Friday, July 16, 2010

டிவிட்டர் தேவை தானா?

சமூக வலதளங்களில் தனக்கென ஒரு இடத்தினை பிடித்துக் கொண்டிருக்கும் வலை தளம் இந்த டிவிட்டர். ஃபேஸ்புக் போன்ற சமூக தளங்களுடன் வேறுபடுத்திக் காட்டிக் கொள்ளும் இந்த வலைதளத்தினை உபயோகிப்பவர்களின் என்னிக்கை நாளுக்கு நாள் உயர்ந்துக் கொண்டு வருகிறது. எதற்காகத் தான் இந்த டிவிட்டர் என்று சிந்தித்துப் பார்த்தேன். இது நம் அன்றாட இணைய வாழ்விற்கு அவசியமான ஒன்று தானா? யார் இந்த 'பின்பற்றுவோர்கள்'? அவர்களுக்கு நம் கருத்து எந்த வகையில் உதவும் என்று சிந்தித்தேன். டிவிட்டரால் யார் சாதித்தது என்ன? மிஞ்சிப் போனால் எனக்கு இந்த பதிவு போட காரணமாக இருக்கிறது டிவிட்டர். சிந்தித்ததன் விளைவாக தோன்றிய கருத்துக்களை இங்கே பதிவுலகில் பகிர்ந்துக் கொள்கிறேன்.

காரணம் ஒன்று: என்ன தான் உங்களுக்கு பிரச்சனை?

எனக்கு ஒரு தமிழ்த்திரைப்படத்தின் அந்த நகைச்சுவைக் காட்சி தான் நினைவிற்கு வருகிறது. அண்ணன், தம்பி இருவரும் (மொத்தமே இரண்டு பேர் தாங்க!) சொல்வார்கள்.

அண்ணன் : தம்பி, நான் சொல்றேன்.. தயவுசெஞ்சுக் கேளு

தம்பி : முடியாதுன்னே..

இதையே மீண்டும் மீண்டும் சொல்லிக் கொண்டிருப்பார்கள். இந்த நகைச்சுவை தான் டிவிட்டர் ரூபமாக திரையில் எனக்குத் தெரிகிறது. உலகில் யாருக்கும் நான் என்ன செய்கிறோம், என்ன நினைக்கிறோம், நேற்று மாலை விருந்துக்கு சென்ற போது எந்த நிறத்தில் ஆடை அணிந்தோம் என்பதைப் பற்றி யாருக்கும் கவலை இல்லை. இது பல முறை நாமே உணர்ந்திருப்போம். அப்படி இருக்கும் போது, இந்த டிவிட்டரில் மட்டும் நாம்ம் என்ன செய்கிறோம், என்னவாக இருக்கிறோம் என்றெல்லாம் ஏன் சொல்ல வேண்டும். சற்று சிந்தித்தால் சிரிப்பாக கூட வரும்.
wow, what an awesome dinner! Would be better with less added salt. ahem!

நினைத்துப் பாருங்கள், யாராவது உங்களிடம் வந்து, நேற்றிரவு சாதத்தில் உப்பு அதிகமாக இருந்ததா என்று கேட்டுத் தெரிந்துக் கொள்வார்களா? அப்புறம் எதற்கு இந்த மாதிரியான டுவீட்டுகள் என்று புரியவில்லை. என்ன தான் பிரச்சனை இவர்களுக்கென்றும் தெரியவில்லை.

காரணம் இரண்டு: இது குருவி தானா? இல்லைக் காக்காவா?

குருவி கூவினால் இனிமையாக தான் இருக்கும். அதிலும், கூட்டம் கூட்டமாக குருவிகள் கூவினால் இன்னும் இனிமையாகத் தான் இருக்கும். ஆனால், ஒரு குருவி கூவியதையே இன்னொறு காகம் கரைந்தால் நன்றாகவா இருக்கும். நான் இங்கே எதற்காக காகம் என்றுக் கூறுகிறேன் என்றால், பெரும்பாலான குருவிகள் செய்யும் வேலை இது. தாங்களும் பல வகைகளின் சிந்தித்து டுவிட்டுவார்கள். நின்று என்னவென்று கேட்க நாதி இருக்காது. மற்றவர்களும் அவரவர் டுவிட்டுவதற்கு திட்டம் தீட்ட நேரம் போதாதல்லவா? அதனால், தம்மைக் கவனிக்க வைக்க ஒரு வழி இருக்கிறது. அதற்கு பெயர் ReTweet என்று வைத்திருக்கிறார்களாம்.

