் பெரிய அளவில் வித்தியாசம் தெரியவில்லை என்றாலும், ஃபயர்ஃபாக்ஸ் விட எபிக் பிரவுசர் கொஞ்சம் மன நிறைவு தருகிறது. மொஜில்லாவினை விட்டுக் கொடுக்காதவர்கள் இதையும் பயன்படுத்திப் பாருங்கள். இதுவும் மொஜில்லாவின் ஒரு பதிப்பு போன்றது தானே.
சைடு டிஷ்:
- எபிக் பிரவுசர் உலாவியைப் பற்றி கூறும் போது, Hidden Reflex நிறுவனத்தின் நிறுவனர் அலோக் பரத்வாஜ் அவர்கள், "உலகில் மென்பொருள் மற்றும் தொழில்நுட்பம் சிறக்க புதுப்புது அறிவியல் சாதனைகளின் மூலமாக இந்தியா இருக்கிறது என்பதை நான் நிரூபிக்க வேண்டும்" என்கிறார்.
- சில சமயங்களில் தனது Stability-யினை இழந்து விடுகிறது. இருந்தாலும், இது பலர் பயன்படுத்தி, அதற்கான பின்னூட்டங்களும் சொல்லும் போது, மேலும் சிறப்பாக மேம்படும். இதனால், இந்தியாவின் உலாவியினை ஆதரிப்போம்
புதுப்பிப்பு:
இனைப்புக் கொடுக்கத் தவறிவிட்டதால் மன்னிக்கவும்! எபிக் பிரவுசரின் இனைய தளப் பக்கத்துன் முகவரி இது தான்! http://www.epicbrowser.com/
தறவிறக்கம் செய்துப் பயன்படுத்திப் பாருங்கள்!
4 கருத்துரைகள்:
Very Nice Browser....
All Indians use it ....
yes, we should!
பயன்படுத்திப் பார்த்தேன்
சற்று மெதுவாகவே இயங்குகிறது
@ ஜில்தண்ணி
ஆம். தற்போதைய பதிப்பு Stability இல்லாமல் இருப்பது தான் காரணம். மேலும், உலாவியின் அங்கங்கள் பல எபிக் சர்வரில் இருந்து நிகழ்-நேரத்தில் பெறப்பட்டு இயங்குவதால், தொடங்கத்தில் சற்று மெதுவாகவே இயங்கும். 5 அல்லது 6 நிமிடங்களில் சாதாரண வேகத்துடனே இயங்கும்.
Post a Comment
பட்டதை பட்-னு சொல்லிடுங்க -