@boss this is 100th tweet i am retweeting urs. kudos

பிரபல நடிகர் ஒருவருக்கு ஒரு செய்தி அனுப்பினால் அவர் பதில் அனுப்பாமல் போக பல வாய்ப்புகள் உள்ளன. விடாமல், அவரது கூவல்களை மறுகூவல் செய்வதன் மூலம் அதாவது, காக்கா பிடிப்பதன் மூலம், தன்னை திரும்பிப் பார்க்க வைக்கலாம் என்ற எண்ணம் வேறு. பிரபலங்களைத் தவிற, இன்னும் பிற குருவிகள் காக்கா பிடிப்பதில் ஆர்வமோ ஆர்வம் தான்.

காரணம் மூன்று: இதுக்கெல்லாம் கூட நேரம் இருக்கா?

"கண்ணா, கொஞ்சம் கடைக்குப் போய் ரெண்டு தேங்கா பெத்தை வாங்கிட்டு வாடா" என்று அம்மாமார்கள் கெஞ்சும் போது, "அடப்போம்மா வேற வேலை இல்ல? அவனவன் நேரம் இல்லாம திண்டாடுறான்" என்று சொல்லி, கணினியினைத் திறந்து டிவிட்டருக்குள் நுழையும் செல்வ சீமான்கள் அதிகம். அவர்களுக்கு பதிவுகள் எழுத நேரம் இருக்காது. உக்கார்ந்து வெட்டி விடயங்களை யோசித்து யோசித்து பின்னர் ஒருவழியாக கூவிவிடுவார்கள்.
I know he would do like this! even jesus told this once.. bit.ly/mokkaina_ithu_mokka
தான் சொல்வது தான் சத்தியம் என்று நிரூபிக்க அத்தாட்சியாக இணையத்தில் ஒத்தக் கருத்துடைய ஒரு வலைப்பக்கத்தினைத் தேடிப் பிடித்து அதற்கென்று உள்ள முகவரி சுறுக்கும் தளங்களை நாடி, சுறுக்கவும் செய்து... முடியல!

காரணம் நான்கு: நீயா நானா? ரொம்ப முக்கியம்!

ஒவ்வொரு பயனர்களுக்கும், இத்தனை ஃபாலோயர்கள் இருப்பார்கள். உங்கள் நன்பர் வட்டத்தில் ஒருவருக்கு மட்டும் 199 ஃபாலோயர்கள் என்றுக் கண்டுக்கொண்டால், கண் அவிந்தேவிடுவது போல அவரது பக்கத்தினைப் பார்ப்பார்கள். தனக்கு வெறும் 19 ஃபாலோயர்கள் இருப்பதை கௌரவக் குறைச்சலாக நினைக்கிறார்கள்.
Good morning ppl! omg, let your spl blessings r for my t(s)weet followers..!
தனக்கும் அதிக ஃபாலோயர்கள் வேண்டுமென்று நினைத்து, அதற்காக கொடூரமாக சிந்திக்க தொடங்கிவிடுவர்!

காரணம் ஐந்து: எச்சரிக்கை: அவங்க கெளம்பிடுவாங்க!

இருக்கிறார்கள் பல பேர். எல்லோருமே பார்த்து இருப்போம்.

இது போன்ற கரைச்சல்களை!
Earn Money Online! I made 10000000 with in one month! bit.ly/vadai

இது போன்றும்!
Today's Joke: Mr Bob was walking on the road. A stranger asked him to read more bit.ly/thaangalada

நாங்கள் போலி அல்லாத போலிகள் என்று சொல்லப்படும் உண்மையான நேர்மையான போலிகள்]
Do not believe in fake profiles. I am real! - actor!

அவர்கள் மட்டுமல்ல்; அதுகளும் தான்
dyk: 14 out of 10 ppl dont know maths! dailytweetsby bit.ly/tweetbots

முடியலடா! (முடிவுரை)

தேவையா என சிந்தியுங்கள்! சமூக நல்லினக்கம் எல்லாம் இப்படி மாறிவிட்டால், வாழ்க்கை தானியங்கி எந்திர போல ஆகிவிடும்.

dad, I am asking for new version 146.0 of Iphone since long back

இப்படியொறு கூவல் ஒரு மகனிடம் இருந்து தந்தைக்கு செல்லும் காலமும் வந்துவிடும். விழித்துக்கொள்ளாமல் இருந்தால்!

காதலரிடம் காதலை சொல்லவும், சண்டைப் போடவும், சமாதானத்திற்கும், நன்பர்களுடன் அரட்டை அடிக்கவும், திட்டங்கள் தீட்டவும், கூடி ப்ராஜக்ட் போனறவைகள் மேற்கொள்ளவும், ஆசிரியர்களிடம் சந்தேகம் கேட்கவும், ஆசிரியரும் சந்தேகம் தீர்க்கவும் 140 எழுத்துக்கள் போதுமென்று நினைக்கிறீர்களா? பிரபலங்களுக்கு வேண்டுமானால் 140 எழுத்துக்கள் தமது சுய விளம்பரத்திற்காக போதலாம். நமக்கு இதெல்லாம் தேவை தானா? இதைக் கூட டிவிட்டரில் சொல்ல இயலாது! மேற்படி, வாசகர் விருப்பம்!

ஆம், நானும் டிவிட்டர் பயன்படுத்தியவன் தான். அதனால் தான் இவ்வளவும் அறிந்துக் கொண்டேன். மற்றவர்களுக்கும் எச்சரிக்கிறேன். நன்றி!

-வினோ

மேலே குறிப்பிட்டிருந்த Quotes அனைத்துமே கற்பனை. நிகழ்-நேரத்திலோ அல்லது யாருடைய கற்பனையிலேயோ இது தோன்றி இருந்தால் தறசெயலானதே.

14 கருத்துரைகள்:

http://rkguru.blogspot.com/ said...

அவங்க அவங்கலுக்கு அது அது தேவையாய் இருக்கிறது.........

vino said...

சரியா தான் சொன்னீங்க RK GURU..

shirdi.saidasan said...

fantastic.

vino said...

///shirdi.saidasan said...
fantastic.
July 16, 2010 11:24 PM ///

நன்றிங்க.. எப்படி இருக்கீங்க?

சி.பி.செந்தில்குமார் said...

ட்விட்டர் மேட்டர் செம விட்டர் அட்டாக்

ARV Loshan said...

ஏன்யா வினோ ட்விட்டர் மேல் இத்தனை கடுப்பு?
நான் ஒரு ட்விட்டர் தான். இதிலே உள்ள சில கோமாளித்தனங்களை செய்தாலும் அதற்கு அடிமையானதில்லை :)
நாங்க அரட்டைக்கு பயன்படுத்துவோம்.ட்விட்டரின் தமிழ்ப் பெயர் திண்ணை ;)
btw உங்க எழுத்தின் flow வில் அத்தனையையும் ரசிக்கக் கூடியதா இருந்தது.
நிஜமான த்ரிஷா,நமீதா எல்லாரும் ட்விட்டர் ஆயிட்டாங்க தெரியுமா?
வாங்களேன் மறுபடி. ;)

LOSHAN
http://arvloshan.com/

ரோஸ்விக் said...

ட்விட்டர் பக்கம் இன்னும் போனதில்லை... நல்லதுக்குத் தான்னு நினைக்கிறேன். :-)

vino said...

@ சிபி.செந்தில்குமார்
அட்டாக் எல்லாம் இல்லீங்க..

@ LOSHAN
என்னங்க இப்படி சொல்லிட்டீங்க. த்ரிஷா, நமீதா என்ன சொல்லப்போறாங்க. முக்கியமா எது சொன்னாலும் மீடியா இருக்காங்க நம்ம கிட்ட கொண்டு வருவதற்கு!

@ ரோஸ்விக்
'அந்த பக்கம் போகாதீங்க'-அப்படினு நான் தான் சொன்னேன்னு லோஷன் அண்ணன் கிட்ட சொல்லிடாதீங்க!

Thameez said...

Without twitter I cannot imagine. Sorry Vino thameez@twitter

vino said...

வாங்க Thameez! இது தான் பிரச்சனை. டிவிட்டர் இல்லாமல் யோசித்துப் பார்க்கக் கூட முடியவில்லை என்று சொல்லிவிட்டீர்களே. எனக்கு வருத்தமளிக்கிறது பாருங்கள். உங்கள் பொன்னான நேரத்தில் டிவிட்டருக்கு அதிகம் கொடுத்துவிடாதீர்கள்.

mohamed asfer said...

ஏன் இவ்வளவு கடுப்பு. facebook,myspace போன்ற தளங்களில் நீங்க ஒரு பிரபல்யத்தின் உண்மையான பக்கத்தை கண்டுபிடிப்பது மிகக் கடினம் ஆனால் twitter ல் verified account என்று ஒரு வசதி உள்ளது.அதனைக்கொண்டு நீங்கள் அந்த கணக்கின் உறுத்தித் தன்மையை அவதானிக்கலாம். எனது கருத்துப்படி twitter ல் இருக்கும் பயனர்கள் கொஞ்ஞம் சீரியஸானவர்கள் அவங்க fun பன்றத்துக்கு twitter ஐ பாவிப்பது குறைவு.. comment அடிச்சே காலத்த போக்கவைக்கும் facebook அ விட இந்த twitter நல்லம் தானே. இந்த twitter அ உருவாக்கினவங்க சொல்றாங்க “என்கிட நோக்கம் பயனர்களை எமது தளத்தில் முடக்கி வைப்பதல்ல” என்டு. i thing twitter is better than facebook.

vino said...

@ mohamed asfer
கடுப்பெல்லாம் இல்லீங்க. ஃபேஸ்புக் மட்டும் உயர்ந்ததென்று எங்கேயும் சொல்லவில்லை. ஃபேஸ்புக் பரவாயில்லை என்று சொன்னது வறும் Comparative study மட்டுமே. உங்களுக்கு தெரியுமா?
http://en.wikipedia.org/wiki/File:Content_of_Tweets_Graphed.png

இந்த இனைப்பில் சென்றுப் பாருங்கள். பெரும்பாலான டிவீட்டுக்கள் பிரயோசனம் அல்லாத உளரல்களும், அனைவருக்கும் தேவையான செய்திகள் போன்றவை வெறும் 4 விழுக்காடு மட்டுமே.
அறட்டை கூட அடிக்கலாம். அதற்கு ஏன் 140 எழுத்துக்களுக்குள் கட்டுப்படுத்திக்கொள்ள வேண்டும். இதற்கு ஃபேஸ்புக், ஆர்குட் பரவாயில்லை என்பது போலத் தான் சொல்லி இருக்கிறேன்.

"தாரிஸன் " said...

நான் நெனச்சேன்.. நீங்க சொல்லிடீங்க ...


.

.

.

.


எப்புடி.........?

Admin said...

வாங்க தாசிஸ் அரூண். எல்லாம் அப்புடி தான்!
அதிருக்கட்டும், அதுக்கு ஏங்க இவ்வளவு இடத்த புடிச்சிக்கிட்டீங்க? விட்டா பட்டா போட்டு கட்டடம் கட்டிடுவீங்க போலருக்கே?

சும்மா உல்லல்லாய்க்கு சொன்னேன்.. தொடர்ந்து வாங்க!

Post a Comment

பட்டதை பட்-னு சொல்லிடுங்க -

Blog Archive